திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து ப-ரை. உம்பர்கட்கு அரசே - தேவர்களுக்கு அரசனே, ஒழிவு அற நிறைந்த யோகமே - நீக்கமற எங்கும் வியாபித்த கலப்புடைப் பொருளே, ஊற்றையேன் தனக்கு வம்பு என பழுத்து - மனக் குற்றமுடைய அடியேன் பொருட்டு இப்புதுமை இருந்தவாறென்னே என்று கண்டோர் சொல்லும் வண்ணம் அருள் கனிந்து வலிய எழுந்தருளி வந்து, என் குடி முழுது ஆண்டு - என் குடும்பத்தினர் எல்லோரையும் உய்வித்து, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே - இவ் வுலக வாழ்வு நீங்கப் பேரின்ப வாழ்வு வாழச் செய்த அமுதம் போன்றவனே, செம் பொருள் துணிவே - செம்பொருளாகத் துணி யப்படுபவனே, சீர் உடை கழலே - சிறப்புப் பொருந்திய வீரக்கழல் அணிந்த திருவடியையுடையவனே, செல்வமே - அழிவற்ற வீடு பேற்றுச் செல்வத்தையுடையவனே, சிவபெருமானே - சிவபெரு மானே, எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன்- அடியோங் களின் உய்வீன் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன், இனி எங்கு எழுந்தருள்வது - இனி நீ என்னை விட்டு எங்கே செல்வது? sout not SAC தேவர்கட்கரசனே, எங்கும் நீக்கமற நிறைந்த யோகமே, அடி யேன் பொருட்டு வம்பெனப் பழுத்து என் குடும்பத்தினர் எல் லோரையும் ஆண்டு இவ்வுலக வாழ்வு நீங்கப் பேரின்ப வாழ்வு வாழச் செய்த அமுதம் போன்றவனே, செம்பொருளாகத் துணியப் படுபவனே, சிறப்புப் பொருந்திய வீரக்கழல் அணிந்த திருவடியை யுடையவனே, செல்வமே, சிவபெருமானே, எங்கள் உய்வின் பொருட்டு உன்னைச் சிக்கெனப்பிடித்தேன்; இனி நீ எங்கு எழுந்த ருள்வது என்பதாம். 1153 உம்பர் - மேலிடம். அது ஆகுபெயராய்த் தேவர்களை உணர்த் தியது. இறைவன் எவ்விடங்களிலும் நீங்குதலில்லாமல் நிறைந் திருத்தலின் 'ஒழிவற நிறைந்த' என்றார். இதனை, "எவ்விடத்தும் உள்ளான் தன்னை" 224-3 "எவ்விடத்தும் நீ யல்லாதில்லையென்று' 275-8 "ஒழிவற நின்றெங்கும் உலப்பிலான் காண்' 298-6 "மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால விகம்பாப் மற்றுமாகிப் பரந்தானை" 281-6 என அப்பர்சுவாமிகளும், "எங்குமாகி நின்றானும்" "எங்குமாயிருப்பார் இவர் தன்மை அறிவாரார்" 103 142-6 371-7
பிடித்தபத்து - ரை . உம்பர்கட்கு அரசே - தேவர்களுக்கு அரசனே ஒழிவு அற நிறைந்த யோகமே - நீக்கமற எங்கும் வியாபித்த கலப்புடைப் பொருளே ஊற்றையேன் தனக்கு வம்பு என பழுத்து - மனக் குற்றமுடைய அடியேன் பொருட்டு இப்புதுமை இருந்தவாறென்னே என்று கண்டோர் சொல்லும் வண்ணம் அருள் கனிந்து வலிய எழுந்தருளி வந்து என் குடி முழுது ஆண்டு - என் குடும்பத்தினர் எல்லோரையும் உய்வித்து வாழ்வு அற வாழ்வித்த மருந்தே - இவ் வுலக வாழ்வு நீங்கப் பேரின்ப வாழ்வு வாழச் செய்த அமுதம் போன்றவனே செம் பொருள் துணிவே - செம்பொருளாகத் துணி யப்படுபவனே சீர் உடை கழலே - சிறப்புப் பொருந்திய வீரக்கழல் அணிந்த திருவடியையுடையவனே செல்வமே - அழிவற்ற வீடு பேற்றுச் செல்வத்தையுடையவனே சிவபெருமானே - சிவபெரு மானே எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன்- அடியோங் களின் உய்வீன் பொருட்டு உன்னை உறுதியாகப் பற்றியுள்ளேன் இனி எங்கு எழுந்தருள்வது - இனி நீ என்னை விட்டு எங்கே செல்வது ? sout not SAC தேவர்கட்கரசனே எங்கும் நீக்கமற நிறைந்த யோகமே அடி யேன் பொருட்டு வம்பெனப் பழுத்து என் குடும்பத்தினர் எல் லோரையும் ஆண்டு இவ்வுலக வாழ்வு நீங்கப் பேரின்ப வாழ்வு வாழச் செய்த அமுதம் போன்றவனே செம்பொருளாகத் துணியப் படுபவனே சிறப்புப் பொருந்திய வீரக்கழல் அணிந்த திருவடியை யுடையவனே செல்வமே சிவபெருமானே எங்கள் உய்வின் பொருட்டு உன்னைச் சிக்கெனப்பிடித்தேன் ; இனி நீ எங்கு எழுந்த ருள்வது என்பதாம் . 1153 உம்பர் - மேலிடம் . அது ஆகுபெயராய்த் தேவர்களை உணர்த் தியது . இறைவன் எவ்விடங்களிலும் நீங்குதலில்லாமல் நிறைந் திருத்தலின் ' ஒழிவற நிறைந்த ' என்றார் . இதனை எவ்விடத்தும் உள்ளான் தன்னை 224-3 எவ்விடத்தும் நீ யல்லாதில்லையென்று ' 275-8 ஒழிவற நின்றெங்கும் உலப்பிலான் காண் ' 298-6 மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால விகம்பாப் மற்றுமாகிப் பரந்தானை 281-6 என அப்பர்சுவாமிகளும் எங்குமாகி நின்றானும் எங்குமாயிருப்பார் இவர் தன்மை அறிவாரார் 103 142-6 371-7