திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழையனூர் மேய அத்தா ஆலங்காடா வுன்னடியார்க்கடி யேனாவேனே '' (சுந். 52 - 1) எனத் தேவாரத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது. ஆங்கு என்றது, அவரை வணங்கும் முறைமையில் என்றவாறு. அவர்க்கே பாங்காவோம் என்றது, அவர்களுக்கே உரியவர்களா வோம் என்பது. விற்க, ஒற்றிக்காக, முதலாக எல்லாவற்றிற்கும் உரியவர் களாவோம். பாங்கு -உரிமை. 520 F6 அவர்க்கே பாங்காதல் ஏதுவாக அவ்வடியாரே தமக்குக் கண வராதல் வேண்டு மென்பார், "அன்னவரே எங் கணவராவார்'' என்றனர். எமக்குத் தாம் கணவராய் அமைந்தமையால் மகிழ்ந்து கட்டளையிட்டபடியே அடியோமாய் அவ்வடியார்களுக்கும் நினக் கும் "அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்" என்றனர். பணிசெய்தல் இன்பநிலைக்கு ஏதுவாதல் "அன்பர் பணி விட்டுவிட்டால், இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே " (தாயுமா.பராபரக். - 155) பரிசே என்புழி ஏகாரம் தேற்றப்பொருட்டு. செய்யவெனையாளாக்கி இன்னவகை என்றது, யாம் வேண்டிக்கொண்ட இந்த விதமான பேறுகளை. நல்குதியேல் என்றது, நல்க வேண்டும் என்னும் பெரு விருப்புத் தோன்ற நின்றது. இப்பேறுகள் பெறவே எல்லாப்பேறு களும் பெற்றவர்களாவோம் என்பார், நல்குதியேல் என்ன குறையும் இலோம் என்றனர். "பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா வுன் பொற்கழல் ஈங்கிருக்கப் பெற்றேன் என்ன குறையுடையேன் ” (தே.நாவு. 20-4) என வருதலுங் காண்க. கன்னியர் தம்முள் பாவை நோன்பு நோற்கத் தொடங்கிய செய்துகொண்ட நியதிப்படி தோழியர்களை அவர்களின் இல்லங்கள் தோறும் புலரிக்காலத்தே சென்று துயிலெழுப்பி அழைத்துக்கொண்டு யாவரும் சேர்ந்து நீர் நிலையை யடைந்து தாங்கள் தொடங்கிய பாவை நோன்பின் முதன்மையான நோக்கங்களை இத்திருப்பாட் டில் விண்ணப்பஞ் செய்துள்ளனர். ஒரு கருமத்தைத் தொடங்கு வோர் முதலில் *சங்கல்பம் செய்து கொள்வதும், அதில் தம் நோக் கங்களை எடுத்துக் கூறுவதும் மரபாகும். இத்தகைய சங்கல்ப முறை யில் இத்திருப்பாட்டு அமைந்துள்ளது. * என்றது. சங்கல்பம் என்பது நன்றாக எண்ணித் துணிதல் இன்ன இன்ன பயன் கருதி இக்காரியத்தை இப்படிச் செய்கிறேன் எனக் கூறிக்கொள்ளுதல். 9
திருவாசக ஆராய்ச்சியுரை பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழையனூர் மேய அத்தா ஆலங்காடா வுன்னடியார்க்கடி யேனாவேனே ' ' ( சுந் . 52 - 1 ) எனத் தேவாரத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது . ஆங்கு என்றது அவரை வணங்கும் முறைமையில் என்றவாறு . அவர்க்கே பாங்காவோம் என்றது அவர்களுக்கே உரியவர்களா வோம் என்பது . விற்க ஒற்றிக்காக முதலாக எல்லாவற்றிற்கும் உரியவர் களாவோம் . பாங்கு -உரிமை . 520 F6 அவர்க்கே பாங்காதல் ஏதுவாக அவ்வடியாரே தமக்குக் கண வராதல் வேண்டு மென்பார் அன்னவரே எங் கணவராவார் ' ' என்றனர் . எமக்குத் தாம் கணவராய் அமைந்தமையால் மகிழ்ந்து கட்டளையிட்டபடியே அடியோமாய் அவ்வடியார்களுக்கும் நினக் கும் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் என்றனர் . பணிசெய்தல் இன்பநிலைக்கு ஏதுவாதல் அன்பர் பணி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே ( தாயுமா.பராபரக் . - 155 ) பரிசே என்புழி ஏகாரம் தேற்றப்பொருட்டு . செய்யவெனையாளாக்கி இன்னவகை என்றது யாம் வேண்டிக்கொண்ட இந்த விதமான பேறுகளை . நல்குதியேல் என்றது நல்க வேண்டும் என்னும் பெரு விருப்புத் தோன்ற நின்றது . இப்பேறுகள் பெறவே எல்லாப்பேறு களும் பெற்றவர்களாவோம் என்பார் நல்குதியேல் என்ன குறையும் இலோம் என்றனர் . பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா வுன் பொற்கழல் ஈங்கிருக்கப் பெற்றேன் என்ன குறையுடையேன் ( தே.நாவு . 20-4 ) என வருதலுங் காண்க . கன்னியர் தம்முள் பாவை நோன்பு நோற்கத் தொடங்கிய செய்துகொண்ட நியதிப்படி தோழியர்களை அவர்களின் இல்லங்கள் தோறும் புலரிக்காலத்தே சென்று துயிலெழுப்பி அழைத்துக்கொண்டு யாவரும் சேர்ந்து நீர் நிலையை யடைந்து தாங்கள் தொடங்கிய பாவை நோன்பின் முதன்மையான நோக்கங்களை இத்திருப்பாட் டில் விண்ணப்பஞ் செய்துள்ளனர் . ஒரு கருமத்தைத் தொடங்கு வோர் முதலில் * சங்கல்பம் செய்து கொள்வதும் அதில் தம் நோக் கங்களை எடுத்துக் கூறுவதும் மரபாகும் . இத்தகைய சங்கல்ப முறை யில் இத்திருப்பாட்டு அமைந்துள்ளது . * என்றது . சங்கல்பம் என்பது நன்றாக எண்ணித் துணிதல் இன்ன இன்ன பயன் கருதி இக்காரியத்தை இப்படிச் செய்கிறேன் எனக் கூறிக்கொள்ளுதல் . 9