திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அருளுடைச் சுடர் - தீச்சுடர் போலச் சுடுதலின்றி இரங்கியருளுந் தன்மையையுடைய சுடர். " அருளுடை அண்ணல்" (கீர்த்தி.101) "அருள் நனி சுரக்கு மமுதே" (அண்ட. 59) என அடிகள் அருளியமை யுங் காண்க. இறைவன் மிக்க இன்பம் தருதல் பற்றி 'அளிந்ததோர் கனியே' என்றார். மிக்க சுவையுடையதாய்க், காணினுங் கேட்பினும் கருதினும் இன்பத்தைத் தரும் கனியாதலின் '"ஓர் கனியே" என்றார். "அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினுங் கேட்பினும் கருதினுங் களிதரும் 1158 சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி'" 11ந்திரு; திருவிடை. மும். 10=22-4 என வருவனவுங் காண்க. ''கனியே போற்றி" (போற்றி.97) என அடிகள் பிறிதோரிடத்துங் கூறினமை அறிக. பெருந்திறல் அருந்தவர் என்றது சிவஞ னிகளை. அருந்தவத்தினும் சிறந்த ஆற்றலைத் தருவது பிறிதின்மையின் டெருந்திறலருந்தவர்' என்றார். பொருளுடைக் கலை - உண்மைப் பொருள்களையுடைய கலைகள் அவை: ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களிலும் ஈசானமந்திரத்தில் ஐந்து கலைகளும், தற்புருட மந்திரத்தில் நான்கு கலைகளும், அகோர மந்திரத்தில் எட்டுக் கலைகளும், வாமதேவ மந்திரத்தில் பதின்மூன்று கலைகளும், சத்தியோசாத மந்திரத்தில் எட்டுக் கலைகளுமாக அமைந்த முப்பத்தெட்டுக் கலைகளுமாம். இறைவனுடைய திருமேனி இக்கலைகளின் வடிவாகவே அமைந்துள்ளது. இதனை, "ஐயா றதன்மிசை எட்டுத் தலையிட்ட கம் மையில் வான்கலை மெய்யொடு பொருந்தி" (திருக்கோவை உரை) என ஆத்திரேயன் பேராசிரியர் கூறுமாற்றானுமறிக. இதனை அட்டத்தி ரிம்சத்கலாந்நியாசம் என்பர் வட நூலார். இறையனுபவம் இன்னதன் மைத்தெனப் புகழ்ந்துரைத்தற் கடங்காமையின் "புகழ்ச்சியைக் கடந்த போகமே" என்றார். யோகத்தின் பொலிவு- யோகத்தின் விளக் யோகம் சேர்க்கை. அதன் பயன் ஞானமாதலின் 'யோகத்தின் பொலிவே' என்றார். தெருள் - தெளிவு. தெளிவிடத்து - தெளிந்த அறிவு உண்டாய போது: சிந்தையில் புகுதல் - உள்ளத்தில் விளங்கித் தோன்றுதல். சிந்தையில் புகுந்த செல்வம் என்றது இறைவனை. "மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி" (நாவு. 268-2) என்பது காண்க. இருவிடத்து - இருட்டுப் பொழுதில். இறைவன் அடிகளை ஆட் கொண்டது அர்த்தயாமப் பொழுதிலாதலின் "இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்றார். இதனை, "ஆயிடைக் குடபால் வெற்பி லாதபன் கரந்து ஞாலம் பாயிருள பரந்த பின்பு கடிகையோர் பதினைந் தாகி
திருவாசக ஆராய்ச்சியுரை அருளுடைச் சுடர் - தீச்சுடர் போலச் சுடுதலின்றி இரங்கியருளுந் தன்மையையுடைய சுடர் . அருளுடை அண்ணல் ( கீர்த்தி .101 ) அருள் நனி சுரக்கு மமுதே ( அண்ட . 59 ) என அடிகள் அருளியமை யுங் காண்க . இறைவன் மிக்க இன்பம் தருதல் பற்றி ' அளிந்ததோர் கனியே ' என்றார் . மிக்க சுவையுடையதாய்க் காணினுங் கேட்பினும் கருதினும் இன்பத்தைத் தரும் கனியாதலின் ' ஓர் கனியே என்றார் . அறுசுவை யதனினும் உறுசுவை உடைத்தாய்க் காணினுங் கேட்பினும் கருதினுங் களிதரும் 1158 சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி ' 11 ந்திரு ; திருவிடை . மும் . 10 = 22-4 என வருவனவுங் காண்க . ' ' கனியே போற்றி ( போற்றி .97 ) என அடிகள் பிறிதோரிடத்துங் கூறினமை அறிக . பெருந்திறல் அருந்தவர் என்றது சிவஞ னிகளை . அருந்தவத்தினும் சிறந்த ஆற்றலைத் தருவது பிறிதின்மையின் டெருந்திறலருந்தவர் ' என்றார் . பொருளுடைக் கலை - உண்மைப் பொருள்களையுடைய கலைகள் அவை : ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களிலும் ஈசானமந்திரத்தில் ஐந்து கலைகளும் தற்புருட மந்திரத்தில் நான்கு கலைகளும் அகோர மந்திரத்தில் எட்டுக் கலைகளும் வாமதேவ மந்திரத்தில் பதின்மூன்று கலைகளும் சத்தியோசாத மந்திரத்தில் எட்டுக் கலைகளுமாக அமைந்த முப்பத்தெட்டுக் கலைகளுமாம் . இறைவனுடைய திருமேனி இக்கலைகளின் வடிவாகவே அமைந்துள்ளது . இதனை ஐயா றதன்மிசை எட்டுத் தலையிட்ட கம் மையில் வான்கலை மெய்யொடு பொருந்தி ( திருக்கோவை உரை ) என ஆத்திரேயன் பேராசிரியர் கூறுமாற்றானுமறிக . இதனை அட்டத்தி ரிம்சத்கலாந்நியாசம் என்பர் வட நூலார் . இறையனுபவம் இன்னதன் மைத்தெனப் புகழ்ந்துரைத்தற் கடங்காமையின் புகழ்ச்சியைக் கடந்த போகமே என்றார் . யோகத்தின் பொலிவு- யோகத்தின் விளக் யோகம் சேர்க்கை . அதன் பயன் ஞானமாதலின் ' யோகத்தின் பொலிவே ' என்றார் . தெருள் - தெளிவு . தெளிவிடத்து - தெளிந்த அறிவு உண்டாய போது : சிந்தையில் புகுதல் - உள்ளத்தில் விளங்கித் தோன்றுதல் . சிந்தையில் புகுந்த செல்வம் என்றது இறைவனை . மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி ( நாவு . 268-2 ) என்பது காண்க . இருவிடத்து - இருட்டுப் பொழுதில் . இறைவன் அடிகளை ஆட் கொண்டது அர்த்தயாமப் பொழுதிலாதலின் இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்றார் . இதனை ஆயிடைக் குடபால் வெற்பி லாதபன் கரந்து ஞாலம் பாயிருள பரந்த பின்பு கடிகையோர் பதினைந் தாகி