திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து 1161 MOD பிஞ்ஞகா -என் குடி முழுவதையும் ஆட்கொண்ட பிஞ்ஞகனே, எம் பெரிய பொருளே - எங்களுடைய பெரும் பொருளாயுள்ளவனே, திற விலே கண்ட காட்சியே - வெளிப்படையாகக் கண்ட காட்சிப் பொரு ளாயுள்ளவனே, அடியேன் செல்வமே - அடியேனது பெருஞ் செல்வமா யுள்ளவனே, சிவபெருமானே - சிவபெருமானே, இறவிலே உன்னை சிக் கென பிடித்தேன் முடிவாக உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னைவிட்டு எங்கு எழுந்தருள்வது? அநாதையேனாகிய என் மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு அளவில்லாத ஆனந்தத்தைத் தந்து எனது பிறவி வேரைக் களைந்து என் குடி முழுவதையும் ஆட்கொண்ட பிஞ்ஞகா. எங்கள் பெரும்பொருளாயுள்ளவனே, திறவிலே கண்ட காட்சிப் பொருளாயுள்ளவனே, அடியேன் செல்வமே, சிவபெருமானே, முடி விலே உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம். அறவை - ஒருவகைச்சார்பும் இல்லாதவன், அநாதை, இறை வன் எல்லா இடங்களிலும் இருப்பவனாயினும் அன்பால் நினைவா ரது மனத்தின்கண் விரும்பி வெளிப்பட்டருள் செய்தலின், மனமே கோயிலாக் கொண்டு" என்றார். "நினைப்பவர்தம் மனக்கோயில் கொண்டருளு மம்பலத்து நிருத்தனாரை" "பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்" நாவு 115-1 "எம்மானை எம்மனயே கோயிலாக இருந்தானை' நாவு 259.7 'இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை'' ஞான. 200-2 கழற் போதறியாத வென்னுள் குடியாக் கோயில் கொண்ட குளிர்வார் சடையெங் குழகா' எனத் தேவாரத்தும், பெரிய. திருநாவு. 174 "உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்" கூய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே" " "இதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே'' "என்மனங் கோயில் கொள் ஈசன்" எனத் திருமந்திரத்தும், சிவ மணங் கமழ விண்ட தொண்டர் மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட மாணிக்க வல்லி வில்வேள்" சுந். 26-7 725 1445 1722 1761 மீனாட்சிப்பிள்ளை.55
பிடித்தபத்து 1161 MOD பிஞ்ஞகா -என் குடி முழுவதையும் ஆட்கொண்ட பிஞ்ஞகனே எம் பெரிய பொருளே - எங்களுடைய பெரும் பொருளாயுள்ளவனே திற விலே கண்ட காட்சியே - வெளிப்படையாகக் கண்ட காட்சிப் பொரு ளாயுள்ளவனே அடியேன் செல்வமே - அடியேனது பெருஞ் செல்வமா யுள்ளவனே சிவபெருமானே - சிவபெருமானே இறவிலே உன்னை சிக் கென பிடித்தேன் முடிவாக உன்னை உறுதியாகப் பற்றினேன் இனி எங்கு எழுந்தருளுவது - இனி நீ என்னைவிட்டு எங்கு எழுந்தருள்வது ? அநாதையேனாகிய என் மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு அளவில்லாத ஆனந்தத்தைத் தந்து எனது பிறவி வேரைக் களைந்து என் குடி முழுவதையும் ஆட்கொண்ட பிஞ்ஞகா . எங்கள் பெரும்பொருளாயுள்ளவனே திறவிலே கண்ட காட்சிப் பொருளாயுள்ளவனே அடியேன் செல்வமே சிவபெருமானே முடி விலே உன்னை உறுதியாகப் பற்றினேன் இனி நீ என்னை விட்டு எங்கு எழுந்தருள்வது என்பதாம் . அறவை - ஒருவகைச்சார்பும் இல்லாதவன் அநாதை இறை வன் எல்லா இடங்களிலும் இருப்பவனாயினும் அன்பால் நினைவா ரது மனத்தின்கண் விரும்பி வெளிப்பட்டருள் செய்தலின் மனமே கோயிலாக் கொண்டு என்றார் . நினைப்பவர்தம் மனக்கோயில் கொண்டருளு மம்பலத்து நிருத்தனாரை பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் நாவு 115-1 எம்மானை எம்மனயே கோயிலாக இருந்தானை ' நாவு 259.7 ' இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை ' ' ஞான . 200-2 கழற் போதறியாத வென்னுள் குடியாக் கோயில் கொண்ட குளிர்வார் சடையெங் குழகா ' எனத் தேவாரத்தும் பெரிய . திருநாவு . 174 உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் கூய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே இதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே ' ' என்மனங் கோயில் கொள் ஈசன் எனத் திருமந்திரத்தும் சிவ மணங் கமழ விண்ட தொண்டர் மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட மாணிக்க வல்லி வில்வேள் சுந் . 26-7 725 1445 1722 1761 மீனாட்சிப்பிள்ளை .55