திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பிடித்தபத்து பாசவேரை அறுத்தற்கேதுவான பழமையான பொருளாயுள்ள உபாயத்தினைப் பற்றிக்கொள்ளும் முறைமையினை அடியனேற்கு உப தேசித்தாளி அடியேனது வழிபாட்டினை விரும்பி ஏற்றருளி என் சிந்தையுட் புகுந்து நினது திருவடியைக் காட்டியருளிய பொருளே, செழுஞ் சுடர் மூர்த்தி, செல்வமே. சிவபெருமானே, ஈசனே, உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்; இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது என்பதாம். எல்லாத் துன்பத்திற்கும் மலம் முதலாயிருத்தலின் 'பாசவேர்' என்றார். பழம் பொருள் தன்னை - பழமையான பொருளாயுள்ள உபா யத்தினை. அது அத்துவிதபாவனையும், இறைவன் பொருள்சேர் புகழ் கேட்டலும், மெய்யடியார் கூட்டமுமாகும். 'பற்றாங்கவை பற்றீ பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாள் கதியடைவோமெனிற் கெடுவீரோடி வம் மீன் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே" சதம் உயிருண்ணி.5 என அடிகள் கூறியவாறுங் காண்க. இனி 'பழம் பொருள் தன்னை' என்பதனை முன்னிலையாக்கி உரைப்பாருமுளர். அதற்குத் தன்னைப் பற்றுமாறு என்பது இயையாமை கருதிற்றிலர். பூசனை - வழிபாடு. சிந்தையுட் புகுதல் - உள்ளத்தில் இறைவன் வெளிப்படுதல். கழல்- திருவடிக்கு ஆகுபெயர். திருவடி- மெய்ஞ்ஞானம். உலக விளக்கு பேரொளி மண்டலத்தின் ஒளியுதவி பெற்று விளங்குவது; இறைவனா கிய விளக்கு அப்பேரொளி மண்டலத்திற்கும் ஒளி உதவியைச் செய் யும் இயல்பாக ஒளியையுடைய விளக்கு. மூர்த்தம் - வடிவு. மூர்த்தி - வடிவையுடையவன். விளக்கு இறைவனது சொரூப நிலையையும் செழுஞ்சுடர் மூர்த்தம் இறைவனது தடத்த நிலையையும் உணர்த்துவன வாகும். ஈசன் - எல்லாவுலகங்களையும் எல்லா அறிவினையும் எல்லா வுயிரையுமுடையவன். 541 1163 இதன்கண் 'ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க? அத்தனே அண்ட ரண்டமாய் நின்ற ஆதியே பாதும் றில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை யல்லையாய் நிற்கும் எத்தனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினியே. 7
பிடித்தபத்து பாசவேரை அறுத்தற்கேதுவான பழமையான பொருளாயுள்ள உபாயத்தினைப் பற்றிக்கொள்ளும் முறைமையினை அடியனேற்கு உப தேசித்தாளி அடியேனது வழிபாட்டினை விரும்பி ஏற்றருளி என் சிந்தையுட் புகுந்து நினது திருவடியைக் காட்டியருளிய பொருளே செழுஞ் சுடர் மூர்த்தி செல்வமே . சிவபெருமானே ஈசனே உன்னை உறுதியாகப் பற்றிக் கொண்டேன் ; இனி நீ என்னை விட்டு எங்கே எழுந்தருள்வது என்பதாம் . எல்லாத் துன்பத்திற்கும் மலம் முதலாயிருத்தலின் ' பாசவேர் ' என்றார் . பழம் பொருள் தன்னை - பழமையான பொருளாயுள்ள உபா யத்தினை . அது அத்துவிதபாவனையும் இறைவன் பொருள்சேர் புகழ் கேட்டலும் மெய்யடியார் கூட்டமுமாகும் . ' பற்றாங்கவை பற்றீ பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாள் கதியடைவோமெனிற் கெடுவீரோடி வம் மீன் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே சதம் உயிருண்ணி .5 என அடிகள் கூறியவாறுங் காண்க . இனி ' பழம் பொருள் தன்னை ' என்பதனை முன்னிலையாக்கி உரைப்பாருமுளர் . அதற்குத் தன்னைப் பற்றுமாறு என்பது இயையாமை கருதிற்றிலர் . பூசனை - வழிபாடு . சிந்தையுட் புகுதல் - உள்ளத்தில் இறைவன் வெளிப்படுதல் . கழல் திருவடிக்கு ஆகுபெயர் . திருவடி- மெய்ஞ்ஞானம் . உலக விளக்கு பேரொளி மண்டலத்தின் ஒளியுதவி பெற்று விளங்குவது ; இறைவனா கிய விளக்கு அப்பேரொளி மண்டலத்திற்கும் ஒளி உதவியைச் செய் யும் இயல்பாக ஒளியையுடைய விளக்கு . மூர்த்தம் - வடிவு . மூர்த்தி - வடிவையுடையவன் . விளக்கு இறைவனது சொரூப நிலையையும் செழுஞ்சுடர் மூர்த்தம் இறைவனது தடத்த நிலையையும் உணர்த்துவன வாகும் . ஈசன் - எல்லாவுலகங்களையும் எல்லா அறிவினையும் எல்லா வுயிரையுமுடையவன் . 541 1163 இதன்கண் ' ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்பதனால் முத்திக்கலப்புரைத்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க ? அத்தனே அண்ட ரண்டமாய் நின்ற ஆதியே பாதும் றில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை யல்லையாய் நிற்கும் எத்தனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினியே . 7