திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு பொருட்டு நரிகள் எல்லாவற்றையும் பெரிய குதிரைகளாக்கிக் கொணர்ந்து பாண்டிய மன்னனுக்குக் கொடுத்த வகை,உன் பேர் அருள் அன்றே -உனது பெரிய அருட் செயலல்லவா? அதனை என் என்பேன். 1169 இரும்பை ஒத்த வலிய மனத்தையுடைய என்னை நில் பால் இழுத்து இழுத்து என் எலும்புகளையும் உருகச் செய்து, திருவடிகள் தருகின்ற கரும்பின் சுவை போன்ற இனிமையை எனக்குக் காண்பித்தருளினை. அன்றியும் என்பொருட்டு நரிகளெல்லாவற்றையும் குதிரைகளாக்கிக் கொணர்ந்து பாண்டிய மன்னனுக்குக் கொடுத்த வகை உனது பெரிய அருட்செயலல்லவா? அதனை என் என்பேன். இரும்பு தரு மனம் - இரும்பின் தன்மை பொருந்திய இரங்குத லற்ற கடினமனம். "என்வச மாகநில்லாத நெஞ்சாமிரும் பைக் குழைத்து" (பண்டார மும்மணி. 16) என்பதனாலறிக. ஈர்த்து ஈர்த்து என்ற அடுக்கு என்னைத் தப்பவிடாமல் நின்பால் இழுத்து என்னும் பொருள்பட நின்றது. உருக்கிக் காட்டினை என முடிக்க. கழலிணைகள் தரு கரும்பு சுவை எனக் கூட்டி கழலிணைகள் தருகின்ற கரும்பின் சுவை போன்ற இனிமையெனவுரைக்க. "கரும்பு தருகட்டியை" எனத் தேவாரத்தும் (நாவு. 246-1) காண்க. காட்டினை - முற்று. நரிகளெல்லாம் பெருங்குதிரைகளாக்கிப் பாண்டியனுக்குக் கொடுத்தது இறைவன் பேரருளுக்குத் தகவாமோ வெனின், ஆகும். என்னை? அடிகள் குதிரை கொள்வதற்குச் சென்றவிடத்தில் இறைவ னது திருவருள் வழிப்பட்டமையையும், குதிரை கொள்ளக் கொண்டு சென்ற பொருள் முழுவதும் மெய்யடியார்களுக்கும் திருப்பணிக்கும் மற்றும் தருமச் செயல்களுக்கும் செலவிட்டமையையும் ஆராய்ந்து பாண்டிய மன்னன் அடிகளை ஒறுத்தமையும், பொருளை மீளத் தருமாறு வருத்தியமையும் நீதியாகாமையால் அதனை அவனுக்கு உணர்த்து மாறே இறைவன் நரிகளைக் குதிரையாக்கிக் கொடுத்தமையும் பின்பு அவற்றை நரிகளாக மாறும் வண்ணம் செய்தமையும் நிகழ்ந்தனவாத லின் என்க. இதன்கண் பெருங்குதிரையாக்கிய ஆறு உன் பேரருட் செயல் அல்லவா? அதனை என்னென்பேன் என்பதனால் சுட்டறிவொழித்தல் என் னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 1 545 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே யுடையானே யடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாவென்னக் கண்ணார வுய்ந்தவா றன்றேயுன் கழல்கண்டே. 104
திருவேசறவு பொருட்டு நரிகள் எல்லாவற்றையும் பெரிய குதிரைகளாக்கிக் கொணர்ந்து பாண்டிய மன்னனுக்குக் கொடுத்த வகை உன் பேர் அருள் அன்றே -உனது பெரிய அருட் செயலல்லவா ? அதனை என் என்பேன் . 1169 இரும்பை ஒத்த வலிய மனத்தையுடைய என்னை நில் பால் இழுத்து இழுத்து என் எலும்புகளையும் உருகச் செய்து திருவடிகள் தருகின்ற கரும்பின் சுவை போன்ற இனிமையை எனக்குக் காண்பித்தருளினை . அன்றியும் என்பொருட்டு நரிகளெல்லாவற்றையும் குதிரைகளாக்கிக் கொணர்ந்து பாண்டிய மன்னனுக்குக் கொடுத்த வகை உனது பெரிய அருட்செயலல்லவா ? அதனை என் என்பேன் . இரும்பு தரு மனம் - இரும்பின் தன்மை பொருந்திய இரங்குத லற்ற கடினமனம் . என்வச மாகநில்லாத நெஞ்சாமிரும் பைக் குழைத்து ( பண்டார மும்மணி . 16 ) என்பதனாலறிக . ஈர்த்து ஈர்த்து என்ற அடுக்கு என்னைத் தப்பவிடாமல் நின்பால் இழுத்து என்னும் பொருள்பட நின்றது . உருக்கிக் காட்டினை என முடிக்க . கழலிணைகள் தரு கரும்பு சுவை எனக் கூட்டி கழலிணைகள் தருகின்ற கரும்பின் சுவை போன்ற இனிமையெனவுரைக்க . கரும்பு தருகட்டியை எனத் தேவாரத்தும் ( நாவு . 246-1 ) காண்க . காட்டினை - முற்று . நரிகளெல்லாம் பெருங்குதிரைகளாக்கிப் பாண்டியனுக்குக் கொடுத்தது இறைவன் பேரருளுக்குத் தகவாமோ வெனின் ஆகும் . என்னை ? அடிகள் குதிரை கொள்வதற்குச் சென்றவிடத்தில் இறைவ னது திருவருள் வழிப்பட்டமையையும் குதிரை கொள்ளக் கொண்டு சென்ற பொருள் முழுவதும் மெய்யடியார்களுக்கும் திருப்பணிக்கும் மற்றும் தருமச் செயல்களுக்கும் செலவிட்டமையையும் ஆராய்ந்து பாண்டிய மன்னன் அடிகளை ஒறுத்தமையும் பொருளை மீளத் தருமாறு வருத்தியமையும் நீதியாகாமையால் அதனை அவனுக்கு உணர்த்து மாறே இறைவன் நரிகளைக் குதிரையாக்கிக் கொடுத்தமையும் பின்பு அவற்றை நரிகளாக மாறும் வண்ணம் செய்தமையும் நிகழ்ந்தனவாத லின் என்க . இதன்கண் பெருங்குதிரையாக்கிய ஆறு உன் பேரருட் செயல் அல்லவா ? அதனை என்னென்பேன் என்பதனால் சுட்டறிவொழித்தல் என் னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 1 545 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே யுடையானே யடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாவென்னக் கண்ணார வுய்ந்தவா றன்றேயுன் கழல்கண்டே . 104