திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1173 திருவேசறவு தெய்வங்கள். ஏத்தாது என்னும் வினையெச்சம் நினைந்து என்னும் வினையொடு முடியும். அச்சோ - அதிசயக் குறிப்பிடைச் சொல். இதனை அச்சோப் பதிகத்தாலுங் காண்க. உன் திறம் என்றது இறை வனது இறைமைக் குணங்களை. என் சித்தத்தாறு-என் கருத்தின் வண்ணம். உய்ந்தவாறு ஆச்சரியமாகும் என ஒரு சொல் வருவித்து முடிக்க. அன்றே - அசை. உய்ந்தவாறு என்பதனை உய்வித்தவாறு எனவும், நினைந்து என்பதனை நினைவித்து எனவும் பொருள் கொள்க. இதன்கண் "என் சித்தத்தாறு உய்ந்தவாறன்றே யுன்றிற நினைந்தே" என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 548 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேனெம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 4 ப-ைர. கலை ஞானம் கற்று அறியேன் - மெய்ஞ்ஞான அறிவு நூல்களைப் படித்தறியேன், கசிந்து உருகேன் - அன்பினால் நின்னை நினைந்து மனம் கசிந்து உருகமாட்டேன், ஆயிடினும் - அங்ஙனமானா லும், மற்று பிற தெய்வம் அறியேன் - நின்னையன்றி பிற தெய்வங்களை யும் அறியமாட்டேன், வாக்கு இயலால் - நின் அருள் வாக்காகிய உப தேசத்தினால், வார்கழல் வந்து உற்று இறுமாந்து இருந்தேன் - நினது நீண்ட வீரக்கழல் அணிந்த திருவடிகளை வந்து அடைந்து இன்பத்தால் இறுமாந்திருந்தேன், எம்பெருமான் - எங்கள் தலைவனே, அடியேற்கு நின் பொன் அருள் - அடியேனுக்கு நினது பொன் போன்ற அரிய திருவருளை நல்கியது. நாய்க்கு பொன் தவிசு இடும் ஆறு அன்றே. இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய பொன் இருக்கையை இட்ட முறைமை போல்வதன்றோ. கலைஞானம் கற்றறியேன், மனம் கசிந்துருகேன்; ஆயினும் நின் வாக்கியலால் வேறு தெய்வங்களை அறியேனாய் நினது திருவடிகளை வந்தடைந்து இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே, அடியேற்கு நினது திருவருளை நல்கியது இழிவுடைய நாய்க்கு உயர்ந்த பொன் இருக்கையை இட்ட முறை போன்றதன்றோ. நின் திருவருட் பெருமையை என்னென்பேன். கலைஞானம் என்பதை ஞானக்கலை என மாற்றி இறை உலகு உயிர் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களைக் கூறுகின்ற உண்மை நூல் எனக் கொள்க: கலைஞானம் கற்றறியேன் கசிந்துருகேன்
1173 திருவேசறவு தெய்வங்கள் . ஏத்தாது என்னும் வினையெச்சம் நினைந்து என்னும் வினையொடு முடியும் . அச்சோ - அதிசயக் குறிப்பிடைச் சொல் . இதனை அச்சோப் பதிகத்தாலுங் காண்க . உன் திறம் என்றது இறை வனது இறைமைக் குணங்களை . என் சித்தத்தாறு - என் கருத்தின் வண்ணம் . உய்ந்தவாறு ஆச்சரியமாகும் என ஒரு சொல் வருவித்து முடிக்க . அன்றே - அசை . உய்ந்தவாறு என்பதனை உய்வித்தவாறு எனவும் நினைந்து என்பதனை நினைவித்து எனவும் பொருள் கொள்க . இதன்கண் என் சித்தத்தாறு உய்ந்தவாறன்றே யுன்றிற நினைந்தே என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 548 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேனெம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே . 4 -ைர . கலை ஞானம் கற்று அறியேன் - மெய்ஞ்ஞான அறிவு நூல்களைப் படித்தறியேன் கசிந்து உருகேன் - அன்பினால் நின்னை நினைந்து மனம் கசிந்து உருகமாட்டேன் ஆயிடினும் - அங்ஙனமானா லும் மற்று பிற தெய்வம் அறியேன் - நின்னையன்றி பிற தெய்வங்களை யும் அறியமாட்டேன் வாக்கு இயலால் - நின் அருள் வாக்காகிய உப தேசத்தினால் வார்கழல் வந்து உற்று இறுமாந்து இருந்தேன் - நினது நீண்ட வீரக்கழல் அணிந்த திருவடிகளை வந்து அடைந்து இன்பத்தால் இறுமாந்திருந்தேன் எம்பெருமான் - எங்கள் தலைவனே அடியேற்கு நின் பொன் அருள் - அடியேனுக்கு நினது பொன் போன்ற அரிய திருவருளை நல்கியது . நாய்க்கு பொன் தவிசு இடும் ஆறு அன்றே . இழிவுடைய நாய்க்கு உயர்வுடைய பொன் இருக்கையை இட்ட முறைமை போல்வதன்றோ . கலைஞானம் கற்றறியேன் மனம் கசிந்துருகேன் ; ஆயினும் நின் வாக்கியலால் வேறு தெய்வங்களை அறியேனாய் நினது திருவடிகளை வந்தடைந்து இறுமாந்து இருந்தேன் ; எம்பெருமானே அடியேற்கு நினது திருவருளை நல்கியது இழிவுடைய நாய்க்கு உயர்ந்த பொன் இருக்கையை இட்ட முறை போன்றதன்றோ . நின் திருவருட் பெருமையை என்னென்பேன் . கலைஞானம் என்பதை ஞானக்கலை என மாற்றி இறை உலகு உயிர் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களைக் கூறுகின்ற உண்மை நூல் எனக் கொள்க : கலைஞானம் கற்றறியேன் கசிந்துருகேன்