திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவேசறவு ப-ரை. எம்பெருமானே - எங்கள் தலைவனே! மூத்தானே-உலகு உயிர்களுக்கெல்லாம் மூத்தவனே, மூவாத முதலானே - மூப்படை யாத முதலாயுள்ளவனே, முடிவு இல்லா ஓத்தானே - இறுதியில்லாத மறை நூலையுடையவனே, பொருளானே - அம்மறையின் பொருளா யுள்ளவனே, உண்மையுமாய் இன்மையுமாய் பூத்தானே - மெய்யர்க்கு மெய்யாயும் பொய்யர்க்குப் பொய்யாயும் விரிந்தவனே, இங்கு புகுந்து புரள்வேனை - இவ்வுலகிற் பிறந்து உலக வாழ்வில் திளைக்கும் இயல் புடைய என்னை, கருணையினால் நீ பேர்த்து ஆண்ட ஆறு அன்றே - திரு வருளினாலே அந்நிலையினின்றும் மீட்டு ஆட்கொண்ட எளிய தன்மை நின் பேரருளல்லவா? 1177 எம்பெருமானே!மூத்தானே,மூவாத முதலானே, முடிவற்ற மறை நூலையுடையவனே, அம்மறையின் பொருளாயுள்ளவனே, உண்மையு மாய் இன்மையுமாய் விரிந்தவனே, இவ்வுலகிற் பிறந்து புரள்வேனாகிய என்னை நின் கருணையினால் அந்நிலையினின்றும் மீட்டு ஆட்கொண்டரு ளிய முறைமை நின் பேரருளல்லவா? உலகு உயிர்களை ஐந்தொழிற்படுத்தும் முதன்மை பற்றி இறை வனை 'மூத்தான்' என்றார். 'மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே'' (தே. 257-1) என அப்பர் வாக்காலுமறிக. முதல்லனாயுள்ள இறை வன் மூத்தவனாயினும் மூப்படையாதவனாதலின் 'மூவாத முதலானே' என்றார். "மூப்பான் இளையான்'' (கோவை 31 2 உரை) எனல் காண்க. முடிவில்லா என்னும் அடைமொழி ஒத்துக்கும் அதனையுடையானுக் கும் இயையும். பொருள் - அம்மறைநூலின் பொருள். இனி, ஓத்தான் பொருளான் என்பதற்கு சத்தப்பிரபஞ்சமும் அர்த்தப் பிரபஞ்சமும் ஆனவன் எனவும் உரைக்கலாம். "மறையுமாய் மறையின் பொருளு மாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே" (கோயிற்.5) என அடிகள் அருளினார். பூத்தல் - விரிதல் என்றது இறைவனுடைய வியா பகம். விரிவு மெய்யர்க்கும் பொய்யர்க்கும் ஒரு தன்மைத்தாயினும் பொய்யர்க்கு வெளிப்பட்டிலாமையான்" 'இன்மையுமாய்" என்றார். "பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யை" (திருப்பொற். 12) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. புரள்தல் - திளைத்தல். பேர்த்து - மீட்டு. ஏ அசை. அன்றே என்பதற்கு ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருள் அல்லவா என உரைக்க. இதன் கண் 'புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீ யாண்டவாறு அன்றே" என்றதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதி கப் பொருள் புலப்படுமாறு காண்க. 8
திருவேசறவு - ரை . எம்பெருமானே - எங்கள் தலைவனே ! மூத்தானே - உலகு உயிர்களுக்கெல்லாம் மூத்தவனே மூவாத முதலானே - மூப்படை யாத முதலாயுள்ளவனே முடிவு இல்லா ஓத்தானே - இறுதியில்லாத மறை நூலையுடையவனே பொருளானே - அம்மறையின் பொருளா யுள்ளவனே உண்மையுமாய் இன்மையுமாய் பூத்தானே - மெய்யர்க்கு மெய்யாயும் பொய்யர்க்குப் பொய்யாயும் விரிந்தவனே இங்கு புகுந்து புரள்வேனை - இவ்வுலகிற் பிறந்து உலக வாழ்வில் திளைக்கும் இயல் புடைய என்னை கருணையினால் நீ பேர்த்து ஆண்ட ஆறு அன்றே - திரு வருளினாலே அந்நிலையினின்றும் மீட்டு ஆட்கொண்ட எளிய தன்மை நின் பேரருளல்லவா ? 1177 எம்பெருமானே ! மூத்தானே மூவாத முதலானே முடிவற்ற மறை நூலையுடையவனே அம்மறையின் பொருளாயுள்ளவனே உண்மையு மாய் இன்மையுமாய் விரிந்தவனே இவ்வுலகிற் பிறந்து புரள்வேனாகிய என்னை நின் கருணையினால் அந்நிலையினின்றும் மீட்டு ஆட்கொண்டரு ளிய முறைமை நின் பேரருளல்லவா ? உலகு உயிர்களை ஐந்தொழிற்படுத்தும் முதன்மை பற்றி இறை வனை ' மூத்தான் ' என்றார் . ' மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே ' ' ( தே . 257-1 ) என அப்பர் வாக்காலுமறிக . முதல்லனாயுள்ள இறை வன் மூத்தவனாயினும் மூப்படையாதவனாதலின் ' மூவாத முதலானே ' என்றார் . மூப்பான் இளையான் ' ' ( கோவை 31 2 உரை ) எனல் காண்க . முடிவில்லா என்னும் அடைமொழி ஒத்துக்கும் அதனையுடையானுக் கும் இயையும் . பொருள் - அம்மறைநூலின் பொருள் . இனி ஓத்தான் பொருளான் என்பதற்கு சத்தப்பிரபஞ்சமும் அர்த்தப் பிரபஞ்சமும் ஆனவன் எனவும் உரைக்கலாம் . மறையுமாய் மறையின் பொருளு மாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே ( கோயிற் .5 ) என அடிகள் அருளினார் . பூத்தல் - விரிதல் என்றது இறைவனுடைய வியா பகம் . விரிவு மெய்யர்க்கும் பொய்யர்க்கும் ஒரு தன்மைத்தாயினும் பொய்யர்க்கு வெளிப்பட்டிலாமையான் ' இன்மையுமாய் என்றார் . பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யை ( திருப்பொற் . 12 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . புரள்தல் - திளைத்தல் . பேர்த்து - மீட்டு . அசை . அன்றே என்பதற்கு ஆட்கொண்டருளிய முறைமை நின் பேரருள் அல்லவா என உரைக்க . இதன் கண் ' புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீ யாண்டவாறு அன்றே என்றதனால் சுட்டறிவொழித்தல் என்னும் பதி கப் பொருள் புலப்படுமாறு காண்க . 8