திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குலாப்பத்து சைவாசாரியனாகிய இறைவனுக்கு, என் புன் தலையால் ஆள் செய் குலா - எனது புல்லிய தலையினால் அடிமைத்தொண்டு செய்தலால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டக் கூத்து, தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும். 1199 பாழான வயலினை உழுது பயன் பெறாதேனாய்க் கிடக்கின்ற அடியேனுக்கு முற்பிறப்பிற் செய்த தவ விசேடத்தால் துணியிற் பொதிந்து வைத்த பொற்றிரள் எதிர்ப்பட்டு, ஆதி சைவாசாரிய னாகிய இறைவனுக்கு என் தலையினால் அடிமைத்தொண்டு செய்த லால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டக் கூத்து தில்லை ஆண் டவனைப் பற்றியதாகும் என்பதாம். என பாழ்ச்செய் - எங்ஙனம் செய்கை செய்யினும் விளைதலில்லாத வயல் நிலம். விளாவுதல் - உழுதல், 'நுகமின்றி விளாக் கைத்து (அதிசயப் 8) என்பதிலும் இப்பொருளில் வந்தது. பாழ்ச் செய் விளாவி பயனிலியாய்க் கிடப்பேற்கு என்றது உடம்பினாற் பெற வேண்டிய பயனைப் பெறமாட்டாது பயனில்லாத பிறப்புடையனாய்க் கிடக்கும் எனக்கு என்றவாறு, நேர்படல் - எதிர்ப்படல் ‘‘ ஆணை யாஞ் சிவத்தைச் சார வணைபவர் போல வையர், நீணிலை மலையை யேறி நேர்படச் செல்லும் போதில்" (பெரிய கண்ணைப்ப. 103) வருவனவற்றாலுமறிக. நேர்பட - எதிர்ப்பட: எந்தப்பேற்றி னைப் பெறுதற்கு அவதரித்தனரோ அதனைப்பெற எதிர்ப்படுதல் என்பது உணர்த்தும் நேர்படுதல் என்னுஞ் சொல். ஈண்டு நேர் பட்ட வழிப்பெறும் பயனைப் பெற என்ற பொருளில் வந்தது. கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு என்பது இங்கு வருதல் காண்க. நேர்பட்டு என்பதனை சைவன் என்பதனோடு முடிக்க: தாமரைத்தாள் என மாறிக் கூட்டுக. சைவனுக்கு என்றது ஆதி சைவ சிவாசாரியனாய் இறைவன் திருவேடங் கொண்டதனைக் குறித்ததாகும். இவ்வரலாற்றினை "ஐயாறதனிற் சைவனாகியும் என்பதன் உரையிற் காண்க: ஆள் - அடிமைத்தொண்டு. 'என்னைத் தன் மொய்கழற்காட், செய்யென்பதே செய்தவன்' (கோவை 277) என வருதல் காண்க. இதன்கண். 'ஆட் செய் குவாத் தில்லை யாண்டானைக் கொண் டன்று' என்பதனால் அனுபவமிடையீடு படாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 9
குலாப்பத்து சைவாசாரியனாகிய இறைவனுக்கு என் புன் தலையால் ஆள் செய் குலா - எனது புல்லிய தலையினால் அடிமைத்தொண்டு செய்தலால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டக் கூத்து தில்லை ஆண்டானை கொண்டன்று - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற ஆண்டவனைப் பற்றியதாகும் . 1199 பாழான வயலினை உழுது பயன் பெறாதேனாய்க் கிடக்கின்ற அடியேனுக்கு முற்பிறப்பிற் செய்த தவ விசேடத்தால் துணியிற் பொதிந்து வைத்த பொற்றிரள் எதிர்ப்பட்டு ஆதி சைவாசாரிய னாகிய இறைவனுக்கு என் தலையினால் அடிமைத்தொண்டு செய்த லால் உளதாகும் ஆனந்தக் கொண்டாட்டக் கூத்து தில்லை ஆண் டவனைப் பற்றியதாகும் என்பதாம் . என பாழ்ச்செய் - எங்ஙனம் செய்கை செய்யினும் விளைதலில்லாத வயல் நிலம் . விளாவுதல் - உழுதல் ' நுகமின்றி விளாக் கைத்து ( அதிசயப் 8 ) என்பதிலும் இப்பொருளில் வந்தது . பாழ்ச் செய் விளாவி பயனிலியாய்க் கிடப்பேற்கு என்றது உடம்பினாற் பெற வேண்டிய பயனைப் பெறமாட்டாது பயனில்லாத பிறப்புடையனாய்க் கிடக்கும் எனக்கு என்றவாறு நேர்படல் - எதிர்ப்படல் ஆணை யாஞ் சிவத்தைச் சார வணைபவர் போல வையர் நீணிலை மலையை யேறி நேர்படச் செல்லும் போதில் ( பெரிய கண்ணைப்ப . 103 ) வருவனவற்றாலுமறிக . நேர்பட - எதிர்ப்பட : எந்தப்பேற்றி னைப் பெறுதற்கு அவதரித்தனரோ அதனைப்பெற எதிர்ப்படுதல் என்பது உணர்த்தும் நேர்படுதல் என்னுஞ் சொல் . ஈண்டு நேர் பட்ட வழிப்பெறும் பயனைப் பெற என்ற பொருளில் வந்தது . கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு என்பது இங்கு வருதல் காண்க . நேர்பட்டு என்பதனை சைவன் என்பதனோடு முடிக்க : தாமரைத்தாள் என மாறிக் கூட்டுக . சைவனுக்கு என்றது ஆதி சைவ சிவாசாரியனாய் இறைவன் திருவேடங் கொண்டதனைக் குறித்ததாகும் . இவ்வரலாற்றினை ஐயாறதனிற் சைவனாகியும் என்பதன் உரையிற் காண்க : ஆள் - அடிமைத்தொண்டு . ' என்னைத் தன் மொய்கழற்காட் செய்யென்பதே செய்தவன் ' ( கோவை 277 ) என வருதல் காண்க . இதன்கண் . ' ஆட் செய் குவாத் தில்லை யாண்டானைக் கொண் டன்று ' என்பதனால் அனுபவமிடையீடு படாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 9