திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

165. திருவெம்பாவை மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ யாட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய். 525 ப-ரை : மொய் ஆர் தடம் பொய்கை புக்கு - பூக்களின் செறிவு பொருந்திய அகற்சியையுடைய பொய்கையிற் போய், முகேர் என்ன கையால் குடைந்து குடைந்து முகேர் என்று ஒலியுண்டாகும்படி கையினால் நீரைத் துழாவி முழுகி, உன் கழல் பாடி - நினது திருவடி களைப் புகழ்ந்து பாடி, ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் - எந் தந்தையே வழி வழி அடிமைகளாகிய யாங்கள் வாழ்வடைந்தோம்; ஆர் அழல் போல் செய்யா - நிறைந்த தீப்பிழம்புபோலச் செந்நிற முடையவனே ; வெண் நீறு ஆடி - வெள்ளிய திருநீற்றினைத் திருமேனி எங்கும் அணிந்தவனே; செல்வா - பேரருட் செல்வனே, சிறு மருங்குல் மை ஆர் தட சண் மடந்தை மணவாளா - சிறிய இடையினையும் மை தீட்டப்பெற்ற அகன்ற கண்களையும் உடைய உமையம்மைக்குக் கண வனே, ஐயா! - எங்கள் தலைவரே, நீ ஆட்கொண்டு அருளும் விளை யாட்டின் - நீ அடிமைகொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், உய் வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம் - உய்யும் தகுதி யுடையார் உய்யும் வகையின் எல்லாம் உய்ந்து கதிபெற யாம் மட்டும் தவிர்ந்துள்ளோம்; எமை எய்யாமற் காப்பாய் - எங்களை இளைத்து விடாதபடி காத்தருள்வாயாக; எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற் குரிய பாவையாகிய பார்வதி தேவீ! எங்களை எய்யாமல் காத்தருள் வாயாக (என வேண்டுதல் செய்தனர்) என்பதாம். - பொய்கையிற் போய் முகேரென்னக் கையாற் குடைந்து முழுகி உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி, ஐயா! வழி வழி அடிமைகளாகிய யாங்கள் வாழ்வடைந்தோம்; ஆர் அழல் போன்ற செய்யா, வெண் ணீறாடி, செல்வா, தடங்கண் [மடந்தை மணவாளா; ஐயா ! நீ ஆட் கொண்டருளும் திருவிளையாட்டினால் உய்யும் தகுதியுடையார் உய்யும் வகையினெல்லாம் உய்ந்து கதிபெற யாம் மட்டும் தவிர்த்துள்ளோம். எம்மை இளைத்து விடாதபடி காத்தருள்வாயாக. எங்கள் வழிபாட் டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவி! எங்களை எய்யாமற் காத் தருள்வாயாக (என வேண்டுதல் செய்தனர் ) என்பதாம்.
165 . திருவெம்பாவை மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ யாட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய் . 525 - ரை : மொய் ஆர் தடம் பொய்கை புக்கு - பூக்களின் செறிவு பொருந்திய அகற்சியையுடைய பொய்கையிற் போய் முகேர் என்ன கையால் குடைந்து குடைந்து முகேர் என்று ஒலியுண்டாகும்படி கையினால் நீரைத் துழாவி முழுகி உன் கழல் பாடி - நினது திருவடி களைப் புகழ்ந்து பாடி ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் - எந் தந்தையே வழி வழி அடிமைகளாகிய யாங்கள் வாழ்வடைந்தோம் ; ஆர் அழல் போல் செய்யா - நிறைந்த தீப்பிழம்புபோலச் செந்நிற முடையவனே ; வெண் நீறு ஆடி - வெள்ளிய திருநீற்றினைத் திருமேனி எங்கும் அணிந்தவனே ; செல்வா - பேரருட் செல்வனே சிறு மருங்குல் மை ஆர் தட சண் மடந்தை மணவாளா - சிறிய இடையினையும் மை தீட்டப்பெற்ற அகன்ற கண்களையும் உடைய உமையம்மைக்குக் கண வனே ஐயா ! - எங்கள் தலைவரே நீ ஆட்கொண்டு அருளும் விளை யாட்டின் - நீ அடிமைகொண்டருளுகின்ற திருவிளையாட்டினால் உய் வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம் - உய்யும் தகுதி யுடையார் உய்யும் வகையின் எல்லாம் உய்ந்து கதிபெற யாம் மட்டும் தவிர்ந்துள்ளோம் ; எமை எய்யாமற் காப்பாய் - எங்களை இளைத்து விடாதபடி காத்தருள்வாயாக ; எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற் குரிய பாவையாகிய பார்வதி தேவீ ! எங்களை எய்யாமல் காத்தருள் வாயாக ( என வேண்டுதல் செய்தனர் ) என்பதாம் . - பொய்கையிற் போய் முகேரென்னக் கையாற் குடைந்து முழுகி உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி ஐயா ! வழி வழி அடிமைகளாகிய யாங்கள் வாழ்வடைந்தோம் ; ஆர் அழல் போன்ற செய்யா வெண் ணீறாடி செல்வா தடங்கண் [ மடந்தை மணவாளா ; ஐயா ! நீ ஆட் கொண்டருளும் திருவிளையாட்டினால் உய்யும் தகுதியுடையார் உய்யும் வகையினெல்லாம் உய்ந்து கதிபெற யாம் மட்டும் தவிர்த்துள்ளோம் . எம்மை இளைத்து விடாதபடி காத்தருள்வாயாக . எங்கள் வழிபாட் டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவி ! எங்களை எய்யாமற் காத் தருள்வாயாக ( என வேண்டுதல் செய்தனர் ) என்பதாம் .