திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

568 அற்புதப் பத்து ஏய்ந்த மாமல ரிட்டு முட்டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையனல் லாரொடும் தலைதடு மாறாகிப் போந்தி யான்றுயர் புகாவணம் அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி னேந்த னாய்வெளி யேயென்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 1203 2003 O ப-ரை. ஏய்ந்த மா மலர் இட்டு - வழி பாட்டிற்குப் பொருந்திய சிறந்த பூக்களைச் சாத்தி, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங் காதே - தடைப்படாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை வழிபடாமல், சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடு - சந்தனக் குழம்பு பொருந்திய தனங்களையுடைய அழகிய பெண்டிருடன் கூடி. தலைதடுமாறாகிபோந்துயான் துயர்புகாவண்ணம் நிலை தடுமாறிப்போய் யான் துயர் அடையாவண்ணம், அருள் செய்து - தடுத்தருளி, பொன் கழல் இணை காட்டி - பொன்னாலியன்ற கழலையுடைத்தாகிய திருவடி கள் இரண்டினையும் காட்டி, வேந்தனாய் வெளியே என்முன் நின்றது ஓர் அற்புதம் அறியேன் - பரமாசாரியனாய் வெளிப்படையாக என்முன் நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன். 26 2004 வழிபாட்டிற்குப் பொருந்திய சிறந்த மலர்களை இட்டுத் தடைப டாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை வழிபடாமல் மக ளிருடன் கூடித் தலைதடுமாறிப்போய் யான் துயர் அடையாவண்ணம் அருள்செய்து தன் திருவடிக ளை க் காட்டியருளிப் பரமாசாரியனாய் வெளிப்படையாக என்முன் நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம், ஏய்ந்த மாமலர் - இறைவனை அருச்சித்தற்கு உரியனவாய்ச் சிறந்த மலர்கள். முட்டாததோர் இயல்பென்றது எவ்வித இடையூறு வந் தாலும் அதனால் தடைப்படாமல் வழிபாட்டினைச் செய்யும் இயல்பு: சாத்தம் - சந்தனம். தையல் அழகு. தலை தடுமாறி என்றது உயர் நிலையடையும் நெறியினின்றும் தவறிக் கீழ்நிலையையடையும் நெறியிற் செல்லுதல். வணங்காது போந்து துயர்புகா வண்ணம் என இயை யும். அருள் செய்து என்றது இறைவன் ஆட்கொண்டமையைக் குறித்தது. இறைவன் பரமாசாரியனாய் வெளிப்பட்டு அடிகளை ஆண் டருள் செய்தானாகலின் வேந்தனாய் என்றது பரமாசாரியனாய் என்னும் பொருளில் வந்தது. ஊரும் பேருமில்லாத இறைவன் வெளிப்பட் டருள் செய்தமையின் முன்னின்றதோர் அற்புதம் என்றார்;
568 அற்புதப் பத்து ஏய்ந்த மாமல ரிட்டு முட்டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையனல் லாரொடும் தலைதடு மாறாகிப் போந்தி யான்றுயர் புகாவணம் அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி னேந்த னாய்வெளி யேயென்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே . 1203 2003 O - ரை . ஏய்ந்த மா மலர் இட்டு - வழி பாட்டிற்குப் பொருந்திய சிறந்த பூக்களைச் சாத்தி முட்டாதது ஓர் இயல்பொடும் வணங் காதே - தடைப்படாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை வழிபடாமல் சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடு - சந்தனக் குழம்பு பொருந்திய தனங்களையுடைய அழகிய பெண்டிருடன் கூடி . தலைதடுமாறாகிபோந்துயான் துயர்புகாவண்ணம் நிலை தடுமாறிப்போய் யான் துயர் அடையாவண்ணம் அருள் செய்து - தடுத்தருளி பொன் கழல் இணை காட்டி - பொன்னாலியன்ற கழலையுடைத்தாகிய திருவடி கள் இரண்டினையும் காட்டி வேந்தனாய் வெளியே என்முன் நின்றது ஓர் அற்புதம் அறியேன் - பரமாசாரியனாய் வெளிப்படையாக என்முன் நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் . 26 2004 வழிபாட்டிற்குப் பொருந்திய சிறந்த மலர்களை இட்டுத் தடைப டாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை வழிபடாமல் மக ளிருடன் கூடித் தலைதடுமாறிப்போய் யான் துயர் அடையாவண்ணம் அருள்செய்து தன் திருவடிக ளை க் காட்டியருளிப் பரமாசாரியனாய் வெளிப்படையாக என்முன் நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம் ஏய்ந்த மாமலர் - இறைவனை அருச்சித்தற்கு உரியனவாய்ச் சிறந்த மலர்கள் . முட்டாததோர் இயல்பென்றது எவ்வித இடையூறு வந் தாலும் அதனால் தடைப்படாமல் வழிபாட்டினைச் செய்யும் இயல்பு : சாத்தம் - சந்தனம் . தையல் அழகு . தலை தடுமாறி என்றது உயர் நிலையடையும் நெறியினின்றும் தவறிக் கீழ்நிலையையடையும் நெறியிற் செல்லுதல் . வணங்காது போந்து துயர்புகா வண்ணம் என இயை யும் . அருள் செய்து என்றது இறைவன் ஆட்கொண்டமையைக் குறித்தது . இறைவன் பரமாசாரியனாய் வெளிப்பட்டு அடிகளை ஆண் டருள் செய்தானாகலின் வேந்தனாய் என்றது பரமாசாரியனாய் என்னும் பொருளில் வந்தது . ஊரும் பேருமில்லாத இறைவன் வெளிப்பட் டருள் செய்தமையின் முன்னின்றதோர் அற்புதம் என்றார் ;