திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1210 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் 'எனை ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்பொருள் புலப்படு தல் காண்க. 2010 593 இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் . தப்பிலாதுபொற் கழல்களுக் கிடாது நான் தடமுலை யார்தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. பு-ரை. இப் பிறப்பினில் நான் இணைமலர் கொய்து - எடுத்த இம் மானிடப்பிறப்பில் இறைவன் திருவடிக்கு ஒப்பாகிய பூக்களைப் பறித்து, இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி - முறைப்படி திருவைந்தெழுத்தினை உச்சரித்து, தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது-தவறுதல் இல் லாமல் பொன்னாலியன்ற கழலையுடைத்தாகிய திருவடிகளுக்குச்சாத்தி வணங்காமல், நான் தட முலையார் தங்கள் - நான் பெரியதனங்களையு டைய மங்கையர்களது, மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை கருநிறம் பரந்த கண்களினால் தாக்குண்டு பயனின்றிக் கிடக்கின்ற என்னை,அப்பன் வந்து மலர் அடி இணை காட்டி - தந்தையாகிய இறை வன் வலிய எழுந்தருளி வந்து தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டினையும் காட்டியருளி, என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன். 6 எடுத்த இப்பிறப்பினில் நான் இறைவன் பூசனைக்கு இயைந்த மலர்களைக் கொய்து திருவைந்தெழுத்தினை உச்சரித்து, தப்பு இல்லா மல் திருவடிகளுக்குச் சாத்தி வணங்காமல், மங்கையரது கண்களால் ஏறுண்டு பயனின்றிக் கிடக்கின்ற என்னை, இறைவன் வலிய எழுந் தருளிவந்து தன் திருவடிகளைக் காட்டி, என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம். இணைமலர் - திருவடிகளுக்கு ஒப்பாகிய மலர். இயல்பொடும் ஐந்தெழுத்து ஓதல் - திருவைந்தெழுத்தினை ஓதுதற்குரிய முறைப்படி உச்சரித்தல். திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதுதலின் பயனை "வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே -தூயவே கம் பெருமா தேவியொடு மன்னுகயிலாயத் செம் பெருமான் ஓரஞ் செழுத்து" கயிலைபாதி 39
1210 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் ' எனை ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே ' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப்பொருள் புலப்படு தல் காண்க . 2010 593 இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் . தப்பிலாதுபொற் கழல்களுக் கிடாது நான் தடமுலை யார்தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே . பு - ரை . இப் பிறப்பினில் நான் இணைமலர் கொய்து - எடுத்த இம் மானிடப்பிறப்பில் இறைவன் திருவடிக்கு ஒப்பாகிய பூக்களைப் பறித்து இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி - முறைப்படி திருவைந்தெழுத்தினை உச்சரித்து தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது - தவறுதல் இல் லாமல் பொன்னாலியன்ற கழலையுடைத்தாகிய திருவடிகளுக்குச்சாத்தி வணங்காமல் நான் தட முலையார் தங்கள் - நான் பெரியதனங்களையு டைய மங்கையர்களது மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை கருநிறம் பரந்த கண்களினால் தாக்குண்டு பயனின்றிக் கிடக்கின்ற என்னை அப்பன் வந்து மலர் அடி இணை காட்டி - தந்தையாகிய இறை வன் வலிய எழுந்தருளி வந்து தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டினையும் காட்டியருளி என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் . 6 எடுத்த இப்பிறப்பினில் நான் இறைவன் பூசனைக்கு இயைந்த மலர்களைக் கொய்து திருவைந்தெழுத்தினை உச்சரித்து தப்பு இல்லா மல் திருவடிகளுக்குச் சாத்தி வணங்காமல் மங்கையரது கண்களால் ஏறுண்டு பயனின்றிக் கிடக்கின்ற என்னை இறைவன் வலிய எழுந் தருளிவந்து தன் திருவடிகளைக் காட்டி என்னை ஆட்கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம் . இணைமலர் - திருவடிகளுக்கு ஒப்பாகிய மலர் . இயல்பொடும் ஐந்தெழுத்து ஓதல் - திருவைந்தெழுத்தினை ஓதுதற்குரிய முறைப்படி உச்சரித்தல் . திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதுதலின் பயனை வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே -தூயவே கம் பெருமா தேவியொடு மன்னுகயிலாயத் செம் பெருமான் ஓரஞ் செழுத்து கயிலைபாதி 39