திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1213 அற்புதப்பத்து ப.ரை. நான் பொச்சையான இப்பிறவியிற் கிடந்து - நான் கரிந்த காடு போன்ற இப்பிறவியில் அகப்பட்டு, புழுத்து அலை நாய் போல - உடல் புழுத்து அலைந்து திரிகின்ற நாயைப் போல, ஏழையர்க்கே இச்சையான செய்து - பெண்களுக்கே அவர் விரும்பியனவற்றைச் செய்துகொண்டு, அங்கு இணங்கியே திரிவேனை - அப்படி அவர்களோடு கூடி அலைந்து திரிகின்ற என்னை, அச்சன்- எனது தந்தையாகிய இறைவன், இச்சகத்து அரி அயனும் எட்டாத விரை மலர் காட்டி - இவ்வுலகத்தில் திருமாலும் பிரமனும் எட்டி அறியமுடியாத தனது மணம் பொருந்திய தாமரைமலர் போன்ற திருவடிகளைக் காட்டியருளி என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே - யாதுமோர் பொருளல்லா என்னையும் ஆட் கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன். நான் காடுபோன்ற பிறவியில் அகப்பட்டுப் புழுத்தலை நாய் போல மகளிர்க்கே அவர் விரும்பினவற்றைச் செய்து கொண்டு அவர்களோடு கூடி அலைந்து திரிகின்ற என்னை எனது தந்தையா கிய இறைவன் இவ்வுலகத்தில் திருமாலும் பிரமனும் அறியமுடி யாத தனது திருவடிகளைக் காட்டியருளி என்னை ஆண்டு கொண்டு அருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம். பொச்சை - கரிந்த காடு. இது நீரும் நிழலும் வழியுமின்றி அலைந்து திரிதற்கிடமானது. அதுபோல இப்பிறப்பு உய்யுநெறி இன்னதென்று அறிய முடியாத துன்பம் நிறைந்தது என்பார். 'பொச்சையான இப்பிறவியிற் கிடந்து' என்றார். நாய்போலத் திரி வேனை என இயையும். ஏழையர் - பெண்கள். ஏழையர்க் கே என் னும் ஏகாரம் மற்றெவர்க்கும் அவர் விரும்பினவற்றைச் செய்யா மையை உணர்த்தி நின்றது. அங்கு - அப்படியே. இணங்குதல்- கூடுதல். இச்சகத்துக் காட்டி என இயையும், அரி அயன் எட்டாத கழல், ''இருவரறியாவடி' [(கோவை 72) என்பதனாலறிக. முடிதேடி அறியமாட்டாத அயன் அடிதேடினும் அறியமாட்டானாதலின். அயனுமெட்டாத கழல் என்றார் ] அச்சன் - தந்தை; திசைச்சொல் (மலையாளச்சொல்). என்னையும் என்புழி உம்மை அடிகள் தாழ்த் கூறும் முறையில் இழிவு மிகுதியை உணர்த்தியது. இதன் கண் "அச்சன் என்னையுமாண்டு கொண்டருளிய அற்புத மறியேனே" என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 9
1213 அற்புதப்பத்து ப.ரை. நான் பொச்சையான இப்பிறவியிற் கிடந்து - நான் கரிந்த காடு போன்ற இப்பிறவியில் அகப்பட்டு புழுத்து அலை நாய் போல - உடல் புழுத்து அலைந்து திரிகின்ற நாயைப் போல ஏழையர்க்கே இச்சையான செய்து - பெண்களுக்கே அவர் விரும்பியனவற்றைச் செய்துகொண்டு அங்கு இணங்கியே திரிவேனை - அப்படி அவர்களோடு கூடி அலைந்து திரிகின்ற என்னை அச்சன் எனது தந்தையாகிய இறைவன் இச்சகத்து அரி அயனும் எட்டாத விரை மலர் காட்டி - இவ்வுலகத்தில் திருமாலும் பிரமனும் எட்டி அறியமுடியாத தனது மணம் பொருந்திய தாமரைமலர் போன்ற திருவடிகளைக் காட்டியருளி என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே - யாதுமோர் பொருளல்லா என்னையும் ஆட் கொண்டருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் . நான் காடுபோன்ற பிறவியில் அகப்பட்டுப் புழுத்தலை நாய் போல மகளிர்க்கே அவர் விரும்பினவற்றைச் செய்து கொண்டு அவர்களோடு கூடி அலைந்து திரிகின்ற என்னை எனது தந்தையா கிய இறைவன் இவ்வுலகத்தில் திருமாலும் பிரமனும் அறியமுடி யாத தனது திருவடிகளைக் காட்டியருளி என்னை ஆண்டு கொண்டு அருளிய அற்புதச் செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம் . பொச்சை - கரிந்த காடு . இது நீரும் நிழலும் வழியுமின்றி அலைந்து திரிதற்கிடமானது . அதுபோல இப்பிறப்பு உய்யுநெறி இன்னதென்று அறிய முடியாத துன்பம் நிறைந்தது என்பார் . ' பொச்சையான இப்பிறவியிற் கிடந்து ' என்றார் . நாய்போலத் திரி வேனை என இயையும் . ஏழையர் - பெண்கள் . ஏழையர்க் கே என் னும் ஏகாரம் மற்றெவர்க்கும் அவர் விரும்பினவற்றைச் செய்யா மையை உணர்த்தி நின்றது . அங்கு - அப்படியே . இணங்குதல் கூடுதல் . இச்சகத்துக் காட்டி என இயையும் அரி அயன் எட்டாத கழல் ' ' இருவரறியாவடி ' [ ( கோவை 72 ) என்பதனாலறிக . முடிதேடி அறியமாட்டாத அயன் அடிதேடினும் அறியமாட்டானாதலின் . அயனுமெட்டாத கழல் என்றார் ] அச்சன் - தந்தை ; திசைச்சொல் ( மலையாளச்சொல் ) . என்னையும் என்புழி உம்மை அடிகள் தாழ்த் கூறும் முறையில் இழிவு மிகுதியை உணர்த்தியது . இதன் கண் அச்சன் என்னையுமாண்டு கொண்டருளிய அற்புத மறியேனே என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 9