திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1224 திருவாசக ஆராய்ச்சியுரை காயத் துள்ளமு தூறவூறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக் கணஞ் சென்னி மன்னித் திகழுமே! விடிற்யப் ப-ரை வேய தோள் உமை பங்கன் - மூங்கிலின் தன்மையை யுடையனவாகிய தோள்களையுடைய உமையம்மையை இடப்பாகத் திலுடையவனும், எங்கள் திருப்பெருந்துறை மேவினான் - எங்கள் திருப்பெருந்துறையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனுமாகிய இறை வன், மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடாவகை நல்கினான் - மயக்கத்தைத் தருகின்ற உலகவாழ்க்கையை நிலையுடைய தென்று கருதி அதனைப் பொருட்படுத்தாத வகையில் எனக்குத் தத் துவஞானத்தினைத் தந்தருளி, காயத்துள் அமுது ஊற ஊற - உடம்பினுள் அமுதம் போன்ற ஆனந்தம் இடையறாது பெருகும் வண்ணம், நீ கண்டு கொள் என்று காட்டிய - நீ அறிந்து கொள் என்று காட்டியருளிய, சேய மா மலர் சே அடிக் கண் -செம்மை யாகிய பெருமை பொருந்திய தரமரை மலர் போலும் சிவந்த திரு வடியின் கீழே, நம் சென்னி மன்னி திகழும் - நமது தலைகள் நிலை யாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும். உமையம்மை பங்கனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியி ருப்பவனுமாகிய எங்கள் இறைவன் மயக்கத்தைத் தருகின்ற இவ் வுலக வாழ்க்கையை நிலையுடையதென்று மதித்திடாவகைத் தத் துவ ஞானத்தினைத் தந்தருளி, உடம்பினுள் அமுதுபோன்ற ஆனந் தம் இடையறாது பெருகும் வண்ணம் நீ அறிந்து கொள் என்று காட்டியருளிய சிவந்த திருவடியின் கீழ் நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம். மாய வாழ்க்கை - பொய் வாழ்க்கை எனினுமாம். மெய்யென்று எண்ணுதல் - நிலை பேறுடையதென எண்ணுதல். "நில்லாதவற்றை நி யின என்றுணரும் புல்லறி வாண்மை கடை" குறள் 331) என்றார் திருவள்ளுவரும். 'பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை" 11 ந் திரு முறை கோயில் நான் மணி 28-16-8 எனவும் வருவனவற்றாலுமறிக. நல்கினான் முற்றெச்சம். வேய் - மூங் கில். வேய - மூங்கிலின் தன்மையையுடைய, குறிப்பு வினைப்பெய ரெச்சம். எங்கள் என்றது அடிகள் தம்மை இறைவன் ஆட்கொண்ட திருடபெருந்துறையையும் இறைவனையும் உரிமை பற்றிக்கூறியதாகும்.
1224 திருவாசக ஆராய்ச்சியுரை காயத் துள்ளமு தூறவூறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக் கணஞ் சென்னி மன்னித் திகழுமே ! விடிற்யப் - ரை வேய தோள் உமை பங்கன் - மூங்கிலின் தன்மையை யுடையனவாகிய தோள்களையுடைய உமையம்மையை இடப்பாகத் திலுடையவனும் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் - எங்கள் திருப்பெருந்துறையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனுமாகிய இறை வன் மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடாவகை நல்கினான் - மயக்கத்தைத் தருகின்ற உலகவாழ்க்கையை நிலையுடைய தென்று கருதி அதனைப் பொருட்படுத்தாத வகையில் எனக்குத் தத் துவஞானத்தினைத் தந்தருளி காயத்துள் அமுது ஊற ஊற - உடம்பினுள் அமுதம் போன்ற ஆனந்தம் இடையறாது பெருகும் வண்ணம் நீ கண்டு கொள் என்று காட்டிய - நீ அறிந்து கொள் என்று காட்டியருளிய சேய மா மலர் சே அடிக் கண் -செம்மை யாகிய பெருமை பொருந்திய தரமரை மலர் போலும் சிவந்த திரு வடியின் கீழே நம் சென்னி மன்னி திகழும் - நமது தலைகள் நிலை யாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் . உமையம்மை பங்கனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியி ருப்பவனுமாகிய எங்கள் இறைவன் மயக்கத்தைத் தருகின்ற இவ் வுலக வாழ்க்கையை நிலையுடையதென்று மதித்திடாவகைத் தத் துவ ஞானத்தினைத் தந்தருளி உடம்பினுள் அமுதுபோன்ற ஆனந் தம் இடையறாது பெருகும் வண்ணம் நீ அறிந்து கொள் என்று காட்டியருளிய சிவந்த திருவடியின் கீழ் நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம் . மாய வாழ்க்கை - பொய் வாழ்க்கை எனினுமாம் . மெய்யென்று எண்ணுதல் - நிலை பேறுடையதென எண்ணுதல் . நில்லாதவற்றை நி யின என்றுணரும் புல்லறி வாண்மை கடை குறள் 331 ) என்றார் திருவள்ளுவரும் . ' பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை 11 ந் திரு முறை கோயில் நான் மணி 28-16-8 எனவும் வருவனவற்றாலுமறிக . நல்கினான் முற்றெச்சம் . வேய் - மூங் கில் . வேய - மூங்கிலின் தன்மையையுடைய குறிப்பு வினைப்பெய ரெச்சம் . எங்கள் என்றது அடிகள் தம்மை இறைவன் ஆட்கொண்ட திருடபெருந்துறையையும் இறைவனையும் உரிமை பற்றிக்கூறியதாகும் .