திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வீட்டுலகின்கண் எம்மை வைக்கும் அப்பனாகிய இறைவனது தாமரை மலர்போலும் திருவடியின் கீழ் நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம். 420 2.6 சித்தம் - உள்ளம். உள்ளத்திற் புகுந்து ஆட்கொண்டமையை என்னாகம் உள்புகுந்தாண்டு கொண்டான்' (பூவல் 17) என் அடி கள் பிறிதோரிடத்தும் கூறுமாறு காண்க: தீவினையென்றது நல்வினை தீவினையாகிய இரண்டினையும் உணர்த்தியது. நல்வினையை தீவினை என்றது என்னையெனில், "நல்வினையும் பொன் விலங்குபோல் வீடு பேறடைவதற்குத் தடையாதல் பற்றியாகும். 'நல்வினையும் பிறத்தற் கேதுவாகலின் 'இருவினையுஞ் சேரா' என்றுங் கூறினார்.' எனப் பரி மேலழகர் உரைத்தலுங் காண்க (குறள் 5). பொற்கழல் என்றது திருப்பெருந்துறையில் இறைவன் திருவடி மலர் வடிவு அமைந்த பீடத்தினை உணர்த்தியது. பன்மலர் - பல வகைப்பூ. அவை கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ என்பன. முத்தி தந்தென்றது சீவன் முத்த நிலைமையைத் தந்து என்றவாறு; ''முத்தி வழங்கும் பிரான்" கோவை 127 "பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்பு நின்றானே" திருமந். 284 என வருவனவற்றாலுங் காண்க. இந்த மூவுலகு என்றார் சுவர்க்கம் மத்தியம் பாதலம் என்னும் மூன்றுலகங்களில் உயிர்கள் போக்கு வரவு உடைமையாதல் அறிந்தமை பற்றி. அப்புறம் என்றது இம் மூன்றுமல்லாத மீண்டு வாரா உலகமாகிய வீட்டுலகினைக் குறித்தது. அப்பால் வைத்தல் "மலவன் குரம்பையை மாற்றியம் மால் முதல் வானர்க்கப்பாற் செலவன் பர்க்கோக்குஞ் சிவன்" (கோவை 155) எனக் கூறியவாறுங்காண்க. இம் மூவுலகுக்கும் அப்புறத்து ள்ள வீட்டுலகின்கண் தம்மைவைத்தல் துணியப்பட்டதாகலின் 'அப் புறத்தெமை வைத்திடும் அத்தன்' என்றார். மூவுலகமும் அப்புறத் தெமை வைத்திடும் என்பதனை "மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந் தார் நிலமிசை நீடுவாழ்வார்" என்னும் திருக்குறளில் மிசைநிலம் - எல் லாவுலகங்களுக்கும் மேலாகிய வீட்டுலகம் எனப் பரிமேலழகியார் கூறியுள்ளமையாலும் அறியலாம். இதன்கண், ''சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே" என் பதனால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள்புலப்படுதல் காண்க
திருவாசக ஆராய்ச்சியுரை வீட்டுலகின்கண் எம்மை வைக்கும் அப்பனாகிய இறைவனது தாமரை மலர்போலும் திருவடியின் கீழ் நமது தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம் . 420 2.6 சித்தம் - உள்ளம் . உள்ளத்திற் புகுந்து ஆட்கொண்டமையை என்னாகம் உள்புகுந்தாண்டு கொண்டான் ' ( பூவல் 17 ) என் அடி கள் பிறிதோரிடத்தும் கூறுமாறு காண்க : தீவினையென்றது நல்வினை தீவினையாகிய இரண்டினையும் உணர்த்தியது . நல்வினையை தீவினை என்றது என்னையெனில் நல்வினையும் பொன் விலங்குபோல் வீடு பேறடைவதற்குத் தடையாதல் பற்றியாகும் . ' நல்வினையும் பிறத்தற் கேதுவாகலின் ' இருவினையுஞ் சேரா ' என்றுங் கூறினார் . ' எனப் பரி மேலழகர் உரைத்தலுங் காண்க ( குறள் 5 ) . பொற்கழல் என்றது திருப்பெருந்துறையில் இறைவன் திருவடி மலர் வடிவு அமைந்த பீடத்தினை உணர்த்தியது . பன்மலர் - பல வகைப்பூ . அவை கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ என்பன . முத்தி தந்தென்றது சீவன் முத்த நிலைமையைத் தந்து என்றவாறு ; ' ' முத்தி வழங்கும் பிரான் கோவை 127 பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்பு நின்றானே திருமந் . 284 என வருவனவற்றாலுங் காண்க . இந்த மூவுலகு என்றார் சுவர்க்கம் மத்தியம் பாதலம் என்னும் மூன்றுலகங்களில் உயிர்கள் போக்கு வரவு உடைமையாதல் அறிந்தமை பற்றி . அப்புறம் என்றது இம் மூன்றுமல்லாத மீண்டு வாரா உலகமாகிய வீட்டுலகினைக் குறித்தது . அப்பால் வைத்தல் மலவன் குரம்பையை மாற்றியம் மால் முதல் வானர்க்கப்பாற் செலவன் பர்க்கோக்குஞ் சிவன் ( கோவை 155 ) எனக் கூறியவாறுங்காண்க . இம் மூவுலகுக்கும் அப்புறத்து ள்ள வீட்டுலகின்கண் தம்மைவைத்தல் துணியப்பட்டதாகலின் ' அப் புறத்தெமை வைத்திடும் அத்தன் ' என்றார் . மூவுலகமும் அப்புறத் தெமை வைத்திடும் என்பதனை மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந் தார் நிலமிசை நீடுவாழ்வார் என்னும் திருக்குறளில் மிசைநிலம் - எல் லாவுலகங்களுக்கும் மேலாகிய வீட்டுலகம் எனப் பரிமேலழகியார் கூறியுள்ளமையாலும் அறியலாம் . இதன்கண் ' ' சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே என் பதனால் சிவவிளைவு என்னும் பதிகப் பொருள்புலப்படுதல் காண்க