திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1229 சென்னிப்பத்து புழுக்களைத் தோலினாற் பொதிந்த இவ்வுடம்பிற் பொருந்தி வாழ்கின்ற நிலையில்லாத வாழ்க்கையை நீக்கியருளும் சோதி எம் மீசன் எம்பிரான் என்னுடைய அப்பன் என்று பல காற் சொல் லித் தொழுதகையினராய்க் கண்களில் ஆனந்த நீர் மல்கும் தொண் டர்க்குத் தவறுதலில்லாமற் கிடைக்கும் திருவடியின்கீழ் எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம். புழுவினால் என்புழி ஆல் இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. புழுவினால் பொதிந்திடும்-புழுவை உள்ளே வைத்துப் பொதிந்திடும் "பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய் கூரை• (அதிசய 7) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க. பொய் - நிலையில்லாத வாழ்க்கை. எம் மீசன் எம்பிரான் எனப்பன்மையும் என்னுடை அப்பன் என ஒரு மையும் விரவியது இயல்பினாலாகும். சோதி, ஈசன் எம்பிரான் அப்பன் என்று என்று பலகாற் கூறித் தொழுதகையினராகிக் கண் கள் நீர் மல்குந் தொண்டர் என முடிக்க, தூய் மலர்க்கண்கள் என் புழித் தூய் என்பது மலர்க்கும் கண்ணுக்கும் விசேடணமாகும். இனி கண்ணீர்க்கு விசேடணமாகக் கொள்ளினுமமையும். தொண்டர்க் குத் திருவடிப்பேறு தப்பாமற் கிடைத்தலின் தொண்டர்க்கு வழு விலாச் சேவடி' என்றார். இனி வழுவிலாச் சேவடி என்பதற்கு வீடு பேற்றினை நல்குதலில் தவறுதலில்லாத சேவடி எனினுமாம் வழுவிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இதன் கண் 'வழுவிலா மலர்ச்சேவடிக்கண் நஞ்சென்னி மன்னி மலரும்' என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க. 585. வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்ப ரானுல கூடறுத்தப் புறத்த னாய்நின்ற வெம்பிரான் அன்ப ரானவர்க் கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைத்திடும் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னித்திகழுமே. ப - ரை : வம்பனாய் திரிவேனை வா என்று வல்வினை பகை மாய்த்திடும் உம்பரான் - மானிடப் பிறவியின் பயனைப் பெறாதே னாய்த் திரிகின்ற என்னை இங்கே வா என்று அழைத்து வலிய இரு வினையாகிய பகையை அழித்தருளிய உயர்ந்த இடத்தையுடையவன்;
1229 சென்னிப்பத்து புழுக்களைத் தோலினாற் பொதிந்த இவ்வுடம்பிற் பொருந்தி வாழ்கின்ற நிலையில்லாத வாழ்க்கையை நீக்கியருளும் சோதி எம் மீசன் எம்பிரான் என்னுடைய அப்பன் என்று பல காற் சொல் லித் தொழுதகையினராய்க் கண்களில் ஆனந்த நீர் மல்கும் தொண் டர்க்குத் தவறுதலில்லாமற் கிடைக்கும் திருவடியின்கீழ் எங்கள் தலைகள் நிலையாகப் பொருந்திப் பொலிவடைதல் உறுதியாகும் என்பதாம் . புழுவினால் என்புழி ஆல் இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தது . புழுவினால் பொதிந்திடும் - புழுவை உள்ளே வைத்துப் பொதிந்திடும் பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய் கூரை ( அதிசய 7 ) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க . பொய் - நிலையில்லாத வாழ்க்கை . எம் மீசன் எம்பிரான் எனப்பன்மையும் என்னுடை அப்பன் என ஒரு மையும் விரவியது இயல்பினாலாகும் . சோதி ஈசன் எம்பிரான் அப்பன் என்று என்று பலகாற் கூறித் தொழுதகையினராகிக் கண் கள் நீர் மல்குந் தொண்டர் என முடிக்க தூய் மலர்க்கண்கள் என் புழித் தூய் என்பது மலர்க்கும் கண்ணுக்கும் விசேடணமாகும் . இனி கண்ணீர்க்கு விசேடணமாகக் கொள்ளினுமமையும் . தொண்டர்க் குத் திருவடிப்பேறு தப்பாமற் கிடைத்தலின் தொண்டர்க்கு வழு விலாச் சேவடி ' என்றார் . இனி வழுவிலாச் சேவடி என்பதற்கு வீடு பேற்றினை நல்குதலில் தவறுதலில்லாத சேவடி எனினுமாம் வழுவிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . இதன் கண் ' வழுவிலா மலர்ச்சேவடிக்கண் நஞ்சென்னி மன்னி மலரும் ' என்பதனால் சிவவிளைவு என்னும் பதிகப்பொருள் புலப்படு மாறு காண்க . 585 . வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்ப ரானுல கூடறுத்தப் புறத்த னாய்நின்ற வெம்பிரான் அன்ப ரானவர்க் கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைத்திடும் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னித்திகழுமே . - ரை : வம்பனாய் திரிவேனை வா என்று வல்வினை பகை மாய்த்திடும் உம்பரான் - மானிடப் பிறவியின் பயனைப் பெறாதே னாய்த் திரிகின்ற என்னை இங்கே வா என்று அழைத்து வலிய இரு வினையாகிய பகையை அழித்தருளிய உயர்ந்த இடத்தையுடையவன் ;