திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

588 திருவார்த்தை மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்தாசன் ஞால மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவும் இடைவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வாரெம் பிரானாவாரே. 1235 விஸ் ப - ரை. மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க - திரு மாலும் பிரமனும் தேவர்க்கு அரசனாகிய இந்திரனும் வந்து பணிய, அவர்க்கு அருள் செய்த ஈசன் - அவர்களுக்கு அருள் செய்த ஈசன், ஞாலம் அதனிடை வந்து இழிந்து - பூவுலகில் வந்து இறங்கியருளி நன்னெறி காட்டி -நல்ல ஞானநெறியை அறிவுறுத்தி, நலம் திக ழும் - நன்மை விளங்குகின்ற, கோலம் மணி அணி நீடு மாடம் குலா வும் இடைவை - அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாடங்கள் விளங்குகின்ற திருவிடைமருதூரில், மட நல்லாட்கு -மடப் பம் பொருந்திய மங்கையொருத்திக்கு, சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் - நல்லொழுக்கம் மிகும் வண்ணம் அருள் செய்த திறத்தினை அறியவல்லார், எம்பிரான் ஆவார் - எமது தலைவராவர். திருமாலும் பிரமனும் இந்திரனும் வந்து வணங்க அவர்க்கு அருள் செய்த ஈசன் இப்பூமியில் வந்து இறங்கியருளி நல்நெறியைக் காட்டித் திருவிடைமருதூரில் மங்கையொருத்திக்கு நல்லொழுக்கம் மிகும்படி அருள்செய்த திறத்தினை அறியவல்லார் எமது தலைவரா வர் என்பதாம். மாலயன் வானவர் கோன் வந்து வணங்க அருள் செய் ஈசன் என்பது இறைவன் உயர்வினைக் குறிப்பதாகும். 'வானவர்,கோன் அயன்மால் முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே" எனவும் (11-ந் திரு. சிவபெருமான் திருவிரட்டை. 36) வருவன காண்க. வானவர் கோனும் என்புழி உம்மையை மால் அயனோடும் கூட்டுக, நன்னெறி என்றது ஞானநெறியினை. நலந் திகழும் இடைவை என இயையும். இடை மருது என்பது இடைவை என மருவிற்று சீலம் - நல்லொழுக்கம். திருவிடை மருதூரில் முனிவர் பலர் ஒருங்கு கூடி கலைமகள் திரு மகள் மலைமகள் என்னும் மூவரையுங் குறித்துத் தவஞ் செய்தனர்.
588 திருவார்த்தை மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்தாசன் ஞால மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவும் இடைவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வாரெம் பிரானாவாரே . 1235 விஸ் - ரை . மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க - திரு மாலும் பிரமனும் தேவர்க்கு அரசனாகிய இந்திரனும் வந்து பணிய அவர்க்கு அருள் செய்த ஈசன் - அவர்களுக்கு அருள் செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்து இழிந்து - பூவுலகில் வந்து இறங்கியருளி நன்னெறி காட்டி -நல்ல ஞானநெறியை அறிவுறுத்தி நலம் திக ழும் - நன்மை விளங்குகின்ற கோலம் மணி அணி நீடு மாடம் குலா வும் இடைவை - அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாடங்கள் விளங்குகின்ற திருவிடைமருதூரில் மட நல்லாட்கு -மடப் பம் பொருந்திய மங்கையொருத்திக்கு சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் - நல்லொழுக்கம் மிகும் வண்ணம் அருள் செய்த திறத்தினை அறியவல்லார் எம்பிரான் ஆவார் - எமது தலைவராவர் . திருமாலும் பிரமனும் இந்திரனும் வந்து வணங்க அவர்க்கு அருள் செய்த ஈசன் இப்பூமியில் வந்து இறங்கியருளி நல்நெறியைக் காட்டித் திருவிடைமருதூரில் மங்கையொருத்திக்கு நல்லொழுக்கம் மிகும்படி அருள்செய்த திறத்தினை அறியவல்லார் எமது தலைவரா வர் என்பதாம் . மாலயன் வானவர் கோன் வந்து வணங்க அருள் செய் ஈசன் என்பது இறைவன் உயர்வினைக் குறிப்பதாகும் . ' வானவர் கோன் அயன்மால் முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே எனவும் ( 11 - ந் திரு . சிவபெருமான் திருவிரட்டை . 36 ) வருவன காண்க . வானவர் கோனும் என்புழி உம்மையை மால் அயனோடும் கூட்டுக நன்னெறி என்றது ஞானநெறியினை . நலந் திகழும் இடைவை என இயையும் . இடை மருது என்பது இடைவை என மருவிற்று சீலம் - நல்லொழுக்கம் . திருவிடை மருதூரில் முனிவர் பலர் ஒருங்கு கூடி கலைமகள் திரு மகள் மலைமகள் என்னும் மூவரையுங் குறித்துத் தவஞ் செய்தனர் .