திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1242 திருவாசக ஆராய்ச்சியுரை முன்னே, தான் இயங்கு காட்டில் - தான் செல்லுகின்ற காட்டின் கண், ஏ உண்ட பன்றிக்கு இரங்கி - அம்பு தைத்து இறந்து கிடந்த பன்றியின் குட்டிகளுக்கு இரங்கி, அன்று - அந்நாளில், கேவலம் கேழலாய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே சிறுமையினையுடைய தாய்ப்பன்றியாய்ப் பால் கொடுத்த திருவுள் ளக்கிடக்கையின் அருளை அறியவல்லார், எமது தலைவராவார். முப்புரங்களை அழித்த வில்வீரனும் எங்கள் தலைவனும் எம்மை யுடையவனும் திருப்பெருந்துறை முதல்வனுமாகிய இறைவன் வேடுவனாய்த் தேவர்கள் முன்னே தான் இயங்கு காட்டில் அம்பு தைத்து இறந்து கிடந்த பன்றியின் குட்டிகளுக்கு இரங்கி அந்நா ளில் தாய்ப்பன்றியாய்ப் பால்கொடுத்த திருவுள்ளக்கிடக்கையின் அருளை அறியவல்லார் எமது தலைவராவார். திரிபுரம் வேவ என மாறிக் கூட்டுக. செற்ற - கோபித்த. வில்லி - வில்வீரன். இயங்குதல் - செல்லல். திரிதல்; ஏ - அம்பு. இரங்கிக் கொடுத்த என இயையும்; கேவலம் - சிறுமை; அற்பம். சேழல் ·டன்றி. கிடப்பு -உள்ளக்கிடக்கை. இறைவன் பன்றிக்கு இரங்கிப் பால் கொடுத்த வரலாற்றைத் திருவிளையாடற் புராணம் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த படலத்திற் காண்க. வேடுவனாய்க் கடிநாய்கள் சூழ எம்பெருமான் காட்டிற் சென் றது மூகாசுரனாகிய பன்றியால் அர்ச்சுனனுக்கு இடையூறு டாகாமைப் பொருட்டாகும். உண் இதன்கண் 'கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறிவார் எம்பிரா னாவாரே' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 593. நாத முடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார் ஓதிப் பணிந்தலர் தூவியேத்த வொளிவளர் சோதியெம் ஈசன்மன்னும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லாரெம் பிரானாவாரே. 6 ப -ரை நாதம் உடையது ஓர் நல் கமல போதினில் நண்ணிய நல்நுதலார் வண்டின் ஒலியையுடைய ஒப்பற்ற நல்ல செந்தாமரை
1242 திருவாசக ஆராய்ச்சியுரை முன்னே தான் இயங்கு காட்டில் - தான் செல்லுகின்ற காட்டின் கண் உண்ட பன்றிக்கு இரங்கி - அம்பு தைத்து இறந்து கிடந்த பன்றியின் குட்டிகளுக்கு இரங்கி அன்று - அந்நாளில் கேவலம் கேழலாய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே சிறுமையினையுடைய தாய்ப்பன்றியாய்ப் பால் கொடுத்த திருவுள் ளக்கிடக்கையின் அருளை அறியவல்லார் எமது தலைவராவார் . முப்புரங்களை அழித்த வில்வீரனும் எங்கள் தலைவனும் எம்மை யுடையவனும் திருப்பெருந்துறை முதல்வனுமாகிய இறைவன் வேடுவனாய்த் தேவர்கள் முன்னே தான் இயங்கு காட்டில் அம்பு தைத்து இறந்து கிடந்த பன்றியின் குட்டிகளுக்கு இரங்கி அந்நா ளில் தாய்ப்பன்றியாய்ப் பால்கொடுத்த திருவுள்ளக்கிடக்கையின் அருளை அறியவல்லார் எமது தலைவராவார் . திரிபுரம் வேவ என மாறிக் கூட்டுக . செற்ற - கோபித்த . வில்லி - வில்வீரன் . இயங்குதல் - செல்லல் . திரிதல் ; - அம்பு . இரங்கிக் கொடுத்த என இயையும் ; கேவலம் - சிறுமை ; அற்பம் . சேழல் · டன்றி . கிடப்பு -உள்ளக்கிடக்கை . இறைவன் பன்றிக்கு இரங்கிப் பால் கொடுத்த வரலாற்றைத் திருவிளையாடற் புராணம் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த படலத்திற் காண்க . வேடுவனாய்க் கடிநாய்கள் சூழ எம்பெருமான் காட்டிற் சென் றது மூகாசுரனாகிய பன்றியால் அர்ச்சுனனுக்கு இடையூறு டாகாமைப் பொருட்டாகும் . உண் இதன்கண் ' கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறிவார் எம்பிரா னாவாரே ' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 593. நாத முடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார் ஓதிப் பணிந்தலர் தூவியேத்த வொளிவளர் சோதியெம் ஈசன்மன்னும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லாரெம் பிரானாவாரே . 6 -ரை நாதம் உடையது ஓர் நல் கமல போதினில் நண்ணிய நல்நுதலார் வண்டின் ஒலியையுடைய ஒப்பற்ற நல்ல செந்தாமரை