திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1245 திருவார்த்தை வாணன் என மருவியது. வருணன் செய்த வேள்வித் தீயினின்றும் சித்திரம் போன்ற அழகிய மகளிர் உதித்தனர் எனவும், அம் மக ளிரை வருணன் வேண்டு கோளின்படி இறைவன் திருமணஞ் செய் தனன் எனவும் இத்திருப்பாட்டிற் கூறப்பட்டது. சோம சுந்தரக்கடவுளின் திருவிளையாடல்களை இந்திரனா லறிந்த வருணன் தனக்குளதாகிய பெருவயிற்று நோயினை அக்கடவுளின் அருளால் நீக்கிக்கொள்ளக் கருதி மதுரையை அடைந்து அக் கட வுளின் வல்லபத்தினைச் சோதிக்கக் கருதி மதுரையை அழிக்குமாறு கடலை ஏவினான். கடல் பெருக்கெடுத்து மதுரையை அழிக்கவருத லும் சோமசுந்தரக் கடவுள் தன் சடைமுடியிலுள்ள நான்கு முகில் களை அனுப்பி அக்கடலை வற்றச் செய்தனர். அதனால் நாணம் அடைந்த வருணன் பின்னரும் ஏழுமேகங்களை மழைபெய்து மது ரையை அழிக்குமாறு ஏவினன். மேகங்கள் வந்து பெருமழை பெய்தலும் சோமசுந்தரக்கடவுளால் அனுப்பப்பட்ட நான்கு முகில் களும் நான்கு மாடங்கள் போலாய் மதுரைமாநகரைக் சூழ்ந்து மழைநீர் சிறிதும் மதுரைநகருட் புகாவண்ணம் காத்துக் கொண்டன. அது கண்ட வருணன் நாணமும் அச்சமும் அடைந்து இறைவனைச் சோதித்தலை விடுத்துப்பொற்றாமரை வாவியில் முழுகி அதனால் தன் பெருவயிற்று நோயும் நீங்கப்பெற்றுச் சோம சுந்தரக் கடவுளை வழிபட்டுத் தான் செய்த குற்றள்களைப் பொறுக்குமாறு இறைவனை வேண்டுதல் செய்தனன். இறைவனும் அவனுக்கு வெளிப் பட்டு, 'இன்னும் உனக்கு வேண்டிய வரம் யாது?" என வினாவலும் வயிற்று நோய் நீங்கப் பெற்ற வருணன் பல வரங்களைப் பெற்றுக் கொண்டு இறைவனை வணங்கித் தன் நகரத்தை அடைந்தான் எனத் திருவிளையாடற் புராணத்தில் ஒருவரலாறு உள்ளது. இவ்வரலாற்றில் வருணன் இறைவனிடத்துப் பலவரங்களையும் பெற்றனன் என்று வருதலின் அவ்வரங்களில் ஒன்று இறைவனது நவசக்திகளும் தான் இறைவன் பொருட்டுச் செய்யும் வேள்ளித் தீயில் தோற்ற வேண்டு மென்பதும் அந்நவ சக்திகளையும் இறைவன் திருமணஞ் செய்து கொள்ளவேண்டும் என்பதும் ஒருவரமாக இருக்கலாமோ என எண்ண இடமுண்டு. கடல் வாணர்க்கு என்பதற்கு பரதவர்க்கு எனல் அமையாதோ வெனில் தீயில் தோன்றிய மங்கையர் என்றமையால் அமையா தென்க. உரு - கலியாண சுந்த ராகிய உருவத்தை. இதன்கண் 'மங்கையர் தோள்புணரும் உருவறிவார் எம்பிரா னாவாரே' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 8
1245 திருவார்த்தை வாணன் என மருவியது . வருணன் செய்த வேள்வித் தீயினின்றும் சித்திரம் போன்ற அழகிய மகளிர் உதித்தனர் எனவும் அம் மக ளிரை வருணன் வேண்டு கோளின்படி இறைவன் திருமணஞ் செய் தனன் எனவும் இத்திருப்பாட்டிற் கூறப்பட்டது . சோம சுந்தரக்கடவுளின் திருவிளையாடல்களை இந்திரனா லறிந்த வருணன் தனக்குளதாகிய பெருவயிற்று நோயினை அக்கடவுளின் அருளால் நீக்கிக்கொள்ளக் கருதி மதுரையை அடைந்து அக் கட வுளின் வல்லபத்தினைச் சோதிக்கக் கருதி மதுரையை அழிக்குமாறு கடலை ஏவினான் . கடல் பெருக்கெடுத்து மதுரையை அழிக்கவருத லும் சோமசுந்தரக் கடவுள் தன் சடைமுடியிலுள்ள நான்கு முகில் களை அனுப்பி அக்கடலை வற்றச் செய்தனர் . அதனால் நாணம் அடைந்த வருணன் பின்னரும் ஏழுமேகங்களை மழைபெய்து மது ரையை அழிக்குமாறு ஏவினன் . மேகங்கள் வந்து பெருமழை பெய்தலும் சோமசுந்தரக்கடவுளால் அனுப்பப்பட்ட நான்கு முகில் களும் நான்கு மாடங்கள் போலாய் மதுரைமாநகரைக் சூழ்ந்து மழைநீர் சிறிதும் மதுரைநகருட் புகாவண்ணம் காத்துக் கொண்டன . அது கண்ட வருணன் நாணமும் அச்சமும் அடைந்து இறைவனைச் சோதித்தலை விடுத்துப்பொற்றாமரை வாவியில் முழுகி அதனால் தன் பெருவயிற்று நோயும் நீங்கப்பெற்றுச் சோம சுந்தரக் கடவுளை வழிபட்டுத் தான் செய்த குற்றள்களைப் பொறுக்குமாறு இறைவனை வேண்டுதல் செய்தனன் . இறைவனும் அவனுக்கு வெளிப் பட்டு ' இன்னும் உனக்கு வேண்டிய வரம் யாது ? என வினாவலும் வயிற்று நோய் நீங்கப் பெற்ற வருணன் பல வரங்களைப் பெற்றுக் கொண்டு இறைவனை வணங்கித் தன் நகரத்தை அடைந்தான் எனத் திருவிளையாடற் புராணத்தில் ஒருவரலாறு உள்ளது . இவ்வரலாற்றில் வருணன் இறைவனிடத்துப் பலவரங்களையும் பெற்றனன் என்று வருதலின் அவ்வரங்களில் ஒன்று இறைவனது நவசக்திகளும் தான் இறைவன் பொருட்டுச் செய்யும் வேள்ளித் தீயில் தோற்ற வேண்டு மென்பதும் அந்நவ சக்திகளையும் இறைவன் திருமணஞ் செய்து கொள்ளவேண்டும் என்பதும் ஒருவரமாக இருக்கலாமோ என எண்ண இடமுண்டு . கடல் வாணர்க்கு என்பதற்கு பரதவர்க்கு எனல் அமையாதோ வெனில் தீயில் தோன்றிய மங்கையர் என்றமையால் அமையா தென்க . உரு - கலியாண சுந்த ராகிய உருவத்தை . இதன்கண் ' மங்கையர் தோள்புணரும் உருவறிவார் எம்பிரா னாவாரே ' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 8