திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவார்த்தை டைய சிவன்'" என அடிகள் கூறுதலின் தென்னன் என்பதற்குத் தென்னாடுடைய சிவன் எனப் பொருள் உரைக்கப்பட்டது. ஆளி ஆள்பவன்; அரசன். ''திருப்பெருந்துறை மன்னா" (திருப்பள்ளி. 5,7) என அடிகள் கூறுமாறுங் காண்க. அன்று - அடிகளை ஆட் கொண்ட நாளைக் குறிக்கும் பண்டறி சுட்டு. காதல் - அன்பு "காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" (திருஞான.307-1) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. இறைவன் கழல் காட்டியமையை "இறைவன் எம்பிரான் எல்லை யில்லாததன் இணைமலர்க் கழல்காட்டி" (அற்புதப். 10) என அடி கள் கூறுதல் காண்க. கேதம் - துன்பம். வடசொல். அடிகளின் கேதங் கெடுத்தாண்டமையை, "கேதங்கள் கெடுத்தாண்ட ரொளியை" (கண்டபத்து 10) என்பதனாலுமறிக. கிடப்பு - திரு வுள்ளக்கிடக்கை; கருத்து. கிள 1247 இதன் கண் கேதங் கெடுத்தென்னை யாண்டருளுங் கிடப்பறிவா ரெம்பிரானாவாரே' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 9 596 அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள் பிரானிரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச் சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை யாளியன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறி வாரெம் பிரானாவாரே. . ப-ரை. அங்கணன் - அழகிய அருட்கண்களையுடையவனும், எங்கள் அமரர் கோமான் - எங்களுடைய தேவர் தலைவனும், அடியார்க்கு அமுதன் - தன் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும், அவனி வந்த எங்கள் பிரான் - நிலவுலகில் குருவாகி வலிய எழுந்தருளி வந்த எங்கள் பெருமானும், சதுரன் - மிக்க திறமையுடையவனும், பெருந் துறை ஆளி - திருப்பெருந்துறைக்குத் தலைவனுமாகிய இறைவன், இரும் பாசம் தீர - பெரிய மும்மலங்களும் நீங்கவும், இகபரம் ஆயது ஓர் இன்பம் எய்த - இம்மை மறுமைப் பயனாகிய ஒப்பற்ற இன்பத் தினை அடையும்படியும், அன்று சங்கம் கவர்ந்து - அந்நாளில் சங்கு வளையல்களைக் கவர்ந்துகொண்டு, வண் சாத்தினோடும் - சிறந்த வளை யல் தொகுதியொடும், மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்தவகை
திருவார்த்தை டைய சிவன் ' என அடிகள் கூறுதலின் தென்னன் என்பதற்குத் தென்னாடுடைய சிவன் எனப் பொருள் உரைக்கப்பட்டது . ஆளி ஆள்பவன் ; அரசன் . ' ' திருப்பெருந்துறை மன்னா ( திருப்பள்ளி . 5 ) என அடிகள் கூறுமாறுங் காண்க . அன்று - அடிகளை ஆட் கொண்ட நாளைக் குறிக்கும் பண்டறி சுட்டு . காதல் - அன்பு காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ( திருஞான.307-1 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . இறைவன் கழல் காட்டியமையை இறைவன் எம்பிரான் எல்லை யில்லாததன் இணைமலர்க் கழல்காட்டி ( அற்புதப் . 10 ) என அடி கள் கூறுதல் காண்க . கேதம் - துன்பம் . வடசொல் . அடிகளின் கேதங் கெடுத்தாண்டமையை கேதங்கள் கெடுத்தாண்ட ரொளியை ( கண்டபத்து 10 ) என்பதனாலுமறிக . கிடப்பு - திரு வுள்ளக்கிடக்கை ; கருத்து . கிள 1247 இதன் கண் கேதங் கெடுத்தென்னை யாண்டருளுங் கிடப்பறிவா ரெம்பிரானாவாரே ' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 9 596 அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள் பிரானிரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச் சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை யாளியன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறி வாரெம் பிரானாவாரே . . - ரை . அங்கணன் - அழகிய அருட்கண்களையுடையவனும் எங்கள் அமரர் கோமான் - எங்களுடைய தேவர் தலைவனும் அடியார்க்கு அமுதன் - தன் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும் அவனி வந்த எங்கள் பிரான் - நிலவுலகில் குருவாகி வலிய எழுந்தருளி வந்த எங்கள் பெருமானும் சதுரன் - மிக்க திறமையுடையவனும் பெருந் துறை ஆளி - திருப்பெருந்துறைக்குத் தலைவனுமாகிய இறைவன் இரும் பாசம் தீர - பெரிய மும்மலங்களும் நீங்கவும் இகபரம் ஆயது ஓர் இன்பம் எய்த - இம்மை மறுமைப் பயனாகிய ஒப்பற்ற இன்பத் தினை அடையும்படியும் அன்று சங்கம் கவர்ந்து - அந்நாளில் சங்கு வளையல்களைக் கவர்ந்துகொண்டு வண் சாத்தினோடும் - சிறந்த வளை யல் தொகுதியொடும் மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்தவகை