திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1248 திருவாசக ஆராய்ச்சியுரை அறிவார் - வளையல் விற்கப் பெண்கள் நிறைந்த மதுரையம்பதியை அடைந்த தன்மையை அறியவல்லார், எம்பிரான் ஆவார்-எங்கள் தலைவராவார். அருட்கண்களையுடையவனும் தேவர் பெருமானும் அடியார்க்கு அமுதம் போன்றவனும் பூமியில் எழுந்தருளி வந்த எங்கள் பெரு மானும் சதுரனும் திருப்பெருந்துறையாளியுமாகிய இறைவன் எங் கள் பாசம் நீங்கவும் இம்மை மறுமைப் பயனாகிய இன்பங்களை அடையவும் சங்க வளையல்களைக் கவர்ந்து சிறந்த வளையல் தொகுதி யோடும் அன்று மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகையறிவார் எம்பிரானாவார் என்பதாம். என்றார். அடியார்க்கு அருளும் திருநோக்கமுடையனாதலின் ‘அங்கணன்' "அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்'' (அம் மானை 1) "என் பிழைக்கிரங்கும் அங்கணனே" (அடைக் 7) என அடிகள் பிறபிடங்களிலும் கூறுதல் காண்க. அமுதன் - அமுத போன்றவன். "அப்பனே யெனக் கமுதனே" (சத 98) எனவும், "அத்தன் ஆனந்தன் அமுதன்'' (திருவெம் 3) எனவும் வருவன காண்க. இகபரம் - இம்மை மறுமை. சங்கம் - சங்கவளை.சாத்து. வளையல் தொகுதி. மல்கும் - மிகும். மங்கையர் - இருடிகளின் மனைவி யர். தீர எய்த மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த என முக்க கடி na diet தாருகாவனத்து இருடிகளால் சாபமடைந்த அவ்விருடிகளின் மனைவியர் மதுரைநகரில் உதித்துக் கன்னிபராய் இருந்தனர் என்ப தும் அவர்களைத் தீண்டி இறைவன் வளையல் இடுதலால் நற்புத்திரப் பேறாகிய இக இன்பமும் பாசநீக்கமாகிய பரஇன்பமும் எய்தினர் என்பதும் ஆகிய வரலாறு திருவிளைய டற்புராணத்து வளையல்விற்ற படலத்திற் காண்க. சஞ்சமை. இதன்கண் 'பெருந்துறை பாளி யன்று மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகையறிவார் எம்பிரானாவாரே' என்பதனால் அறிவித்தன் புறுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 10
1248 திருவாசக ஆராய்ச்சியுரை அறிவார் - வளையல் விற்கப் பெண்கள் நிறைந்த மதுரையம்பதியை அடைந்த தன்மையை அறியவல்லார் எம்பிரான் ஆவார் - எங்கள் தலைவராவார் . அருட்கண்களையுடையவனும் தேவர் பெருமானும் அடியார்க்கு அமுதம் போன்றவனும் பூமியில் எழுந்தருளி வந்த எங்கள் பெரு மானும் சதுரனும் திருப்பெருந்துறையாளியுமாகிய இறைவன் எங் கள் பாசம் நீங்கவும் இம்மை மறுமைப் பயனாகிய இன்பங்களை அடையவும் சங்க வளையல்களைக் கவர்ந்து சிறந்த வளையல் தொகுதி யோடும் அன்று மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகையறிவார் எம்பிரானாவார் என்பதாம் . என்றார் . அடியார்க்கு அருளும் திருநோக்கமுடையனாதலின் அங்கணன் ' அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் ' ' ( அம் மானை 1 ) என் பிழைக்கிரங்கும் அங்கணனே ( அடைக் 7 ) என அடிகள் பிறபிடங்களிலும் கூறுதல் காண்க . அமுதன் - அமுத போன்றவன் . அப்பனே யெனக் கமுதனே ( சத 98 ) எனவும் அத்தன் ஆனந்தன் அமுதன் ' ' ( திருவெம் 3 ) எனவும் வருவன காண்க . இகபரம் - இம்மை மறுமை . சங்கம் - சங்கவளை.சாத்து . வளையல் தொகுதி . மல்கும் - மிகும் . மங்கையர் - இருடிகளின் மனைவி யர் . தீர எய்த மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த என முக்க கடி na diet தாருகாவனத்து இருடிகளால் சாபமடைந்த அவ்விருடிகளின் மனைவியர் மதுரைநகரில் உதித்துக் கன்னிபராய் இருந்தனர் என்ப தும் அவர்களைத் தீண்டி இறைவன் வளையல் இடுதலால் நற்புத்திரப் பேறாகிய இக இன்பமும் பாசநீக்கமாகிய பரஇன்பமும் எய்தினர் என்பதும் ஆகிய வரலாறு திருவிளைய டற்புராணத்து வளையல்விற்ற படலத்திற் காண்க . சஞ்சமை . இதன்கண் ' பெருந்துறை பாளி யன்று மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகையறிவார் எம்பிரானாவாரே ' என்பதனால் அறிவித்தன் புறுதல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 10