திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

44. எண்ணப்பதிகம் ஒழியாவின்பத்துவகை திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. எண்ணப்பதிகம் என்பது அடிகள் தாம் பேரின்ப வாழ்வு அடை தற்கு வேண்டிய சாதனங்களையெல்லாம் அளித்தருள வேண்டுமென்று தமது விருப்பத்தினை இறைவனிடத்து வேண்டிக்கொள்வதாகும். இதன் உள்ளுறை ஒழியாவின்பத்துவகை என்பது. அஃதாவது நீங் காத இன்பத்தினாலுண்டாகும் மகிழ்ச்சி. திருவாசகச் சிறப்புடை யார் இதனை, 597. "நிறம் வளரும் மலர்ப்பொழில் சூழ்ந்து ஓங்கு திருத் தில்லை மன்றுள் நிமலன் நாமத் திறம் பெருகு இன்ப மருள் என்றல் எண்ணப் பத்தெனவுந் நிகழ்த்தலமே.'' எனக் கூறுவர். இப்பதிகம் ஆறு திருப்பாடல்களையுடையது. இது ஆசிரியவிருத்தம் என்னும் செய்யுள்வகையால் அமைந்தது. மிகுதி நான்கு பாடல்களும் செல்லரிப்புண்டு மறைந்து போயினவோ என எண்ண இடமுண்டு. ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்போல் ஆருரு வாயவென் னாரமு தேயுன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே. பசுழ் ப-ரை : சீர் உரு ஆய சிவபெருமானே - சிறப்புடைய திருவடி வங் கொண்ட சிவபெருமானே, செங் கமல மலர் போல் ஆர் உரு ஆய என் ஆர் அமுதே செந்தாமரைமலர் போன்ற அரிய சிவந்த திருமேனியையுடைய எனது கிடைத்தற்கரிய அமுதமானவனே 109
44. எண்ணப்பதிகம் ஒழியாவின்பத்துவகை திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது . எண்ணப்பதிகம் என்பது அடிகள் தாம் பேரின்ப வாழ்வு அடை தற்கு வேண்டிய சாதனங்களையெல்லாம் அளித்தருள வேண்டுமென்று தமது விருப்பத்தினை இறைவனிடத்து வேண்டிக்கொள்வதாகும் . இதன் உள்ளுறை ஒழியாவின்பத்துவகை என்பது . அஃதாவது நீங் காத இன்பத்தினாலுண்டாகும் மகிழ்ச்சி . திருவாசகச் சிறப்புடை யார் இதனை 597 . நிறம் வளரும் மலர்ப்பொழில் சூழ்ந்து ஓங்கு திருத் தில்லை மன்றுள் நிமலன் நாமத் திறம் பெருகு இன்ப மருள் என்றல் எண்ணப் பத்தெனவுந் நிகழ்த்தலமே . ' ' எனக் கூறுவர் . இப்பதிகம் ஆறு திருப்பாடல்களையுடையது . இது ஆசிரியவிருத்தம் என்னும் செய்யுள்வகையால் அமைந்தது . மிகுதி நான்கு பாடல்களும் செல்லரிப்புண்டு மறைந்து போயினவோ என எண்ண இடமுண்டு . ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்போல் ஆருரு வாயவென் னாரமு தேயுன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே . பசுழ் - ரை : சீர் உரு ஆய சிவபெருமானே - சிறப்புடைய திருவடி வங் கொண்ட சிவபெருமானே செங் கமல மலர் போல் ஆர் உரு ஆய என் ஆர் அமுதே செந்தாமரைமலர் போன்ற அரிய சிவந்த திருமேனியையுடைய எனது கிடைத்தற்கரிய அமுதமானவனே 109