திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: எங்கள் பெருமானே - எங்கள் தலைவனே. உனக்கு அடிமை உரியேன் அல்லேன் - உனக்கு அடிமையாய் இருத்தற்கு யான் உரிய தகுதி உடையேனல்லேன்; உன்னைப் பிரிந்து இங்கு ஒரு பொழுதும் தரியேன் - ஆயினும் உன்னை விட்டுப் பிரிந்து இவ்விடத் தில் ஒரு சிறிது நேரமும் தனித்திருத்தலைப் பொறுக்கமாட்டேன். நாயேன் இன்னது என்று அறியேன் - நாயினேன் இந்நிலைமைக்குக் காரணம் இன்னது என்று அறிந்திலேன், சங்கரா - சுகத்தைச் செய் பவனே. பெரியோன் ஒருவன் - பெருமையுடையானாகிய ஞானாசாரிய னாகிய ஒப்பில்லாதவன், கருணையினால் உன் பெய் கழல் அடி காட்டி- என்மேல் வைத்த இரக்கத்தினால் உனது இடப்பட்ட வீரக்கழலை யுடைய திருவடிகளை எனக்குக் காட்டி, கண்டு கொள் என்று அவற் றைக் கண்டு கொண்டிரு என்று கட்டளையிட்டு, பிரியேன் அருளிய அருளும் பொய்யோ - உன்னை விட்டுப் பிரியேன் என்னிடம் கூறியருளிய அருள் வாக்கும் பொய்யாகுமோ? என்று என்று 1252 எங்கள் பெருமானே. உனக்கு அடிமையாய் இருத்தற்கு யான் தகுதியுடையேனல்லேன்; ஆயினும் உன்னைப் பிரிந்து இங்கு ஒரு சிறிது நேரமும் தனித்திருத்தலைப் பொறுக்கவும் மாட்டேன்; நாயினேன் இந்நிலைமைக்குக் காரணம் இன்னது என அறியேன்; சங்கரா, பெரி யோன் ஒருவன் என்மேல் வைத்த கருணையினால் உனது திருவடியைக் காட்டி அவற்றைக் கண்டுகொள் என்று கட்டளையிட்டுப் பிரியேன் என்று அருளிய அருள் வாக்கும் பொய்யாகுமோ என்பதாம். உன் அடிமைக்குரியேனல்லேன்' என்பதும் "நாயேன் இன்ன தென்றறியேன்'" என்பதும் அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் தன் மை பற்றிக் கூறியனவாகும். இறைவன் பிரிவைப் பொறுக்க மாட் டாமையின் ''உன்னைப் பிரிந்திங்கொருபொழுதும் தரியேன்'' என் றார். 'எத்தனையானும் யான் தொடர்ந்துன்னை இனிப்பிரிந் தாற் றேனே' (எண்ணப். 4) என்பர் பின்னும். அடிகள் இறைவனைப் பிரிந்து வருந்தியமை, "பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக் கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை" (கோயின் மூத்த.8) என்பதனாலுமறிக. இன்னதென்றறியேன் என்றது உன்னை விட்டுப் பிரிந்திருத்தலைப் பொறுக்கமாட்டாமை எதனால் என்று அறியேன் என்றவாறு. சங்கரன் - சுகத்தைச் செய்பவன். பெரியோன் ஒருவன் என்று முன்னிலையிற் படர்க்கை கூறியது இயல்புபற்றியாகும். அங்ஙனம் கூறினும் பெருமையினையுடைய ஒப்பற்ற ஞானாசாரியனாகிய நீ என்பதே பொருளாகக் கொள்க. அடி காட்டி - திருவடிகளைக் காட்டி.இதனை,
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : எங்கள் பெருமானே - எங்கள் தலைவனே . உனக்கு அடிமை உரியேன் அல்லேன் - உனக்கு அடிமையாய் இருத்தற்கு யான் உரிய தகுதி உடையேனல்லேன் ; உன்னைப் பிரிந்து இங்கு ஒரு பொழுதும் தரியேன் - ஆயினும் உன்னை விட்டுப் பிரிந்து இவ்விடத் தில் ஒரு சிறிது நேரமும் தனித்திருத்தலைப் பொறுக்கமாட்டேன் . நாயேன் இன்னது என்று அறியேன் - நாயினேன் இந்நிலைமைக்குக் காரணம் இன்னது என்று அறிந்திலேன் சங்கரா - சுகத்தைச் செய் பவனே . பெரியோன் ஒருவன் - பெருமையுடையானாகிய ஞானாசாரிய னாகிய ஒப்பில்லாதவன் கருணையினால் உன் பெய் கழல் அடி காட்டி என்மேல் வைத்த இரக்கத்தினால் உனது இடப்பட்ட வீரக்கழலை யுடைய திருவடிகளை எனக்குக் காட்டி கண்டு கொள் என்று அவற் றைக் கண்டு கொண்டிரு என்று கட்டளையிட்டு பிரியேன் அருளிய அருளும் பொய்யோ - உன்னை விட்டுப் பிரியேன் என்னிடம் கூறியருளிய அருள் வாக்கும் பொய்யாகுமோ ? என்று என்று 1252 எங்கள் பெருமானே . உனக்கு அடிமையாய் இருத்தற்கு யான் தகுதியுடையேனல்லேன் ; ஆயினும் உன்னைப் பிரிந்து இங்கு ஒரு சிறிது நேரமும் தனித்திருத்தலைப் பொறுக்கவும் மாட்டேன் ; நாயினேன் இந்நிலைமைக்குக் காரணம் இன்னது என அறியேன் ; சங்கரா பெரி யோன் ஒருவன் என்மேல் வைத்த கருணையினால் உனது திருவடியைக் காட்டி அவற்றைக் கண்டுகொள் என்று கட்டளையிட்டுப் பிரியேன் என்று அருளிய அருள் வாக்கும் பொய்யாகுமோ என்பதாம் . உன் அடிமைக்குரியேனல்லேன் ' என்பதும் நாயேன் இன்ன தென்றறியேன் ' என்பதும் அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் தன் மை பற்றிக் கூறியனவாகும் . இறைவன் பிரிவைப் பொறுக்க மாட் டாமையின் ' ' உன்னைப் பிரிந்திங்கொருபொழுதும் தரியேன் ' ' என் றார் . ' எத்தனையானும் யான் தொடர்ந்துன்னை இனிப்பிரிந் தாற் றேனே ' ( எண்ணப் . 4 ) என்பர் பின்னும் . அடிகள் இறைவனைப் பிரிந்து வருந்தியமை பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக் கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை ( கோயின் மூத்த .8 ) என்பதனாலுமறிக . இன்னதென்றறியேன் என்றது உன்னை விட்டுப் பிரிந்திருத்தலைப் பொறுக்கமாட்டாமை எதனால் என்று அறியேன் என்றவாறு . சங்கரன் - சுகத்தைச் செய்பவன் . பெரியோன் ஒருவன் என்று முன்னிலையிற் படர்க்கை கூறியது இயல்புபற்றியாகும் . அங்ஙனம் கூறினும் பெருமையினையுடைய ஒப்பற்ற ஞானாசாரியனாகிய நீ என்பதே பொருளாகக் கொள்க . அடி காட்டி - திருவடிகளைக் காட்டி.இதனை