திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

531 திருவெம்பாவை தீயாடும் என்பதற்கு சர்வசங்கார காலத்து ஊழித்தீயின் கண் ஆடுதலைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளாது அனலை ஏந்தி ஆடு தலைப் பொருளாகக் கொள்க. இ என்னும் அண்மைச்சுட்டு வானும் வளியும் தீயும் நீரும் நிலனும் என்னும் ஐம்பெரும் பூதங்களின் தோற்றமாகிய சுட்டி யுணரப்படும் உலகத்தினை உணர்த்தியது. வானும் குவலயமும் என் றது அத்தியாகார முறைப்படி வானம் முதல் குவலயம் ஈறாக உள்ள தொகுப்பை உணர்த்தியது. எல்லோமும் என்றது உயிர்ப்பொருள்களாயுள்ள எல்லோமை யும் என்றவாறு. நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு எண் பத்துநான்கு நூறு ஆயிரம் யோனிபேதம் அடைந்து பிறக்கின்ற உயிர்களைப் படைத்தும் காத்தும் எனக் கூற வேண்டியதே முறை யாயினும் செய்யுளாதலின் முறை பிறழ வைத்தார். இறைவன் இயற்றும் ஐந்தொழில்களில் மறைத்தல் காத்தற் கண்ணும் அரு ளல் அழித்தற்கண்ணும் அடங்கும் முறைமைபற்றிக் காத்தும், படைத்தும், கரந்தும் என முத்தொழில் கூறினார். விளையாடி என் பது பெயர்; விளையாடுபவன் என்பது பொருள். படைத்தல் முதலிய தொழில்களை இறைவன் எளிதிற் செய்தல் நோக்கி "விளையாடி என்றார். வார்த்தை என்றது மகாமந்திரமாகிய திருவைந்தெழுத்தை, 66 ஓர் வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரம " "" (தாயு. பராபரக் - 156) என வருதல் காண்க. நீராடுங்கால் இறைவன் திருவைந்தெழுத்தை ஓதுதலின் "வார்த்தை பேசி'' என்றார், வார்த்தையும் பேசி என்னும் உம்மை முன்னைய திருப்பாட்டில் கழல் பாடுதலன்றி எனப் பொருள் தரு தலின் இறந்தது தழீஇய எச்சஉம்மை. <> வார்கலைகள் நீராடுங்கால் உளவாகும் உடலசைவினால் கையில் அணிந்த வளையலும், மேகலையும் ஒலித்தன. வளைசிலம்ப ஆர்ப்பரவஞ் செய்ய" என்றார். கலை - மே கலை 'வாமாண் கலை செல்ல நின்றார்" தொடல்விடு நற்கலையே" (திருக்கோவை - 263-358) என்பவற்றில் கலை என்பதற்கு மேகலை எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமை காண்க. கலைகள் என்றது மேகலை கலாபம் காஞ்சி முதலிய அணிகளை. ஆர்ப்பரவம் -ஒரு பொருட்பன்மொழி; பேரொலி என்னும் பொருளில் வந்தது.
531 திருவெம்பாவை தீயாடும் என்பதற்கு சர்வசங்கார காலத்து ஊழித்தீயின் கண் ஆடுதலைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளாது அனலை ஏந்தி ஆடு தலைப் பொருளாகக் கொள்க . என்னும் அண்மைச்சுட்டு வானும் வளியும் தீயும் நீரும் நிலனும் என்னும் ஐம்பெரும் பூதங்களின் தோற்றமாகிய சுட்டி யுணரப்படும் உலகத்தினை உணர்த்தியது . வானும் குவலயமும் என் றது அத்தியாகார முறைப்படி வானம் முதல் குவலயம் ஈறாக உள்ள தொகுப்பை உணர்த்தியது . எல்லோமும் என்றது உயிர்ப்பொருள்களாயுள்ள எல்லோமை யும் என்றவாறு . நால்வகைத் தோற்றம் எழுவகைப் பிறப்பு எண் பத்துநான்கு நூறு ஆயிரம் யோனிபேதம் அடைந்து பிறக்கின்ற உயிர்களைப் படைத்தும் காத்தும் எனக் கூற வேண்டியதே முறை யாயினும் செய்யுளாதலின் முறை பிறழ வைத்தார் . இறைவன் இயற்றும் ஐந்தொழில்களில் மறைத்தல் காத்தற் கண்ணும் அரு ளல் அழித்தற்கண்ணும் அடங்கும் முறைமைபற்றிக் காத்தும் படைத்தும் கரந்தும் என முத்தொழில் கூறினார் . விளையாடி என் பது பெயர் ; விளையாடுபவன் என்பது பொருள் . படைத்தல் முதலிய தொழில்களை இறைவன் எளிதிற் செய்தல் நோக்கி விளையாடி என்றார் . வார்த்தை என்றது மகாமந்திரமாகிய திருவைந்தெழுத்தை 66 ஓர் வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரம ( தாயு . பராபரக் - 156 ) என வருதல் காண்க . நீராடுங்கால் இறைவன் திருவைந்தெழுத்தை ஓதுதலின் வார்த்தை பேசி ' ' என்றார் வார்த்தையும் பேசி என்னும் உம்மை முன்னைய திருப்பாட்டில் கழல் பாடுதலன்றி எனப் பொருள் தரு தலின் இறந்தது தழீஇய எச்சஉம்மை . < > வார்கலைகள் நீராடுங்கால் உளவாகும் உடலசைவினால் கையில் அணிந்த வளையலும் மேகலையும் ஒலித்தன . வளைசிலம்ப ஆர்ப்பரவஞ் செய்ய என்றார் . கலை - மே கலை ' வாமாண் கலை செல்ல நின்றார் தொடல்விடு நற்கலையே ( திருக்கோவை - 263-358 ) என்பவற்றில் கலை என்பதற்கு மேகலை எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமை காண்க . கலைகள் என்றது மேகலை கலாபம் காஞ்சி முதலிய அணிகளை . ஆர்ப்பரவம் -ஒரு பொருட்பன்மொழி ; பேரொலி என்னும் பொருளில் வந்தது .