திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

யாத்திரைப்பத்து நிற்பார் - வீடுபேற்றினை அடைதற்குத் தகுதியில்லாதவர்கள். பொற்பு - அழகு. "தார் மார்பிற், கேழாரம் பொற்ப வருவானை" (பரி : 9 - 28 -9) என்புழி பொற்ப - அழகுபெற எனப் பரிமே லழகர் உரைத்தமை காண்க: தாழ்தல் - தாமதித்தல். "யாங்கணுந் திரிந்து தாழ்ந்து விளையாடி" (மணி. 19-106) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. தாழாது - காலம் நீட்டியாது எனினுமாம். ஆயிழையார்க்கு மொலிகேளா வவ்வெதிர், தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ" (கலி.90-13-4) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. நிற்கும் பரிசு என்றது நீவிர் நிற்கும் நிலையில். என் றது அந்நிலை குறைவுடைத்தாயினும் என்றவாறு. பேழ்கணித்தல் ஈண்டு காலந்தாழ்த்தல். "தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்" என் பதனாலும் இது வலியுறுதல் காண்க. பேழ்கணித்தல் தம்பிழை கரு திச் சிந்தித்தல் "பெரிதுமஞ்சித் திருமடத்தி லொருபாலடைந்து பேழ்கணித்து'' என (பெரிய.திருநாவு. 275) வருதல் காண்க ''பிற் பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்கரியன் பெருமானே" என் பதனால் இப்பொருட்டாதலும் அமையும் எனலாம். பெறுதற்+ரியன் "பெறுதற்கரியாய்" (சுந். 42-5) என்று வருதல் காண்க. இதன்கண், நிற்பீரெல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒரு ப டுமின். புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே இனி நாம் செல்வோம் என்பதனால் அனுபவா தீதமுரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. தயடிப 610 பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் 1269 திருத்தாள் சென்று சேர்வோமே. 7 ப-ரை: பெருமான் பேர் ஆனந்தத்து பிரியாதிருக்க பெற்றீர் காள் - இவ்வுலகில் பெருமானது பேரின்பத்தினின்றும் நீங்காதிருக் கப் பெற்ற சீவன் முத்தர்களே, பின்னை நீர் அருமால் உற்று அழுங்கி அம்மா அரற்றா தே -பின்பு நீவிர் கடத்தற்கு அரிய உலக மயக்கத்தை அடைந்து துன்பப்பட்டு அம்மா என்று புலம்பாமல், சிவபுரத்து திரு மா மணி சேர் திருக்கதவம் திறந்தபோதே - சிவபுரத்துத் திருக்கோ யிலின்கண் அழகிய பெரிய மாணிக்கங்கள் பதித்த திருக்கதவம் திறந்
யாத்திரைப்பத்து நிற்பார் - வீடுபேற்றினை அடைதற்குத் தகுதியில்லாதவர்கள் . பொற்பு - அழகு . தார் மார்பிற் கேழாரம் பொற்ப வருவானை ( பரி : 9 - 28 -9 ) என்புழி பொற்ப - அழகுபெற எனப் பரிமே லழகர் உரைத்தமை காண்க : தாழ்தல் - தாமதித்தல் . யாங்கணுந் திரிந்து தாழ்ந்து விளையாடி ( மணி . 19-106 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . தாழாது - காலம் நீட்டியாது எனினுமாம் . ஆயிழையார்க்கு மொலிகேளா வவ்வெதிர் தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ ( கலி.90-13-4 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . நிற்கும் பரிசு என்றது நீவிர் நிற்கும் நிலையில் . என் றது அந்நிலை குறைவுடைத்தாயினும் என்றவாறு . பேழ்கணித்தல் ஈண்டு காலந்தாழ்த்தல் . தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் என் பதனாலும் இது வலியுறுதல் காண்க . பேழ்கணித்தல் தம்பிழை கரு திச் சிந்தித்தல் பெரிதுமஞ்சித் திருமடத்தி லொருபாலடைந்து பேழ்கணித்து ' ' என ( பெரிய.திருநாவு . 275 ) வருதல் காண்க ' ' பிற் பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்கரியன் பெருமானே என் பதனால் இப்பொருட்டாதலும் அமையும் எனலாம் . பெறுதற் + ரியன் பெறுதற்கரியாய் ( சுந் . 42-5 ) என்று வருதல் காண்க . இதன்கண் நிற்பீரெல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒரு டுமின் . புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே இனி நாம் செல்வோம் என்பதனால் அனுபவா தீதமுரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . தயடிப 610 பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் 1269 திருத்தாள் சென்று சேர்வோமே . 7 - ரை : பெருமான் பேர் ஆனந்தத்து பிரியாதிருக்க பெற்றீர் காள் - இவ்வுலகில் பெருமானது பேரின்பத்தினின்றும் நீங்காதிருக் கப் பெற்ற சீவன் முத்தர்களே பின்னை நீர் அருமால் உற்று அழுங்கி அம்மா அரற்றா தே -பின்பு நீவிர் கடத்தற்கு அரிய உலக மயக்கத்தை அடைந்து துன்பப்பட்டு அம்மா என்று புலம்பாமல் சிவபுரத்து திரு மா மணி சேர் திருக்கதவம் திறந்தபோதே - சிவபுரத்துத் திருக்கோ யிலின்கண் அழகிய பெரிய மாணிக்கங்கள் பதித்த திருக்கதவம் திறந்