திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை திருக்கும்போதே போய், திருப்புயங்கன் திருமால் அறியா திருத் தாள் சேர்வோம் - அழகிய அரவாபரணனாகிய இறைவனுடைய திரு மாலும் பன்றியாய்ச் சென்றிடந்தும் காண்பரிய திருவடிகளை அடை வோம் வாருங்கள். 1270 இவ்வுலகில் பெருமானது பேரானந்தத்தினின்றும் நீங்காதிருக் கப்பெற்ற சீவன் முத்தர்களே, பின்பு நீவிர் கடத்தற்கரிய உலக மயக் கத்தையடைந்து துன்பப்பட்டு அம்மா என்று புலம்பாமல், சிவபுரத் துத் திருக்கோயிலின்கண் அழகிய பெரிய மாணிக்கங்கள் பதித்த திருக்கதவம் திறந்திருக்கும்போதே போய் அரவாபரணனாகிய இறைவனுடைய திருவடிகளை அடைவோம் வாருங்கள் என்பதாம். பெருமான் பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றீர்காள் என் றது சீவன் முத்த நிலையில் உள்ளவர்களை. அருமால் - கடத்தற்கரிய மயக்கம். ன்ப "பரிந்து வந்து பரனந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமாலுற்று'' (புணர்ச்சிப்.6) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இவ்வுலகத்திருந்தால் பின்பு நீவிர் வாசனாமலத்தினாலுளதாகும் அருமாலுற்று அம்மா என்று அழுங்கி அரற்ற நேரும். அங்ஙனம் நேராமைப் பொருட்டுச் சிவ புரத்துச் சென்று திருப்புயங்கன் திருத்தாளைச் சென்று சேர்வோம் என்று அருளினார். அழுங்கல் - வருந்தல். "அழுங்க னெஞ்சமொடு மூழங்கும் அத்த நீளிடை பழப்பிரிந் தோரே" குறுந். 307 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, சிவபுரத்துத் திருக்கதவம் என மாறிக் கூட்டுக. திருக்கதவம் என்றது சிவபுரத்துத் திருக்கோ யிற் கதவினை, "ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான் ஆனாத சீரார் சிவலோகந் தன்னுட் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளீருப்ப" திருக்கைலாய ஞான உலா (8, 9) எனப் பதினொராந் திருமுறையில் வருவன காண்க. கதவம் திறந்திருக் குப்போதே சென்று சேர்வோம் என முடிக்க திருமாலறியாத் திருத் தாள் என இயையும். 'திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை" (திருத்தெள் !) "அம்மால் திணிநிலம்,பிளந்துங் காணாச் சேவடி" (ச்சப், 8) என அடிகள் கூறுவன காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை திருக்கும்போதே போய் திருப்புயங்கன் திருமால் அறியா திருத் தாள் சேர்வோம் - அழகிய அரவாபரணனாகிய இறைவனுடைய திரு மாலும் பன்றியாய்ச் சென்றிடந்தும் காண்பரிய திருவடிகளை அடை வோம் வாருங்கள் . 1270 இவ்வுலகில் பெருமானது பேரானந்தத்தினின்றும் நீங்காதிருக் கப்பெற்ற சீவன் முத்தர்களே பின்பு நீவிர் கடத்தற்கரிய உலக மயக் கத்தையடைந்து துன்பப்பட்டு அம்மா என்று புலம்பாமல் சிவபுரத் துத் திருக்கோயிலின்கண் அழகிய பெரிய மாணிக்கங்கள் பதித்த திருக்கதவம் திறந்திருக்கும்போதே போய் அரவாபரணனாகிய இறைவனுடைய திருவடிகளை அடைவோம் வாருங்கள் என்பதாம் . பெருமான் பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றீர்காள் என் றது சீவன் முத்த நிலையில் உள்ளவர்களை . அருமால் - கடத்தற்கரிய மயக்கம் . ன்ப பரிந்து வந்து பரனந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமாலுற்று ' ' ( புணர்ச்சிப் .6 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இவ்வுலகத்திருந்தால் பின்பு நீவிர் வாசனாமலத்தினாலுளதாகும் அருமாலுற்று அம்மா என்று அழுங்கி அரற்ற நேரும் . அங்ஙனம் நேராமைப் பொருட்டுச் சிவ புரத்துச் சென்று திருப்புயங்கன் திருத்தாளைச் சென்று சேர்வோம் என்று அருளினார் . அழுங்கல் - வருந்தல் . அழுங்க னெஞ்சமொடு மூழங்கும் அத்த நீளிடை பழப்பிரிந் தோரே குறுந் . 307 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க சிவபுரத்துத் திருக்கதவம் என மாறிக் கூட்டுக . திருக்கதவம் என்றது சிவபுரத்துத் திருக்கோ யிற் கதவினை ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான் ஆனாத சீரார் சிவலோகந் தன்னுட் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளீருப்ப திருக்கைலாய ஞான உலா ( 8 9 ) எனப் பதினொராந் திருமுறையில் வருவன காண்க . கதவம் திறந்திருக் குப்போதே சென்று சேர்வோம் என முடிக்க திருமாலறியாத் திருத் தாள் என இயையும் . ' திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை ( திருத்தெள் ! ) அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி ( ச்சப் 8 ) என அடிகள் கூறுவன காண்க .