திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கூந்தலில் அணிந்த மாலையில் மொய்த்துள்ள வண்டுகள் நீரில் மூழ்கியாடும்போது மேலே எழுந்து ஒலித்தலின் குழல் மேல் வண் டார்ப்ப" என்றார். 532 பூத்திகழும் பொய்கை - தாமரை நெய்தல் நீலம் ஆம்பல் முத லிய நீர்ப்பூக்கள் விளங்குகின்ற பொய்கை. குடைந்து என்றது ஈண்டு கையாற்றுழாவி என்னும் பொருட்டு குடைந்து ஆடும் என இயையும். "புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் '" (சுந்.தே.16-3) என வருவனவுங் காண்க. இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து மகளிர் மூழ்குதலின் உடையான் பொற்பாதம் ஏத்தி " என்றார். ‘ கண்ணா ரமுதமு மாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடே லோரெம்பாவாய்" (திருவெம். - 18) என அடிகள் அருளியமை யாலுமறிக. இருநீர் எனக்கூட்டிப் பெரியநீர் எனவுரைக்க. சுனைநீர் ஆடு என் றது சுனைநீர் போலும் இனிமையும் தெளிவும் குளிர்ச்சியுமுடைய இப்பொய்கை நீரில் ஆடுவோமாக என்றவாறு. பொய்கை குடைந்து சுனைநீர் ஆடு என்பதற்கு பொய்கை நீரில் முழுகி, பின் சுனை நீரிலும் முழுகுவோமாக என உரைத்து இரு நீர்நிலைகளில் ஆடுதலாக உரைத்தல் பொருந்தாமையறிக. ஆடுவோமாக என்பது ஆடு என ஈறுகெட்டு நின்றது. இதன்கண் உடையான் பொற்பாதம் ஏத்தி " என்றதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 167. ( பைங்குவளைக் கார்ம செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன் றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயம் பூம்புனல்பாய்ந் தாடேலே ரெம்பாவாய். 12 ப - ரை. பை குவளை கார் மலரால் - இறைவியின் திருக்கண்கள் போன்று பசிய குவளையின் கரிய மலர்களையுடைமையாலும், செம் கமல் பை போதால் - இறைவனது திருமுகம் போன்று செந்தாமரை
திருவாசக ஆராய்ச்சியுரை கூந்தலில் அணிந்த மாலையில் மொய்த்துள்ள வண்டுகள் நீரில் மூழ்கியாடும்போது மேலே எழுந்து ஒலித்தலின் குழல் மேல் வண் டார்ப்ப என்றார் . 532 பூத்திகழும் பொய்கை - தாமரை நெய்தல் நீலம் ஆம்பல் முத லிய நீர்ப்பூக்கள் விளங்குகின்ற பொய்கை . குடைந்து என்றது ஈண்டு கையாற்றுழாவி என்னும் பொருட்டு குடைந்து ஆடும் என இயையும் . புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் ' ( சுந்.தே.16-3 ) என வருவனவுங் காண்க . இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து மகளிர் மூழ்குதலின் உடையான் பொற்பாதம் ஏத்தி என்றார் . கண்ணா ரமுதமு மாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடே லோரெம்பாவாய் ( திருவெம் . - 18 ) என அடிகள் அருளியமை யாலுமறிக . இருநீர் எனக்கூட்டிப் பெரியநீர் எனவுரைக்க . சுனைநீர் ஆடு என் றது சுனைநீர் போலும் இனிமையும் தெளிவும் குளிர்ச்சியுமுடைய இப்பொய்கை நீரில் ஆடுவோமாக என்றவாறு . பொய்கை குடைந்து சுனைநீர் ஆடு என்பதற்கு பொய்கை நீரில் முழுகி பின் சுனை நீரிலும் முழுகுவோமாக என உரைத்து இரு நீர்நிலைகளில் ஆடுதலாக உரைத்தல் பொருந்தாமையறிக . ஆடுவோமாக என்பது ஆடு என ஈறுகெட்டு நின்றது . இதன்கண் உடையான் பொற்பாதம் ஏத்தி என்றதனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 167 . ( பைங்குவளைக் கார்ம செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன் றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயம் பூம்புனல்பாய்ந் தாடேலே ரெம்பாவாய் . 12 - ரை . பை குவளை கார் மலரால் - இறைவியின் திருக்கண்கள் போன்று பசிய குவளையின் கரிய மலர்களையுடைமையாலும் செம் கமல் பை போதால் - இறைவனது திருமுகம் போன்று செந்தாமரை