திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

யாத்திரைப்பத்து மயக்கங்களின்றித் தெளிவடைவீராயின் ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள்; அகலிடத்தே சிவலோகக்கோன் திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அந்தோ அந்தோ அந்தோ - அகன்ற இந் நிலவுல கத்திலே சிவலோகநாதனாகிய திருப்புயங்கப் பெருமானின் வீடுபே றாகிய திருவருளைப் பெறவல்லார் யாவர்? ஐயோ ஐயோ ஐயோ உரிய காலத்தைத் தப்பவிடலாமா? 1273 புரண்டும் தொழுதும் புகழ்ந்தும் இப்பொழுதே வந்து இறைவ னுக்கு ஆட்படாதவர்களே, பின்னை ஆட்படலாமென எண்ணின் மருள்வீர்; உங்களை மதிப்பார் யார்? அறிவினுட் கலக்கமடைந்து மயங்க நிற்பீர்; மயக்கங்களினின்று தெளிவடைவீராயின் ஆட்படுத லாகிய இதனைச் செய்யுங்கள்; சிவலோகநாதனாகிய திருப்புயங்கப் பெருமானின் வீடுபேறாகிய திருவருளைப் பெறவல்லார் யாவர்? ஐயோ உரியகாலத்தைத் தப்பவிடலாமா? என்பதாம். புகழ்வாராய் என்பதிலுள்ள ஆய் என்பதனை புரள்வார் தொழு வார் என்பவற்றோடும் இயைக்க. இன்று என்பது இப்பொழுது என்ற பொருளையும் தந்து நின்றது. இன்றே வந்து ஆளாகாதீர் என் றது இன்றே வந்து ஆட்படல் வேண்டும் என்னும் குறிப்பிற்று. பின்னை என்பது பின்பு ஆட்படலாமெனக் கருதின் எனப் பொருள் தந்து நின்றது. இறைவனிடத்து அன்பில்லாதவரை மக்களும் மதி யாராதலின் 'மதிப்பாரார்' என்றார். தெருளுதல் - தெளிதல்."இரு ளுற ழிருங் கூந்தன் மகளிரோ டமைந்தவன், தெருளும் பண்பிலனாத லறிவேன்" (கலி.122:12-3) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. தெருள்வீராகில் என்றது தெருளுதலின் அருமை குறித்து நின்றது. இது செய்ம்மின் என்றது இன்றே வந்து ஆளாதலைச் செய்ம் மின் என்றவாறு. அகலிடம் - பூமி. "அகலிடத்தார் ஆசாரத்தைத், தன்னை மறந்தாள்" (திருநாவு: தே. 238-7) என்புழியும் இப் பொருட்டாதல் காண்சு. அந்தோ என்னும் அடுக்கு ஐயையோ இறைவனை அடைதற்குரிய இக்காலத்தினைக் கைவிடலாமோ என இரக்கமும் அருமையும் குறித்து நின்றது. இதன்கண், தெருள்வீராகில் இது செய்ம்மின், புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகலிடத்தே, என்பவற்றால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது. 10
யாத்திரைப்பத்து மயக்கங்களின்றித் தெளிவடைவீராயின் ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள் ; அகலிடத்தே சிவலோகக்கோன் திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அந்தோ அந்தோ அந்தோ - அகன்ற இந் நிலவுல கத்திலே சிவலோகநாதனாகிய திருப்புயங்கப் பெருமானின் வீடுபே றாகிய திருவருளைப் பெறவல்லார் யாவர் ? ஐயோ ஐயோ ஐயோ உரிய காலத்தைத் தப்பவிடலாமா ? 1273 புரண்டும் தொழுதும் புகழ்ந்தும் இப்பொழுதே வந்து இறைவ னுக்கு ஆட்படாதவர்களே பின்னை ஆட்படலாமென எண்ணின் மருள்வீர் ; உங்களை மதிப்பார் யார் ? அறிவினுட் கலக்கமடைந்து மயங்க நிற்பீர் ; மயக்கங்களினின்று தெளிவடைவீராயின் ஆட்படுத லாகிய இதனைச் செய்யுங்கள் ; சிவலோகநாதனாகிய திருப்புயங்கப் பெருமானின் வீடுபேறாகிய திருவருளைப் பெறவல்லார் யாவர் ? ஐயோ உரியகாலத்தைத் தப்பவிடலாமா ? என்பதாம் . புகழ்வாராய் என்பதிலுள்ள ஆய் என்பதனை புரள்வார் தொழு வார் என்பவற்றோடும் இயைக்க . இன்று என்பது இப்பொழுது என்ற பொருளையும் தந்து நின்றது . இன்றே வந்து ஆளாகாதீர் என் றது இன்றே வந்து ஆட்படல் வேண்டும் என்னும் குறிப்பிற்று . பின்னை என்பது பின்பு ஆட்படலாமெனக் கருதின் எனப் பொருள் தந்து நின்றது . இறைவனிடத்து அன்பில்லாதவரை மக்களும் மதி யாராதலின் ' மதிப்பாரார் ' என்றார் . தெருளுதல் - தெளிதல் . இரு ளுற ழிருங் கூந்தன் மகளிரோ டமைந்தவன் தெருளும் பண்பிலனாத லறிவேன் ( கலி .122 : 12-3 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . தெருள்வீராகில் என்றது தெருளுதலின் அருமை குறித்து நின்றது . இது செய்ம்மின் என்றது இன்றே வந்து ஆளாதலைச் செய்ம் மின் என்றவாறு . அகலிடம் - பூமி . அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் ( திருநாவு : தே . 238-7 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்சு . அந்தோ என்னும் அடுக்கு ஐயையோ இறைவனை அடைதற்குரிய இக்காலத்தினைக் கைவிடலாமோ என இரக்கமும் அருமையும் குறித்து நின்றது . இதன்கண் தெருள்வீராகில் இது செய்ம்மின் புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகலிடத்தே என்பவற்றால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது . 10