திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வாராவழி - மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறி."கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாராநெறி' (குறள் 356) என்றார் திருவள்ளுவரும். மாறின்றி அமைந்தன்றே என முடியும். ஆரா - தெவிட்டாத. "ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே" (சிவபுரா. 67) என்புழியும் இப்பொருட்டாய் நின் றது. ஆராத என்பது ஈறுகெட்டது. அமைந்தன்று - பொருந் திற்று. ''ஐய வமைந்தன் றனைத்தாகப் புக்கீமோ' (கலி 78-24) என்புழிப்போல. என் சிந்தை மேய ஒருத்தன் - என் உள்ளத்திற் பொருந்திய ஒப்பற்றவன். 1286 "ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை" ''ஒப்பாக வொப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை" அம்மானை 7 அம்மானை 11 "சிந்தை சேர் ஐயன்” தசாங்கம் 4 சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" கோயிற்றிரு.10 என வருவன காண்க. பெருக்கும் ஒளி என்றது சிவஞானத்தினை. 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி" (பிடித்த, 9) என வருதல் காண்க. இதன்கண், ஒளி வந்து வாரா வழியருளி ஆரா அமுதாய் எனக்கு அமைந்தன்று என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 622. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை. 7 ப-ரை ; யாவர்க்கும் மேலாம் அளவு இலா சீர் உடையான் எல்லார்க்கும் மேலாகிய எல்லையற்ற சிறப்பினையுடையவனே, என் எம்பெருமான் - என்னுடைய எம்பெருமானே, யாவர்க்கும் கீழாம் அடியேனை - எல்லார்க்கும் கீழ்ப்பட்ட அடியேனை. யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு - எவரும் பெற்று அனுபவித்த றியப் பெறாத பேரின்பத்தினுள் வைத்தருளிய உனக்கு, செய்யும் வகை மற்று அறியேன் - கைம்மாறாகச் செய்யும் விதம் பிறிதொன்ற னையும் அறியேன்.
திருவாசக ஆராய்ச்சியுரை வாராவழி - மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறி . கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாராநெறி ' ( குறள் 356 ) என்றார் திருவள்ளுவரும் . மாறின்றி அமைந்தன்றே என முடியும் . ஆரா - தெவிட்டாத . ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ( சிவபுரா . 67 ) என்புழியும் இப்பொருட்டாய் நின் றது . ஆராத என்பது ஈறுகெட்டது . அமைந்தன்று - பொருந் திற்று . ' ' ஐய வமைந்தன் றனைத்தாகப் புக்கீமோ ' ( கலி 78-24 ) என்புழிப்போல . என் சிந்தை மேய ஒருத்தன் - என் உள்ளத்திற் பொருந்திய ஒப்பற்றவன் . 1286 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை ' ' ஒப்பாக வொப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை அம்மானை 7 அம்மானை 11 சிந்தை சேர் ஐயன் தசாங்கம் 4 சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் கோயிற்றிரு .10 என வருவன காண்க . பெருக்கும் ஒளி என்றது சிவஞானத்தினை . ' ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி ( பிடித்த 9 ) என வருதல் காண்க . இதன்கண் ஒளி வந்து வாரா வழியருளி ஆரா அமுதாய் எனக்கு அமைந்தன்று என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 622. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை . 7 - ரை ; யாவர்க்கும் மேலாம் அளவு இலா சீர் உடையான் எல்லார்க்கும் மேலாகிய எல்லையற்ற சிறப்பினையுடையவனே என் எம்பெருமான் - என்னுடைய எம்பெருமானே யாவர்க்கும் கீழாம் அடியேனை - எல்லார்க்கும் கீழ்ப்பட்ட அடியேனை . யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு - எவரும் பெற்று அனுபவித்த றியப் பெறாத பேரின்பத்தினுள் வைத்தருளிய உனக்கு செய்யும் வகை மற்று அறியேன் - கைம்மாறாகச் செய்யும் விதம் பிறிதொன்ற னையும் அறியேன் .