திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்தபோது அவன் திரு வடிகளைக்கண்டு களிப்படைந்த கண்கள், இனி அந்நிகழ்ச்சி நிகழும் தன்மை இன்மையால் களித்தல், உளதாகாமையின் "கண்கள் களிப் பன வாகாதே" என்றார். 1302 இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையாலும், இறைவன் என் உணர்வின்கண் வெளிப்பட்டு நிலைபெற்றமையானும் காரிகையார் கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படுமாகாதே" என்றார். நால்வகைத் தோற்றம் எழுவகைப்பிறப்பு எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் என்ற பிறப்புக்கள் இனித்தமக்கு இன்ப வுலகிலும் துன்பவுலகிலுமின்மையின் "மண்களில் வந்து பிறந்திடு மாறு என்றார். மண்களில் - பூமியினிடங்களில், இடைவிடாத இறையருள் அனுபவத்தில் நிற்கும் சீவன்முத்தர்க்கு இறைவனை மறத் தல் நிகழாமையின், அம்மறத்தலாலுளதாகும் பிறப்பும் இன்மையின் 'பிறந்திடுமாறு மறந்திடுமாகாதே' என்றார். மாலறியாப் பாதம் திருமாலறியாத திருவடி திருமாலும் பன்றியாச் சென்றுணராத் திருவடி'' (தெள் 1) எனவும், ''மால் திணி நிலம் பிளந்து காணாச் சேவடி" ( அச்ச 5) எனவும் அடிகள் அருளிய மையுங் காண்க. மலர்ப்பாதம் - செந்தாமரை மலர் போலுந் திருவடி. 'செழுங்கமலத் திரளன நின் சேவடி' (அடைக்கலப். 1) என வும் "தாளுடைச் செங்கமலத் தடங்கொள் சேவடியார் போலும்" (தேவாரம் நாவு. 68-7) எனவும் வருவன காண்க. சீவன் முத்தநிலைக் கண் தான் வேறு இறைவன்வேறு என இறைவனை வழிபடுதலின்மை யின் "பாதம் இரண்டும் வணங்குது மாகாதே" என்றார். பண் களி கூர்தரு பாடல்-பண்ணமைந்த களிப்புமிகு பாடல். 'பண் சுமந்த பாடல்" (அமமானை 8) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடுதலும் ஆனந்தக்கூத்தாடுதலும் சீவன்முத்த நிலையினர்க்கு இல்லை என்றார். அடிகள் "தென்னாடுடைய சிவன்'' என (போற்றித். 164) முன் னர்க் குறித்தமையின் அதனை அநுவதித்துப் ''பாண்டி நன்னாடுடை யான்'' என்றார். படையாட்சி - படைவீடு. முருகப்பெருமானது சிறந்த தலங்க ளான திருப்பரங்குன்றம் முதலிய ஆறும் அப்பெருமானது திருப்படை வீடு என எங்ஙனம் கூறப்படுகின்றனவோ அங்ஙனமே இறைவனது சிறப்புடைய தலங்கள் திருப்படையாட்சிகளாகும். படைகளின் வீரச்
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளி வந்தபோது அவன் திரு வடிகளைக்கண்டு களிப்படைந்த கண்கள் இனி அந்நிகழ்ச்சி நிகழும் தன்மை இன்மையால் களித்தல் உளதாகாமையின் கண்கள் களிப் பன வாகாதே என்றார் . 1302 இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையாலும் இறைவன் என் உணர்வின்கண் வெளிப்பட்டு நிலைபெற்றமையானும் காரிகையார் கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படுமாகாதே என்றார் . நால்வகைத் தோற்றம் எழுவகைப்பிறப்பு எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் என்ற பிறப்புக்கள் இனித்தமக்கு இன்ப வுலகிலும் துன்பவுலகிலுமின்மையின் மண்களில் வந்து பிறந்திடு மாறு என்றார் . மண்களில் - பூமியினிடங்களில் இடைவிடாத இறையருள் அனுபவத்தில் நிற்கும் சீவன்முத்தர்க்கு இறைவனை மறத் தல் நிகழாமையின் அம்மறத்தலாலுளதாகும் பிறப்பும் இன்மையின் ' பிறந்திடுமாறு மறந்திடுமாகாதே ' என்றார் . மாலறியாப் பாதம் திருமாலறியாத திருவடி திருமாலும் பன்றியாச் சென்றுணராத் திருவடி ' ' ( தெள் 1 ) எனவும் ' ' மால் திணி நிலம் பிளந்து காணாச் சேவடி ( அச்ச 5 ) எனவும் அடிகள் அருளிய மையுங் காண்க . மலர்ப்பாதம் - செந்தாமரை மலர் போலுந் திருவடி . ' செழுங்கமலத் திரளன நின் சேவடி ' ( அடைக்கலப் . 1 ) என வும் தாளுடைச் செங்கமலத் தடங்கொள் சேவடியார் போலும் ( தேவாரம் நாவு . 68-7 ) எனவும் வருவன காண்க . சீவன் முத்தநிலைக் கண் தான் வேறு இறைவன்வேறு என இறைவனை வழிபடுதலின்மை யின் பாதம் இரண்டும் வணங்குது மாகாதே என்றார் . பண் களி கூர்தரு பாடல் - பண்ணமைந்த களிப்புமிகு பாடல் . ' பண் சுமந்த பாடல் ( அமமானை 8 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடுதலும் ஆனந்தக்கூத்தாடுதலும் சீவன்முத்த நிலையினர்க்கு இல்லை என்றார் . அடிகள் தென்னாடுடைய சிவன் ' ' என ( போற்றித் . 164 ) முன் னர்க் குறித்தமையின் அதனை அநுவதித்துப் ' ' பாண்டி நன்னாடுடை யான் ' ' என்றார் . படையாட்சி - படைவீடு . முருகப்பெருமானது சிறந்த தலங்க ளான திருப்பரங்குன்றம் முதலிய ஆறும் அப்பெருமானது திருப்படை வீடு என எங்ஙனம் கூறப்படுகின்றனவோ அங்ஙனமே இறைவனது சிறப்புடைய தலங்கள் திருப்படையாட்சிகளாகும் . படைகளின் வீரச்