திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1312 திருவாசக ஆராய்ச்சியுரை uL அணி - அணிகலம். அழகு ஒப்பனை திரட்சி என்ற பொருள்களு மமையும். ஆகம் - மார்பு. அணைதல் தழுவுதல், எனது தனங்கள் இறைவனது திருமார்பை அணைந்து ஒன்றுபட்டு இன்புறுதலாவது உயிர் இறைவனது திருவருள் வழியில் நிற்றல். இறைவனோடு உயிர் அத்துவிதமாகக் கலந்து தன்னை மறந்து இறையின்பம் ஒன்றையே அனுபவிக்கு நிலையில் அந்நிலை நிகழாமையின் 'என் முலை ஆகம் என்றார். இனி, 'காரிகையார் கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படுமாகாதே' என்பதனோ டொப்ப. என் அணியார் முலை ஆகம் அணைந்து உடன் இன்புறு மாகாதே' என்பதற்கு என்னை அடைந்துள்ள மகளிரது தனங்கள் என் ஆகத்தைத் தழுவி ஒன்று பட்டு இன்புறுதல் நிகழாது வும் உரைக்கலாம். அணைந்து உடன் இன்புறுமாகாதே என எல்லை - அளவு. இறைவன் திருவருள் எல்லையிலாத பெரிய கடல் போன்றமையின். 'எல்லையில் மாக் கருணைக்கடல்' என்றார். ""மாக் கருணைக் கடலாய்" (வார்த்தை 5) என வருதலுங் காண்க அத்து விதக் கலப்பில் மகிழும் இன்பநிலைக்கண் 'கருணைக்கடல் இன்று இனிது ஆடுதுமாகாது' என்றார். யோக நெறியில் நிற்பார் இடைபிங்கலையிற் செல்லும் உயிர்ப்பை சுழுமுனைவழியிற் செலுத்தி அப்போது அங்கே நிகழும் நாதத்து டன் மேலே சென்று துவாதசாந்தப் பெருவெளியில் அழுந்திக் கிடப் பர். அந்நிலை சுத்தாத்துவித இன்பநிலைக்கண் நிகழாமையின் நன் பணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே' என்றார். 'முக்கு ணம்புல னைந்துட் னடக்கி மூல வாயுவை யெழுப்பிரு வழியைச் சிக் கெ னும்படி யடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த் தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டரு டரும்பெரு வெளிக்கே புக்க ழுந்தின ரெமதுருப் பெறுவார்" (திருப்பெருந்துறை 70) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க. இதனால் சுத்தாத்துவித இன்பநிலைக்கண் யோகநிலை நிகழாது என்றார். நாதன் அணித்திருநீறு - இறைவனது அழகிய திருவெண்ணீறு. 'திருவால வாயான் திருநீறே' (தே. ஞா. 20.-) என வருதலுங் காண்க: அணி - அழகு, 'பிறங்கு நீர் சடைக்கரந்தா னணியன்ன நின்னிறம் " (கலி 150-9) என்புழியு: இப்பொருட்டாதல் காண்க. அணித்தி ருநீறு என ஒற்றுமிச்கடையின் அணிகின்ற திருநீறு எனப்
1312 திருவாசக ஆராய்ச்சியுரை uL அணி - அணிகலம் . அழகு ஒப்பனை திரட்சி என்ற பொருள்களு மமையும் . ஆகம் - மார்பு . அணைதல் தழுவுதல் எனது தனங்கள் இறைவனது திருமார்பை அணைந்து ஒன்றுபட்டு இன்புறுதலாவது உயிர் இறைவனது திருவருள் வழியில் நிற்றல் . இறைவனோடு உயிர் அத்துவிதமாகக் கலந்து தன்னை மறந்து இறையின்பம் ஒன்றையே அனுபவிக்கு நிலையில் அந்நிலை நிகழாமையின் ' என் முலை ஆகம் என்றார் . இனி ' காரிகையார் கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படுமாகாதே ' என்பதனோ டொப்ப . என் அணியார் முலை ஆகம் அணைந்து உடன் இன்புறு மாகாதே ' என்பதற்கு என்னை அடைந்துள்ள மகளிரது தனங்கள் என் ஆகத்தைத் தழுவி ஒன்று பட்டு இன்புறுதல் நிகழாது வும் உரைக்கலாம் . அணைந்து உடன் இன்புறுமாகாதே என எல்லை - அளவு . இறைவன் திருவருள் எல்லையிலாத பெரிய கடல் போன்றமையின் . ' எல்லையில் மாக் கருணைக்கடல் ' என்றார் . மாக் கருணைக் கடலாய் ( வார்த்தை 5 ) என வருதலுங் காண்க அத்து விதக் கலப்பில் மகிழும் இன்பநிலைக்கண் ' கருணைக்கடல் இன்று இனிது ஆடுதுமாகாது ' என்றார் . யோக நெறியில் நிற்பார் இடைபிங்கலையிற் செல்லும் உயிர்ப்பை சுழுமுனைவழியிற் செலுத்தி அப்போது அங்கே நிகழும் நாதத்து டன் மேலே சென்று துவாதசாந்தப் பெருவெளியில் அழுந்திக் கிடப் பர் . அந்நிலை சுத்தாத்துவித இன்பநிலைக்கண் நிகழாமையின் நன் பணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே ' என்றார் . ' முக்கு ணம்புல னைந்துட் னடக்கி மூல வாயுவை யெழுப்பிரு வழியைச் சிக் கெ னும்படி யடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த் தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டரு டரும்பெரு வெளிக்கே புக்க ழுந்தின ரெமதுருப் பெறுவார் ( திருப்பெருந்துறை 70 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க . இதனால் சுத்தாத்துவித இன்பநிலைக்கண் யோகநிலை நிகழாது என்றார் . நாதன் அணித்திருநீறு - இறைவனது அழகிய திருவெண்ணீறு . ' திருவால வாயான் திருநீறே ' ( தே . ஞா . 20.- ) என வருதலுங் காண்க : அணி - அழகு ' பிறங்கு நீர் சடைக்கரந்தா னணியன்ன நின்னிறம் ( கலி 150-9 ) என்புழியு : இப்பொருட்டாதல் காண்க . அணித்தி ருநீறு என ஒற்றுமிச்கடையின் அணிகின்ற திருநீறு எனப்