திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி இறைவன் ஆட்கொள்ள வெளிப்பட்டு எழுந்தருளி வந்தபோது மெய்யடியார்கள் கைகளைக் கூப்பி மழைபோல மலர்களைச் சொரிந் தமை, இனி இறைவன் ஆட்கொள்ள வருதலின்மையால் நிகழா மையின் 'பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே'' என்றார். 1319 api மின்னலைப்போல நுடங்கும் மின்னியல் நுண்ணிடையார்கள் நுண்ணிய இடையையுடைய மகளிர்: "மீன்னேர் நுடங்கிடைச் செந் துவர்வாய் வெண்ணகையீர்" (தெள் 8) "மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்" (கோவை 58} என அடி கள் அருளியமையுங் காண்க. சீவன் முத்த நிலைக்கண் மகளிரைப் பற்றிய எண்ணம் தோன்றாமையின், ''நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படுமாகாதே' என்றார். 'காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாதே' (திருப்படை -1) என அடிகள் அருளி யமையுங் காண்க. முரலுதல் - ஒலித்தல், "சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை" (சதகம் 16) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.வீணை ஒலித்த லால் எழுகின்ற இனிய ஓசையில் ஈடுபட்டு இன்பம் நுகர்தல் சீவன் முத்த நிலைக்கண் இன்மையின் "வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே" என்றார். அடியார் திருவடி தன்தலையிற் பொருந்த வணங்குதலின் 'அடி யார் அடி என்றலைமீது தழைத்தல்' என்றார்." மன்னுகாழியர் வள் ளலார் பொன்னடி, சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்" (பெரிய குலச் சிறை. 10) என்பதும் ஞானசம்பந்தரை அப்பர் வணங்கியதும் ஈண்டறியற்பாலன. தழைத்தல் - விளங்குதல். மிகுதலு மாம். சீவன் முத்த நிலைக்கண் அடியார் வணக்கம் இன்மையின் "அடியாரடி என்தலைமீது தழைப்பனவாகாதே" என்றார். www தான் அடியோம் உய வந்துடன் தலைப்படுமாகாதே என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. அடியோம் எனப் பன்மை கூறி யது அடிகள் தம்மைப்போலச் சீவன் முத்த நிலையையடைந்தோரை யும் உளப்படுத்தியாகும். தலைப்படுதல் - கூடுதல், "ஏதமில்லா விடந்தலைப் படுத்தினன்" (சிலப் 16 - 16) என்புழி,தலைப்படுத்தல். கூட்டுதல்.(அடி - நல்) எனப்பொருள் உரைத்தமை காண்க. எதிர்ப்படுதலுமாம். இன்னியம் - இனிய வாச்சியங்கள் அரிக்கூ டின்னியங் கறங்க' (மதுரைக். 612) இயம் - வாத்தியம்? அவை : தோல் துளை நரம்பு கஞ் சம் மிடறு என ஐந்து வகைப்படும்: இறைவன் எழுந்தருளுங்கால்
திருப்படையாட்சி இறைவன் ஆட்கொள்ள வெளிப்பட்டு எழுந்தருளி வந்தபோது மெய்யடியார்கள் கைகளைக் கூப்பி மழைபோல மலர்களைச் சொரிந் தமை இனி இறைவன் ஆட்கொள்ள வருதலின்மையால் நிகழா மையின் ' பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே ' ' என்றார் . 1319 api மின்னலைப்போல நுடங்கும் மின்னியல் நுண்ணிடையார்கள் நுண்ணிய இடையையுடைய மகளிர் : மீன்னேர் நுடங்கிடைச் செந் துவர்வாய் வெண்ணகையீர் ( தெள் 8 ) மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர் ( கோவை 58 } என அடி கள் அருளியமையுங் காண்க . சீவன் முத்த நிலைக்கண் மகளிரைப் பற்றிய எண்ணம் தோன்றாமையின் ' ' நுண்ணிடையார்கள் கருத்து வெளிப்படுமாகாதே ' என்றார் . ' காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாதே ' ( திருப்படை -1 ) என அடிகள் அருளி யமையுங் காண்க . முரலுதல் - ஒலித்தல் சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை ( சதகம் 16 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.வீணை ஒலித்த லால் எழுகின்ற இனிய ஓசையில் ஈடுபட்டு இன்பம் நுகர்தல் சீவன் முத்த நிலைக்கண் இன்மையின் வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே என்றார் . அடியார் திருவடி தன்தலையிற் பொருந்த வணங்குதலின் ' அடி யார் அடி என்றலைமீது தழைத்தல் ' என்றார் . மன்னுகாழியர் வள் ளலார் பொன்னடி சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் ( பெரிய குலச் சிறை . 10 ) என்பதும் ஞானசம்பந்தரை அப்பர் வணங்கியதும் ஈண்டறியற்பாலன . தழைத்தல் - விளங்குதல் . மிகுதலு மாம் . சீவன் முத்த நிலைக்கண் அடியார் வணக்கம் இன்மையின் அடியாரடி என்தலைமீது தழைப்பனவாகாதே என்றார் . www தான் அடியோம் உய வந்துடன் தலைப்படுமாகாதே என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . அடியோம் எனப் பன்மை கூறி யது அடிகள் தம்மைப்போலச் சீவன் முத்த நிலையையடைந்தோரை யும் உளப்படுத்தியாகும் . தலைப்படுதல் - கூடுதல் ஏதமில்லா விடந்தலைப் படுத்தினன் ( சிலப் 16 - 16 ) என்புழி தலைப்படுத்தல் . கூட்டுதல் . ( அடி - நல் ) எனப்பொருள் உரைத்தமை காண்க . எதிர்ப்படுதலுமாம் . இன்னியம் - இனிய வாச்சியங்கள் அரிக்கூ டின்னியங் கறங்க ' ( மதுரைக் . 612 ) இயம் - வாத்தியம் ? அவை : தோல் துளை நரம்பு கஞ் சம் மிடறு என ஐந்து வகைப்படும் : இறைவன் எழுந்தருளுங்கால்