திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி 132 1 இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாது - பல தன்மைகளை யுடைய சித்த விருத்திகள் கெடும்படி தோன்றிய பரத்துக்குப் பரம் ஆகிய பொருள் தோன்றுதல் உளதாகாது; பண்டு அறியாத பர அநு பவங்கள் பரந்து எழும் ஆகாது - முன்னர் அறியப்படாத மேலான அநுபவங்கள் விரிந்து தோன்றுதல் உளதாகாது; வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாது - வில்லின் இயல்பையு டைய நல்ல நெற்றியையுடைய மகளிரது மயக்கங்கள் இப்பொழுது போல் மீளவும் தோன்றுதல் உளதாகாது; விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாது - தேவர்களும் அறியாத சிறந்த பொருள் இதுவெனச் சுட்டியுணரப்படும் பரமாசாரியனாகத் தோன்றுதல் உளதாகாது; எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாது - அளவில்லாதனவாகிய இறைவனது எண் குணங் களான்வை எம்மை வந்து அடைந்திடுதல் உளதாகாது. சந்திரனை முடிமணியாக அணிந்த இறைவன் அடியோங்களை ஆட் கொள்ளும் பொருட்டு என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால், இத்தன்மைத்தெனச் சொல்லுதற்கியலாதபடி எழுகின்ற சிலம்புமணியின் ஓசை இன்பந்தருதலும் என் உள்ளத்தில் நிலைபெற்ற இறைவனது ஒளிவடிவம் தொடர்ந்து தோன்றுதலும். பல தன்மைகளையுடைய சித்த விருத்திகள் கெடும்படி தோன்றிய பராபரமாகிய பொருள் தோன்றுதலும், பண்டு அறியப்படாத மேலான அநுபவங்கள் விரிந்து தோன்றுதலும், மகளிரது மயக்கங் கள் இப்பொழுது போல் மீளவும் தோன்றுதலும், தேவர்களும் அறி யாத சிறந்த பொருள் இதுவெனச் சுட்டியுணரப்படும் பரமாசாரி யனாகத் தோன்றுதலும் அளவில்லாதனவாகிய இறைவனது எண் குணங்கள் எம்மை வந்து அடைந்திடுதலும் உளவாகா என்பதாம். தூமணி ஓசை என்றது இறைவனது திருவடிக்கண் அணிந்த தூய சிலம்பிலுள்ள மாணிக்கமணியால் எழுகின்ற ஓசை, சீவன் முத்தநிலையிலுள்ளவர்க்கு அந்நிலைக்குக் கீழ்ப்பட்ட யோக நெறி நிற்பார்க்குக் கேட்கும் திருச்சிலம்பொலி கேட்டலின்மையின் அஃதூமணியோசை சுவைதரும் ஆகாது" என்றார். வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்" திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அருந்து ணைவனா யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே" கீர்த்தி 52-3 அற்புதம் -4
திருப்படையாட்சி 132 1 இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாது - பல தன்மைகளை யுடைய சித்த விருத்திகள் கெடும்படி தோன்றிய பரத்துக்குப் பரம் ஆகிய பொருள் தோன்றுதல் உளதாகாது ; பண்டு அறியாத பர அநு பவங்கள் பரந்து எழும் ஆகாது - முன்னர் அறியப்படாத மேலான அநுபவங்கள் விரிந்து தோன்றுதல் உளதாகாது ; வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாது - வில்லின் இயல்பையு டைய நல்ல நெற்றியையுடைய மகளிரது மயக்கங்கள் இப்பொழுது போல் மீளவும் தோன்றுதல் உளதாகாது ; விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாது - தேவர்களும் அறியாத சிறந்த பொருள் இதுவெனச் சுட்டியுணரப்படும் பரமாசாரியனாகத் தோன்றுதல் உளதாகாது ; எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாது - அளவில்லாதனவாகிய இறைவனது எண் குணங் களான்வை எம்மை வந்து அடைந்திடுதல் உளதாகாது . சந்திரனை முடிமணியாக அணிந்த இறைவன் அடியோங்களை ஆட் கொள்ளும் பொருட்டு என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப் பெற்றால் இத்தன்மைத்தெனச் சொல்லுதற்கியலாதபடி எழுகின்ற சிலம்புமணியின் ஓசை இன்பந்தருதலும் என் உள்ளத்தில் நிலைபெற்ற இறைவனது ஒளிவடிவம் தொடர்ந்து தோன்றுதலும் . பல தன்மைகளையுடைய சித்த விருத்திகள் கெடும்படி தோன்றிய பராபரமாகிய பொருள் தோன்றுதலும் பண்டு அறியப்படாத மேலான அநுபவங்கள் விரிந்து தோன்றுதலும் மகளிரது மயக்கங் கள் இப்பொழுது போல் மீளவும் தோன்றுதலும் தேவர்களும் அறி யாத சிறந்த பொருள் இதுவெனச் சுட்டியுணரப்படும் பரமாசாரி யனாகத் தோன்றுதலும் அளவில்லாதனவாகிய இறைவனது எண் குணங்கள் எம்மை வந்து அடைந்திடுதலும் உளவாகா என்பதாம் . தூமணி ஓசை என்றது இறைவனது திருவடிக்கண் அணிந்த தூய சிலம்பிலுள்ள மாணிக்கமணியால் எழுகின்ற ஓசை சீவன் முத்தநிலையிலுள்ளவர்க்கு அந்நிலைக்குக் கீழ்ப்பட்ட யோக நெறி நிற்பார்க்குக் கேட்கும் திருச்சிலம்பொலி கேட்டலின்மையின் அஃதூமணியோசை சுவைதரும் ஆகாது என்றார் . வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அருந்து ணைவனா யாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே கீர்த்தி 52-3 அற்புதம் -4