திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி வில்லியல் நன்னுதலார் என்றது வில்லின் இயல்பையுடைய நல்லநெற்றியையுடைய மக்ளிர் என்றவாறு. "வின்னிறவாணுதல் வேனிறக்கண் மெல்லியலை" (58) எனவும், 'விற்படுவாணுதலாள்" (348) எனவும் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையுங் காண்க. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட விடத்தும் பயிற்சி வயத்தால் உள்ளத்தில் உலகியல் இன்பவுணர்வுகள் உளவாயினும் அவை இடை விடாத தியானத்தாலும் மெய்யடியாருடைய சேர்க்கையினாலும் நீங்குமாதலின் "நன்னுதலார் மயல் இன்று விளைந்திடுமாகாதே" என்றார். விண்ணவரும் அறியாத விழுப்பொருள் - தேவர்களுமறியாத விழுப்பொருள் 'தேவர்கோ வறியாத தேவ தேவன்" "வான நாட ரும் அறியொணாதநீ" (சத)30;95) "தேவரு மறியாச் சிவன்" (அண்ட 56) என வருவன காண்க. விண்ணவரும் - உம்மை உயர்வு சிறப்பு. விழுப்பொருள் - மேலான பொருள். '"விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளே" (திருப்பள்ளி. 9) என வருத லுங் காண்க. 1323 இப்பொருள் என்றது அடிகளுக்குச் சுட்டியுணரப்படும் பொரு ளாகத் தோன்றிய பரமாசாரியத் திருவுருவை. "இது அவன் திரு வுரு இவனவன் எனவே எங்களை யாண்டுகொண் டிங்கெழுந்தரு ளும்..... திருப்பெருந்துறை மன்னா" (பள்ளி 7) என வந்தமை காண்க. இவ்வாறு நிகழுதல் சீவன்முத்த நிலைக்கண் நிகழாது என்பார், 'இப் பொருளாகாதே' என்றார். எண் குணங்கள்: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங் களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை முதலியன. இவற்றின் பரப்பு அளவின்மையின் "எல்லையிலாத எண்குணம்" என்றார். ஞானத்திவே யோகநிலைக் கண் உயிரிடத்து வியாபிக்கும் இறைவனது எண்குணங்கள் ஞானத் தில் ஞானநிலையாகிய சீவன் முத்தநிலைக்கண் தோன்றாமையின் "எண்குணமானவை எய்துவதாகாதே" என்றார். உயிர் எண்குண மடைதல், oma "இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணஞ் செய்த ஈசனே" (திருவா. திருக்கழுக் 7 ) (நாவு.311-10 ''கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலுங் குணமாகக் கொள்ளோ மெண் குணத்துளோமே" என வருவனவற்றாலுமறியப்படும்;
திருப்படையாட்சி வில்லியல் நன்னுதலார் என்றது வில்லின் இயல்பையுடைய நல்லநெற்றியையுடைய மக்ளிர் என்றவாறு . வின்னிறவாணுதல் வேனிறக்கண் மெல்லியலை ( 58 ) எனவும் ' விற்படுவாணுதலாள் ( 348 ) எனவும் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையுங் காண்க . இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட விடத்தும் பயிற்சி வயத்தால் உள்ளத்தில் உலகியல் இன்பவுணர்வுகள் உளவாயினும் அவை இடை விடாத தியானத்தாலும் மெய்யடியாருடைய சேர்க்கையினாலும் நீங்குமாதலின் நன்னுதலார் மயல் இன்று விளைந்திடுமாகாதே என்றார் . விண்ணவரும் அறியாத விழுப்பொருள் - தேவர்களுமறியாத விழுப்பொருள் ' தேவர்கோ வறியாத தேவ தேவன் வான நாட ரும் அறியொணாதநீ ( சத ) 30 ; 95 ) தேவரு மறியாச் சிவன் ( அண்ட 56 ) என வருவன காண்க . விண்ணவரும் - உம்மை உயர்வு சிறப்பு . விழுப்பொருள் - மேலான பொருள் . ' விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளே ( திருப்பள்ளி . 9 ) என வருத லுங் காண்க . 1323 இப்பொருள் என்றது அடிகளுக்குச் சுட்டியுணரப்படும் பொரு ளாகத் தோன்றிய பரமாசாரியத் திருவுருவை . இது அவன் திரு வுரு இவனவன் எனவே எங்களை யாண்டுகொண் டிங்கெழுந்தரு ளும் ..... திருப்பெருந்துறை மன்னா ( பள்ளி 7 ) என வந்தமை காண்க . இவ்வாறு நிகழுதல் சீவன்முத்த நிலைக்கண் நிகழாது என்பார் ' இப் பொருளாகாதே ' என்றார் . எண் குணங்கள் : தன் வயத்தனாதல் தூயவுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல் முற்றுமுணர்தல் இயல்பாகவே பாசங் களினீங்குதல் பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பி லின்பமுடைமை முதலியன . இவற்றின் பரப்பு அளவின்மையின் எல்லையிலாத எண்குணம் என்றார் . ஞானத்திவே யோகநிலைக் கண் உயிரிடத்து வியாபிக்கும் இறைவனது எண்குணங்கள் ஞானத் தில் ஞானநிலையாகிய சீவன் முத்தநிலைக்கண் தோன்றாமையின் எண்குணமானவை எய்துவதாகாதே என்றார் . உயிர் எண்குண மடைதல் oma இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணஞ் செய்த ஈசனே ( திருவா . திருக்கழுக் 7 ) ( நாவு.311-10 ' ' கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலுங் குணமாகக் கொள்ளோ மெண் குணத்துளோமே என வருவனவற்றாலுமறியப்படும் ;