திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1332 திருவாசக ஆராய்ச்சியுரை கும் கலப்பு இல்லாமலும், அறிவு இன்றி - மெய்யறிவு இல்லாமலும், தோலின் பாவை கூத்தாட்டாய் சுழன்று விழுந்து கிடப்பேனை- தோற்பாவையின் கூத்தாட்டுப் போலச் சுற்றி அலைந்து விழுந்து பயனில்லாமற் கிடக்கின்ற என்னை, மாலும் காட்டி வழிகாட்டி. மயக்கத்தைத் தரும் உலகியல் நெறியினை அறியச் செய்து அவ்வுல கியல் நெறியினின்றும் நீங்கும் நெறியினைக் காட்டி, வாரா உலகம் நெறி ஏற கோலம் காட்டி ஆண்டானை - மீளப் பிறவிக்கு வாராத வீட்டுலக நெறியிற் செல்லுமாறு தனது திருக்கோலத்தினைக் காட்டி என்னை ஆட்கொண்டருளிய இறைவனை, கொடியேன் கூடு வது என்றோ -இப்பொழுதே கூடப் பெறாத தீவினையுடையேன் அடை வது எந்நாளோ? சீலமின்றி நோன்பின்றி செறிவின்றி அறிவின்றித் தோற்பாவை யின் கூத்தாட்டுப்போலச் சுழன்று அலைந்து விழுந்து பயனில்லா மற் கிடக்கின்ற என்னை, மயக்கத்தைத் தரும் உலகியல் நெறியினை அறியச் செய்து அந்நெறியினின்றும் நீங்கும் நெறியினைக் காட்டி வாராவுலக நெறியிற் செல்லுமாறு தனது திருக்கோலத்தினைக் காட்டி என்னை ஆட்கொண்டருளிய இறைவனைக் கொடியேன் சென்று கூடுவது எந்நாளோ? என்பதாம். சீலம் - நல்லொழுக்கம். என்றது * சதாசாரம். நோன்பு- கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியன. செறிவு - நெருக் கம்; கலப்பு. அது அன்பினால் இறைவனிடத்தும் எனைய உயிர்களி டத்தும் உளதாவது. அறிவு ஈண்டு மெய்யறிவைக் குறித்தது. சீலம் நோன்பு அறிவு செறிவு என்பன உலகியல் நெறியினின்றும் நீங்குதற்குரிய வழிகளாகும். தோலாகிய பாவையைக் கூத்தாட்டு வார் கயிற்றினால் ஆட்டுவர் அக்கயிற்றினை விட்டவழி அப்பாவை சுற்றி விழுந்து கூத்தாகிய பயனின்றிக் கிடப்பது போலத் தம் நிலைமை இருத்தலின் "தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை'' என்றார். மால் காட்டுதல் - மயக்கத்தினைத் தரும் உலகியல் நெறியைக் காட்டுதல். அதனைக் காட்டுதல் அந்நெறியினால் உளதாகும் துன் பத்தினை அறிந்து அதனினின்றும் நீங்குதற்பொருட்டாகும். காட்டல் - அவ்வுலகியல் நெறியினின்றும் நீங்கும் ஞான நெறியைக் வழி காட்டுதல். சதாசாரம் (சத்+ஆசாரம்) அறிஞரின் ஒழுகலாறு;
1332 திருவாசக ஆராய்ச்சியுரை கும் கலப்பு இல்லாமலும் அறிவு இன்றி - மெய்யறிவு இல்லாமலும் தோலின் பாவை கூத்தாட்டாய் சுழன்று விழுந்து கிடப்பேனை தோற்பாவையின் கூத்தாட்டுப் போலச் சுற்றி அலைந்து விழுந்து பயனில்லாமற் கிடக்கின்ற என்னை மாலும் காட்டி வழிகாட்டி . மயக்கத்தைத் தரும் உலகியல் நெறியினை அறியச் செய்து அவ்வுல கியல் நெறியினின்றும் நீங்கும் நெறியினைக் காட்டி வாரா உலகம் நெறி ஏற கோலம் காட்டி ஆண்டானை - மீளப் பிறவிக்கு வாராத வீட்டுலக நெறியிற் செல்லுமாறு தனது திருக்கோலத்தினைக் காட்டி என்னை ஆட்கொண்டருளிய இறைவனை கொடியேன் கூடு வது என்றோ -இப்பொழுதே கூடப் பெறாத தீவினையுடையேன் அடை வது எந்நாளோ ? சீலமின்றி நோன்பின்றி செறிவின்றி அறிவின்றித் தோற்பாவை யின் கூத்தாட்டுப்போலச் சுழன்று அலைந்து விழுந்து பயனில்லா மற் கிடக்கின்ற என்னை மயக்கத்தைத் தரும் உலகியல் நெறியினை அறியச் செய்து அந்நெறியினின்றும் நீங்கும் நெறியினைக் காட்டி வாராவுலக நெறியிற் செல்லுமாறு தனது திருக்கோலத்தினைக் காட்டி என்னை ஆட்கொண்டருளிய இறைவனைக் கொடியேன் சென்று கூடுவது எந்நாளோ ? என்பதாம் . சீலம் - நல்லொழுக்கம் . என்றது * சதாசாரம் . நோன்பு கொல்லாமை கள்ளாமை பொய்யாமை முதலியன . செறிவு - நெருக் கம் ; கலப்பு . அது அன்பினால் இறைவனிடத்தும் எனைய உயிர்களி டத்தும் உளதாவது . அறிவு ஈண்டு மெய்யறிவைக் குறித்தது . சீலம் நோன்பு அறிவு செறிவு என்பன உலகியல் நெறியினின்றும் நீங்குதற்குரிய வழிகளாகும் . தோலாகிய பாவையைக் கூத்தாட்டு வார் கயிற்றினால் ஆட்டுவர் அக்கயிற்றினை விட்டவழி அப்பாவை சுற்றி விழுந்து கூத்தாகிய பயனின்றிக் கிடப்பது போலத் தம் நிலைமை இருத்தலின் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை ' ' என்றார் . மால் காட்டுதல் - மயக்கத்தினைத் தரும் உலகியல் நெறியைக் காட்டுதல் . அதனைக் காட்டுதல் அந்நெறியினால் உளதாகும் துன் பத்தினை அறிந்து அதனினின்றும் நீங்குதற்பொருட்டாகும் . காட்டல் - அவ்வுலகியல் நெறியினின்றும் நீங்கும் ஞான நெறியைக் வழி காட்டுதல் . சதாசாரம் ( சத் + ஆசாரம் ) அறிஞரின் ஒழுகலாறு ;