திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஆனந்தமாலை "நாயி லாகிய குலத்தினுங் சுடைப்படும் என்னை நன்னெறி காட்டி" (சதக.39) "ஞால் மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி" திருவார்த்தை.3 என வருவனவுங் காண்க. 1333 வாராவுலகம் - பிறவிக்கு மீண்டு வாராத வீட்டுலகம். "வாரா வுலகந் தந்து" (ஆசைப். 7) என அடிகள் அருளியமை காண்க. வாராத என்பது வாரா என ஈறு கெட்டது, "மற்றீண்டு வாரா நெறி' (குறள் 356) என்புழிப்போல, ஏறுதல்- செல்லுதல். கோலங் காட்டி என்றது இறைவன் தனது அருட்குருவடிவினைக் காட்டி என்றவாறு. கொடியேன் என்றார், உடனே கதிபெறும் பேறின்மைபற்றி. ஆண்டானை என்றோ கூடுவதே என்பது அடிகளுக்கு உலகியல் வாழ் வில் இருக்கும் வெறுப்பினையும் வாராவுலகினை அடைதலிலுள்ள விருப்பினையும் காட்டுவதாகும். இதன் கண் 'ஆண்டானைக் கொடியேன் என்றே கூடுவதே' என் பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படு மாறு காண்க. 644. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாநான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 8 ப-ரை. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்-- கேடு அடையும் இயல்புடைய யான் எப்படிக்கெட வேண்டுமோ அப்படிக்கேடு அடைகின்றேன். கேடு இலாதாய் பழி கொண்டாய்- தீமையில்லா தவனாகிய நீ என்னை ஆட்கொண்டமையால் உன் அடிமையாகிய யான் கேடு அடைதலால் வரும் பழியை ஏற்றுக்கொள்ள வேண் டியவனாயினை, படுவேன் நான் பட்டதெல்லாம் பட்டால் பின்னை பயன் என்னே - துன்பப்படுதற்குரியவனாகிய யான் பட வேண்டிய துன்பங்களையெல்லாம் பட்டுவிட்டால் அதன் பின்னர் நீ என்னைக் காப்பதில் யாது பயனுண்டு; கொடு மா நரகத்து அழுந்தாமே
ஆனந்தமாலை நாயி லாகிய குலத்தினுங் சுடைப்படும் என்னை நன்னெறி காட்டி ( சதக .39 ) ஞால் மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி திருவார்த்தை .3 என வருவனவுங் காண்க . 1333 வாராவுலகம் - பிறவிக்கு மீண்டு வாராத வீட்டுலகம் . வாரா வுலகந் தந்து ( ஆசைப் . 7 ) என அடிகள் அருளியமை காண்க . வாராத என்பது வாரா என ஈறு கெட்டது மற்றீண்டு வாரா நெறி ' ( குறள் 356 ) என்புழிப்போல ஏறுதல்- செல்லுதல் . கோலங் காட்டி என்றது இறைவன் தனது அருட்குருவடிவினைக் காட்டி என்றவாறு . கொடியேன் என்றார் உடனே கதிபெறும் பேறின்மைபற்றி . ஆண்டானை என்றோ கூடுவதே என்பது அடிகளுக்கு உலகியல் வாழ் வில் இருக்கும் வெறுப்பினையும் வாராவுலகினை அடைதலிலுள்ள விருப்பினையும் காட்டுவதாகும் . இதன் கண் ' ஆண்டானைக் கொடியேன் என்றே கூடுவதே ' என் பதனால் சிவானுபவ விருப்பம் என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படு மாறு காண்க . 644 . கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாநான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே . 8 - ரை . கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்-- கேடு அடையும் இயல்புடைய யான் எப்படிக்கெட வேண்டுமோ அப்படிக்கேடு அடைகின்றேன் . கேடு இலாதாய் பழி கொண்டாய்- தீமையில்லா தவனாகிய நீ என்னை ஆட்கொண்டமையால் உன் அடிமையாகிய யான் கேடு அடைதலால் வரும் பழியை ஏற்றுக்கொள்ள வேண் டியவனாயினை படுவேன் நான் பட்டதெல்லாம் பட்டால் பின்னை பயன் என்னே - துன்பப்படுதற்குரியவனாகிய யான் பட வேண்டிய துன்பங்களையெல்லாம் பட்டுவிட்டால் அதன் பின்னர் நீ என்னைக் காப்பதில் யாது பயனுண்டு ; கொடு மா நரகத்து அழுந்தாமே