திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தாராதொழிந்தால் இழிவுடைய யான் அறியாமையால் கழிந்து போவேன்; அஃது இரக்கமுடைய நினக்குத் தகுமோ என்பார். "தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ" என்றார் போவேனோ என்பதில் ஓ ஒழியிசை நம்பி -சிறந்தோன். இனித்தான் - இனியாவது "சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே" (பிரா ர்த்த.7) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க நல்குதல்--அரு ளுதல். 'பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்வே னீநல்கி னுண்டென் னுயிர்'' (+லி. 34-11-12) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. ஏ-அசை "தாயே" என்றார். இறைவன் தாய் போன்ற இன்னருளுடைமையான். 1336 "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'" - சிவபுராணம் 61 "தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான்" - பூவல்லி 3 "தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனை" - சதகம் 39 '"தாயுற்று வந்தென்னை யாண்டு கொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே" "தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும் பீ" கோத். 10 கோத். 12 ''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து" பிடித்த 9 என அடிகள் அருளியமை காண்க, தாள் அடைந்தேன் - திருவடிகளை அடைந்தேன், 'பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற்று'" (நீத். 10) எனவும் திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்" (உயிருண்ணி. 7) எனவும் வருவன காண்க தயா - தயை. நாயேன் அடிமை உடனாக என்றது கீழ்மையுடையேன் அடி மைத்தொண்டும் உடனாகும் வண்ணம். ஆண்டாய் அடிமை உடனாக என்றது ஆண்டாய் என்பதன் பொருளை விளக்கியவாறு. இதன்கண் 'தாராதொழிந்தால் நாயேன் கழிந்து போவேன்; நம்பி இனித்தான் நல்குதி' என்பதனால் சிவானுபவ விருப்பம் என் னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க 5 616: கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே யமையுமே ஆவா என்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
திருவாசக ஆராய்ச்சியுரை தாராதொழிந்தால் இழிவுடைய யான் அறியாமையால் கழிந்து போவேன் ; அஃது இரக்கமுடைய நினக்குத் தகுமோ என்பார் . தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ என்றார் போவேனோ என்பதில் ஒழியிசை நம்பி -சிறந்தோன் . இனித்தான் - இனியாவது சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே ( பிரா ர்த்த .7 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க நல்குதல் -- அரு ளுதல் . ' பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்வே னீநல்கி னுண்டென் னுயிர் ' ' ( + லி . 34-11-12 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . - அசை தாயே என்றார் . இறைவன் தாய் போன்ற இன்னருளுடைமையான் . 1336 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ' - சிவபுராணம் 61 தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் - பூவல்லி 3 தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனை - சதகம் 39 ' தாயுற்று வந்தென்னை யாண்டு கொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும் பீ கோத் . 10 கோத் . 12 ' ' பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து பிடித்த 9 என அடிகள் அருளியமை காண்க தாள் அடைந்தேன் - திருவடிகளை அடைந்தேன் ' பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற்று ' ( நீத் . 10 ) எனவும் திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன் ( உயிருண்ணி . 7 ) எனவும் வருவன காண்க தயா - தயை . நாயேன் அடிமை உடனாக என்றது கீழ்மையுடையேன் அடி மைத்தொண்டும் உடனாகும் வண்ணம் . ஆண்டாய் அடிமை உடனாக என்றது ஆண்டாய் என்பதன் பொருளை விளக்கியவாறு . இதன்கண் ' தாராதொழிந்தால் நாயேன் கழிந்து போவேன் ; நம்பி இனித்தான் நல்குதி ' என்பதனால் சிவானுபவ விருப்பம் என் னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க 5 616 : கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே யமையுமே ஆவா என்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்