திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

51. அச்சோப்பதிகம் அனுபவ வழியறியாமை திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது அச்சோ என்பது அதிசயத்தோடு கூடிய இரக்கத்தைக் குறிக் கும். இத்திருப்பதிகத்துத் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றும் அச்சோ வென முடிதலால் இப்பதிகம் அச்சோப் பதிகம் எனப் பெயர் பெற் றது. இப்பதிகத்துக் கூறப்படும் விஷயத்தினைத் திருவாசகச் சிறப் புடையார் "ஈசர் போகசுகமெனக்களித்தா ரார்பெறுவா ரெனு மருமை புகறலச்சோ" என விளக்கியுள்ளனர். இறைவன் அருளிய இன்பத்தின் அருமை பெருமைகளையெண்ணி அதிசயமும் பிறரது பெருமைபற்றி இரக்கமும் நிகழ்தலின் அச்சோ என்னும் இடைச் சொற் பொருள் புலப்படுமாறு இனிது விளங்கும் இதன் உள்ளுறைப் பொருள் அனுபவ வழியறியாமை என்பது தாம் அனுபளிக்கும் சிவானு பவத்திற்கு ஏது யாதெனத் தோன்றாமையால் உளதாகும் அதிசயம். இஃது ஒன்பது பாடல்களையுடையது. கலிவிருத்தம் என்னும் செய்யுள்வகையாலமைந்தது. ஆனால் இச் செய்யுளை ஆராயும்போது மூவகைச் சீர்கள் நான்கினைக் கொண்டு பெரும்பாலும் கலித்தளை தட்டு வருதலாற் கொச்சகக் கலிப்பா எனக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இப்பாடல்கள் போலவே கண்ட பத்து அமைந்திருத் தலும் நோக்குக. 648 கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழசினைகள் பாறும்வண்ணஞ் சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. u-ரை. முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை - வீடு பேறு அடையும் வழியை அறியாத மூர்க்கரொடு சேர்ந்து அவர் வழி யில் நிற்க முயலுகின்ற என்னை, பத்திநெறி அறிவித்து - அன்பு வழி யினை அறிவித்து, பழ வினைகள் பாறும் வண்ணம் சித்தமம் அறு வித்து - பழைய சஞ்சித கன்மங்கள் முழுவதும் அழிந்து போகும் வண் ணம் மனத்திலுளதாகும் அழுக்கினை நீக்கி, சிவம் ஆக்கி எனை ஆண்ட
51. அச்சோப்பதிகம் அனுபவ வழியறியாமை திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது அச்சோ என்பது அதிசயத்தோடு கூடிய இரக்கத்தைக் குறிக் கும் . இத்திருப்பதிகத்துத் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றும் அச்சோ வென முடிதலால் இப்பதிகம் அச்சோப் பதிகம் எனப் பெயர் பெற் றது . இப்பதிகத்துக் கூறப்படும் விஷயத்தினைத் திருவாசகச் சிறப் புடையார் ஈசர் போகசுகமெனக்களித்தா ரார்பெறுவா ரெனு மருமை புகறலச்சோ என விளக்கியுள்ளனர் . இறைவன் அருளிய இன்பத்தின் அருமை பெருமைகளையெண்ணி அதிசயமும் பிறரது பெருமைபற்றி இரக்கமும் நிகழ்தலின் அச்சோ என்னும் இடைச் சொற் பொருள் புலப்படுமாறு இனிது விளங்கும் இதன் உள்ளுறைப் பொருள் அனுபவ வழியறியாமை என்பது தாம் அனுபளிக்கும் சிவானு பவத்திற்கு ஏது யாதெனத் தோன்றாமையால் உளதாகும் அதிசயம் . இஃது ஒன்பது பாடல்களையுடையது . கலிவிருத்தம் என்னும் செய்யுள்வகையாலமைந்தது . ஆனால் இச் செய்யுளை ஆராயும்போது மூவகைச் சீர்கள் நான்கினைக் கொண்டு பெரும்பாலும் கலித்தளை தட்டு வருதலாற் கொச்சகக் கலிப்பா எனக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றது . இப்பாடல்கள் போலவே கண்ட பத்து அமைந்திருத் தலும் நோக்குக . 648 கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழசினைகள் பாறும்வண்ணஞ் சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே . u- ரை . முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை - வீடு பேறு அடையும் வழியை அறியாத மூர்க்கரொடு சேர்ந்து அவர் வழி யில் நிற்க முயலுகின்ற என்னை பத்திநெறி அறிவித்து - அன்பு வழி யினை அறிவித்து பழ வினைகள் பாறும் வண்ணம் சித்தமம் அறு வித்து - பழைய சஞ்சித கன்மங்கள் முழுவதும் அழிந்து போகும் வண் ணம் மனத்திலுளதாகும் அழுக்கினை நீக்கி சிவம் ஆக்கி எனை ஆண்ட