திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை தார் - மார்பின்மாலை. இறைவனுக்குத் தார் கொன்றையாதலின் 'கொன்றைத் தார் பாடி என்றார். தாருறு கொன்றையன் கோவை - 276. 66 93 "அரும்ப மரும்பூங் கொன்றைத் தாரான் தன்னை " (தே. நாவு. 214-6) "கொங்கார் மலர்க்கொன்றையந் தாரவனே' (சுந். - 42 - 9) தேனைக்காவல் கொண்டுவிண்ட கொன்றைச் செழுந்தாராய்" (சுந்.47-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. இறைவன் எப்பொருட்கும் முதல்வனாயிருத்தலின் ஆதி திறம் பாடி என்றார். "அளக்கலாகா ஆதியை" ஆதியாயவனாரும் " (நாவு.-74-7; 210-3) '"ஆதியாகி நின்றானும்" "ஆதியாய் நின்ற பெம்மான்" (ஞான.316 - 6) (ஞான. 142 -7) என வருவன காண்க. .. 539 எப்பொருட்கும் முடிவாயிருப்பவனும் இறைவனேயாதலின் அந்தமாமாபாடி என்றார். "அந்தமா யுலகாதியு மாயினான்" அந்தமும் ஆதியு மாகிய அண்ணலார் 'அந்தமூம் ஆதியுமாகி நின்ற" (ஞான .தே.303-1) (ஞான.39-1) (நாவு. - 95-2) (நாவு.236-9) "ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் ஆமாறு என்பது ஆமா என ஈறு கெட்டு நின்றது. சர்வ சங்கார காலத்தில் ஆணவவல்லிருளோடு சேர்ந்து செய லற்றுக்கிடந்த உயிர்களை அந்நிலையினின்றும் வேறுபடுத்தித்தனுகரண புவன போகங்களைக் கொடுத்து வளர்ச்சியடையச் செய்து சகலநிலை யில் வைத்து அதனால் பக்குவமடைந்தபோது திருவருட்சத்தி சுத்த நிலையடை யச் செய்தலின் "பேதித்து வளர்த்து எடுத்த பெய்வளை" என்றார். பெய்வளை - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. அப் சீதப்புனல் ஆடி அம்பலம்பாடி, வேதப்பொருள்பாடி, பொருளாமாபாடி, சோதியும்பாடி, கொன்றைத் தார்பாடி, ஆதி திறம்பாடி அந்தம் ஆமாறுபாடி, பெய்வளை தன்பாதத் திறம்பாடி நீராடுவோமாக எனக் கூறப்படுதலின், நீராடும் மகளிர் முதலில் ஒருமுறை முழுகித் தம்மைத் தூய்மை செய்துகொண்டு பின்னர் இறைவனையும் இறைவியையும் புகழ்ந்துபாடி மீண்டும் முழுகினர் என்பது கருத்தாகக் கொள்க.
திருவெம்பாவை தார் - மார்பின்மாலை . இறைவனுக்குத் தார் கொன்றையாதலின் ' கொன்றைத் தார் பாடி என்றார் . தாருறு கொன்றையன் கோவை - 276 . 66 93 அரும்ப மரும்பூங் கொன்றைத் தாரான் தன்னை ( தே . நாவு . 214-6 ) கொங்கார் மலர்க்கொன்றையந் தாரவனே ' ( சுந் . - 42 - 9 ) தேனைக்காவல் கொண்டுவிண்ட கொன்றைச் செழுந்தாராய் ( சுந்.47-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . இறைவன் எப்பொருட்கும் முதல்வனாயிருத்தலின் ஆதி திறம் பாடி என்றார் . அளக்கலாகா ஆதியை ஆதியாயவனாரும் ( நாவு . - 74-7 ; 210-3 ) ' ஆதியாகி நின்றானும் ஆதியாய் நின்ற பெம்மான் ( ஞான .316 - 6 ) ( ஞான . 142 -7 ) என வருவன காண்க . .. 539 எப்பொருட்கும் முடிவாயிருப்பவனும் இறைவனேயாதலின் அந்தமாமாபாடி என்றார் . அந்தமா யுலகாதியு மாயினான் அந்தமும் ஆதியு மாகிய அண்ணலார் ' அந்தமூம் ஆதியுமாகி நின்ற ( ஞான .தே.303-1 ) ( ஞான.39-1 ) ( நாவு . - 95-2 ) ( நாவு.236-9 ) ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் ஆமாறு என்பது ஆமா என ஈறு கெட்டு நின்றது . சர்வ சங்கார காலத்தில் ஆணவவல்லிருளோடு சேர்ந்து செய லற்றுக்கிடந்த உயிர்களை அந்நிலையினின்றும் வேறுபடுத்தித்தனுகரண புவன போகங்களைக் கொடுத்து வளர்ச்சியடையச் செய்து சகலநிலை யில் வைத்து அதனால் பக்குவமடைந்தபோது திருவருட்சத்தி சுத்த நிலையடை யச் செய்தலின் பேதித்து வளர்த்து எடுத்த பெய்வளை என்றார் . பெய்வளை - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை . அப் சீதப்புனல் ஆடி அம்பலம்பாடி வேதப்பொருள்பாடி பொருளாமாபாடி சோதியும்பாடி கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம் ஆமாறுபாடி பெய்வளை தன்பாதத் திறம்பாடி நீராடுவோமாக எனக் கூறப்படுதலின் நீராடும் மகளிர் முதலில் ஒருமுறை முழுகித் தம்மைத் தூய்மை செய்துகொண்டு பின்னர் இறைவனையும் இறைவியையும் புகழ்ந்துபாடி மீண்டும் முழுகினர் என்பது கருத்தாகக் கொள்க .