திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1346 திருவாசக ஆராய்ச்சியுரை சேரும் வண்ணம் - வீடடைதற்குரிய நல்வழியிலேயே செல்லும் வண் ணம், அண்ணல் எனக்கு அருளிய ஆறு - பெருமையினையுடைய இறை வன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல் லார்? அச்சோ-இஃதோர் அதிசயமாகும். மண்ணுலகிற் பிறந்து இளைத்து மாண்டுவிழக் கடவேனாகிய என்னை யான் மனத்திற் கருதியிராத அன்பினைத் தந்தருளி என்னை ஆட்கொண்டு என்னைத் தனது திருவெண்ணீற்றினை அணியும்படி செய்து தூய்நெறியே சேரும்வண்ணம் இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? இஸ்தோர் அதி சயமாகும் என்பதாம். மண் - மண்ணுலகு "மண்மேல் யாக்கை விடுமாறும். (குழைத்த.9) என வருதலுங் காண்க. எண்ணமிலா அன்பு அருளி- முன்பு யான் கருதியிராத அன்பினைத் தந்தருளி 'ஓங்கியுளத் தொளி வளர வுலப்பிலா வன்பருளி" (கண்டபத்து 9) என அடிகள் பிறி தோரிடத்து அருளியவாறுங் காண்க. என்னையும் என்றவும்மை. தான் அணிந்திருக்கும் திருவெண்ணீற்றினை என்னையும் அணியும்படி செய்து என இறந்தது தழீஇய எச்சவும்மை. இனி, தகுதியில்லாத என்னை யும் என இழிவு சிறப்பு உம்மையாகவும் கொள்ளலாம் சுண்ணம்- பொடி. கடவேனை ஆண்டிட்டு அணிவித்து அருளியவாறு ஆர்பெறு வார் என முடிக்க. இதன்கண், அண்ணல் எனக்கருளியவாற்றினுக்கு வழியறியப் படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 4 652. பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேனுன் அருள்பெற்றேன் உய்ஞ்சேனான் உடையானே யடியேனை வருகவென் ரஞ்சேலென் றருளியவா றார்பெறுவா ரச்சோவே. ப -ரை: பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு. டஞ்சுபோன்ற மெல்லிய கால்களையுடைய மகளிரது கடைக்கண் பார் வையால் துன்பப்பட்டு, நெஞ்சு ஆய துயர் கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் - மனத்திலுண்டாகிய துன்பம் மிகும்படி நிற்கும் இயல் புடையயான் உன் திருவருளைப் பெற்றேன் யான் உஞ்சேன்- அதனால் யான் அத்துன்பம் நீங்கப்பெற்று உய்வடைந்தேன். உடையானே- என்னை ஆளாக உடையவனே, அடியேனை வருகவென்று அஞ்சேல் என்று - அடியேனை இங்குவா என்று அழைத்துப் பயப்படாதே என்று: அருளிய ஆறு ஆர் பெறுவார் -நீ எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? அச்சோ - இஃதோர் அதிசயமாகும்.
1346 திருவாசக ஆராய்ச்சியுரை சேரும் வண்ணம் - வீடடைதற்குரிய நல்வழியிலேயே செல்லும் வண் ணம் அண்ணல் எனக்கு அருளிய ஆறு - பெருமையினையுடைய இறை வன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல் லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் . மண்ணுலகிற் பிறந்து இளைத்து மாண்டுவிழக் கடவேனாகிய என்னை யான் மனத்திற் கருதியிராத அன்பினைத் தந்தருளி என்னை ஆட்கொண்டு என்னைத் தனது திருவெண்ணீற்றினை அணியும்படி செய்து தூய்நெறியே சேரும்வண்ணம் இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? இஸ்தோர் அதி சயமாகும் என்பதாம் . மண் - மண்ணுலகு மண்மேல் யாக்கை விடுமாறும் . ( குழைத்த .9 ) என வருதலுங் காண்க . எண்ணமிலா அன்பு அருளி முன்பு யான் கருதியிராத அன்பினைத் தந்தருளி ' ஓங்கியுளத் தொளி வளர வுலப்பிலா வன்பருளி ( கண்டபத்து 9 ) என அடிகள் பிறி தோரிடத்து அருளியவாறுங் காண்க . என்னையும் என்றவும்மை . தான் அணிந்திருக்கும் திருவெண்ணீற்றினை என்னையும் அணியும்படி செய்து என இறந்தது தழீஇய எச்சவும்மை . இனி தகுதியில்லாத என்னை யும் என இழிவு சிறப்பு உம்மையாகவும் கொள்ளலாம் சுண்ணம் பொடி . கடவேனை ஆண்டிட்டு அணிவித்து அருளியவாறு ஆர்பெறு வார் என முடிக்க . இதன்கண் அண்ணல் எனக்கருளியவாற்றினுக்கு வழியறியப் படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 4 652. பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேனுன் அருள்பெற்றேன் உய்ஞ்சேனான் உடையானே யடியேனை வருகவென் ரஞ்சேலென் றருளியவா றார்பெறுவா ரச்சோவே . -ரை : பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு . டஞ்சுபோன்ற மெல்லிய கால்களையுடைய மகளிரது கடைக்கண் பார் வையால் துன்பப்பட்டு நெஞ்சு ஆய துயர் கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் - மனத்திலுண்டாகிய துன்பம் மிகும்படி நிற்கும் இயல் புடையயான் உன் திருவருளைப் பெற்றேன் யான் உஞ்சேன்- அதனால் யான் அத்துன்பம் நீங்கப்பெற்று உய்வடைந்தேன் . உடையானே என்னை ஆளாக உடையவனே அடியேனை வருகவென்று அஞ்சேல் என்று - அடியேனை இங்குவா என்று அழைத்துப் பயப்படாதே என்று : அருளிய ஆறு ஆர் பெறுவார் -நீ எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் .