திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வெந்து நீறாய் விழுந்து அழிந்துபோகும் உடம்பை எடுப்பதாகிய பிறப்பினை நிலையானது என்று எண்ணித் தீவினைகளை மிகவுஞ் செய்து மகளிரது முலைமேல் வீழும் இயல்புடைய என்னைப் பாசபந்தத்தினை நீக்கி என்னை ஆட்கொண்டு எனது உயிரியல்பு கெடும்படி என் குற் றங்களையும் ஒழித்து இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார்? இஃதோர் அதிசயமாகும் என்பதாம். 1348 வெந்து விழும் உடல் என்றது உடலைத் தகனஞ் செய்யும் முறைமை பற்றியாகும். உடற்பிறவி உடம்பை எடுத்துப் பிறக் கும் பிறவி. பெருக்கல் பெருகச் செய்தல். கொத்து என்பது எதுகைநோக்கிக் கொந்து என மெலிந்து நின்றது. கொந்து - பூங் கொத்து, ''கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்" (திருமந், 405. கோல்வளை --- திரண்ட வளை. வளை - தொடியுமாம். வீழ்தல் - விரும்புதல். தாம் வீழ்வார் மென்றோட்டுயிலின்" (குறள் 1103). என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பந்தம் அறுத்து- பாச பந்தத்தினை நீக்கி, "பந்தம் அறுக்கும் ஆனந்த மாகடலே" (கோ யிற். 9) எ ன வருதல் காண்க. பரிசு - இயல்பு. "பரிசழி பைதல்நோய் மூழ்கி" (கலி 13 -21). என்பது காண்க. ஈண்டு உயிரியல்பு, தற் போதம். துரிசு அறுத்து - குற்றத்தை அறுத்து. "இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்து'' (குலாப். 5) என அருளியமை காண்க. முன்னர்ப்பந்தமும் பரிசும் நீக்கியமை கூறப்பட்டமையின் துரிசு என்றது ஈண்டு வாசனாமலத்தினை. அந்தத்தினைச் செய்யும் இறைவனை அந்தம் என்றார். அடிகள் இதன்கண், அந்தமெனக் கருளியவாற்றின்வழி அறியப்படாமை யின், அனுபவ வழியறியாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 651 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யுநெறி காட்டுவிததிட் டோங்காரத் துட்பொருளை ஐயனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. பாசம் ப - ரை : தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை - பெண்டி ரது மயக்கத்திலே அழுந்திப பயனின்றிக் சழித்தற்குரிய என்னை, பையவே கொடு போந்து - மெல்லவே கொண்டுசென்று. எனும் தாழ் உருவி - பாசம் என்கின்ற தாழக்கோவினை உருவி எடுத்து வீசி, உய்யுநெறி காட்டுலித்திட்டு - யான் உய்வடையும் வழி யினைக் காண்பித்து, ஓங்காரத்து உள் பொருளை - பிரணவத்தின் உட் கருத்தினை,ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் -எனது தலைவன் எனக்கு அருள செய்த முறைமையை வேறு யாவர் பெற வல்லார்? அச்சோ - இஃதோர் அதிசயமாகும்.
திருவாசக ஆராய்ச்சியுரை வெந்து நீறாய் விழுந்து அழிந்துபோகும் உடம்பை எடுப்பதாகிய பிறப்பினை நிலையானது என்று எண்ணித் தீவினைகளை மிகவுஞ் செய்து மகளிரது முலைமேல் வீழும் இயல்புடைய என்னைப் பாசபந்தத்தினை நீக்கி என்னை ஆட்கொண்டு எனது உயிரியல்பு கெடும்படி என் குற் றங்களையும் ஒழித்து இறைவன் எனக்கு அருள் செய்த முறைமையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃதோர் அதிசயமாகும் என்பதாம் . 1348 வெந்து விழும் உடல் என்றது உடலைத் தகனஞ் செய்யும் முறைமை பற்றியாகும் . உடற்பிறவி உடம்பை எடுத்துப் பிறக் கும் பிறவி . பெருக்கல் பெருகச் செய்தல் . கொத்து என்பது எதுகைநோக்கிக் கொந்து என மெலிந்து நின்றது . கொந்து - பூங் கொத்து ' ' கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் ( திருமந் 405 . கோல்வளை --- திரண்ட வளை . வளை - தொடியுமாம் . வீழ்தல் - விரும்புதல் . தாம் வீழ்வார் மென்றோட்டுயிலின் ( குறள் 1103 ) . என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பந்தம் அறுத்து- பாச பந்தத்தினை நீக்கி பந்தம் அறுக்கும் ஆனந்த மாகடலே ( கோ யிற் . 9 ) வருதல் காண்க . பரிசு - இயல்பு . பரிசழி பைதல்நோய் மூழ்கி ( கலி 13 -21 ) . என்பது காண்க . ஈண்டு உயிரியல்பு தற் போதம் . துரிசு அறுத்து - குற்றத்தை அறுத்து . இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்து ' ' ( குலாப் . 5 ) என அருளியமை காண்க . முன்னர்ப்பந்தமும் பரிசும் நீக்கியமை கூறப்பட்டமையின் துரிசு என்றது ஈண்டு வாசனாமலத்தினை . அந்தத்தினைச் செய்யும் இறைவனை அந்தம் என்றார் . அடிகள் இதன்கண் அந்தமெனக் கருளியவாற்றின்வழி அறியப்படாமை யின் அனுபவ வழியறியாமை என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 651 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யுநெறி காட்டுவிததிட் டோங்காரத் துட்பொருளை ஐயனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே . பாசம் - ரை : தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை - பெண்டி ரது மயக்கத்திலே அழுந்திப பயனின்றிக் சழித்தற்குரிய என்னை பையவே கொடு போந்து - மெல்லவே கொண்டுசென்று . எனும் தாழ் உருவி - பாசம் என்கின்ற தாழக்கோவினை உருவி எடுத்து வீசி உய்யுநெறி காட்டுலித்திட்டு - யான் உய்வடையும் வழி யினைக் காண்பித்து ஓங்காரத்து உள் பொருளை - பிரணவத்தின் உட் கருத்தினை ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் -எனது தலைவன் எனக்கு அருள செய்த முறைமையை வேறு யாவர் பெற வல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் .