திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அச்சோப்பதிகம் யில் ஏற்றுவித்ததுபோல உயர்ந்த நிலையில் ஏறும் வண்ணம் செய்த தாய் போன்ற அருளையுடைய இறைவன். எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறுயார் பெற வல்லார்? அச்சோ-இஃதோர் அதிசயமாகும். 1351 செம்மைநலமறியாத சிதடரொடு கூடித்திரியும் இயல்புடைய என்னை முதல்வன் மும்மலங்களையும் அற்றுப்போகும்படி செய்து ஒன் றும் போதா நாயேனையும் ஒரு பொருளாகச் செய்து நாயைச் சிவிகை யில் ஏற்றுவித்தது போல உயர்ந்த நிலையில் ஏறும்வண்ணம் செய்த தாய்போன்ற அருளையுடைய இறைவன் எனக்கு அருள் செய்த முறை மையை வேறு யாவர் பெறவல்லார்? இஃதோர் அதிசயமாகும் என்ப தாம். செம்மை - செம்பொருள். இறைவன் "சிறப்பென்னுஞ் செம் பொருள் காண்பதறிவு" (குறள் 258) எனக்கூறப்படுதல் காண்க: சிதடர் - அறிவில்லாதவர், மூடர். மும்மை மலம் -ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்கள். "மூலமாகிய மும்மலம்" (கீர்த்தி 111) என வருதலும் காண்க. மும்மை என்பதில் மை தனக்கென வேறு பொருளின்றிப்பகுதிப் பொருளில் வந்தது. 'தெரி மாண் தமிழ் மும்மைப் பொருப்பன்" என்புழிப்போல முமை மலம் அறுவித்து - மூன்று மலங்களையும் அற்றுப் போகும்படி செய்து. முதலாய முதல்வன் - ஆதியாகிய முகல்வன். தான் - அசை. இறை வன் மும்மலங்களும் நீங்க அருள் செய்தல். "விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனையொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாங் களையார்தரு கதிராயிர முடையவ் வவனோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே" எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் (12-3) பாடியருளினார். 'திரிவேனை' எனவும், 'எனக்கு' எனவும் தம்மை ஒருமையிற் கூறிய அடிகள் 'நம்மையும்' எனப் பன்மையாற் கூறியது இயல்பினால் வந்த வழுவமைதியாகும். நாய்சிவிகை ஏற்றுவித்த என்றது உவமானத் தால் உவமேபத்தைக் கூறியவாறு. இழிவுடைய நாயினை உயர் வுடைய சிவிகையில் ஏற்றுவிப்பதுபோல கீழ்ப்பட்ட இயல்புடைய என்னை ஒருபொருளாக்கி உயர்ந்த வீட்டு நெறியில் செல்லுர்படி செய்த என அதனை விரித் துரைக்க. அம்மை - தாய். அம்மை போல இரங்கியருளும் இறைவனை 'அம்மை' என்றார். இகன்கண். நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளிய வாற்றின்வழி அறியப்படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 9
அச்சோப்பதிகம் யில் ஏற்றுவித்ததுபோல உயர்ந்த நிலையில் ஏறும் வண்ணம் செய்த தாய் போன்ற அருளையுடைய இறைவன் . எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் - எனக்கு அருள் செய்த முறைமையை வேறுயார் பெற வல்லார் ? அச்சோ - இஃதோர் அதிசயமாகும் . 1351 செம்மைநலமறியாத சிதடரொடு கூடித்திரியும் இயல்புடைய என்னை முதல்வன் மும்மலங்களையும் அற்றுப்போகும்படி செய்து ஒன் றும் போதா நாயேனையும் ஒரு பொருளாகச் செய்து நாயைச் சிவிகை யில் ஏற்றுவித்தது போல உயர்ந்த நிலையில் ஏறும்வண்ணம் செய்த தாய்போன்ற அருளையுடைய இறைவன் எனக்கு அருள் செய்த முறை மையை வேறு யாவர் பெறவல்லார் ? இஃதோர் அதிசயமாகும் என்ப தாம் . செம்மை - செம்பொருள் . இறைவன் சிறப்பென்னுஞ் செம் பொருள் காண்பதறிவு ( குறள் 258 ) எனக்கூறப்படுதல் காண்க : சிதடர் - அறிவில்லாதவர் மூடர் . மும்மை மலம் -ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்கள் . மூலமாகிய மும்மலம் ( கீர்த்தி 111 ) என வருதலும் காண்க . மும்மை என்பதில் மை தனக்கென வேறு பொருளின்றிப்பகுதிப் பொருளில் வந்தது . ' தெரி மாண் தமிழ் மும்மைப் பொருப்பன் என்புழிப்போல முமை மலம் அறுவித்து - மூன்று மலங்களையும் அற்றுப் போகும்படி செய்து . முதலாய முதல்வன் - ஆதியாகிய முகல்வன் . தான் - அசை . இறை வன் மும்மலங்களும் நீங்க அருள் செய்தல் . விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனையொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாங் களையார்தரு கதிராயிர முடையவ் வவனோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் ( 12-3 ) பாடியருளினார் . ' திரிவேனை ' எனவும் ' எனக்கு ' எனவும் தம்மை ஒருமையிற் கூறிய அடிகள் ' நம்மையும் ' எனப் பன்மையாற் கூறியது இயல்பினால் வந்த வழுவமைதியாகும் . நாய்சிவிகை ஏற்றுவித்த என்றது உவமானத் தால் உவமேபத்தைக் கூறியவாறு . இழிவுடைய நாயினை உயர் வுடைய சிவிகையில் ஏற்றுவிப்பதுபோல கீழ்ப்பட்ட இயல்புடைய என்னை ஒருபொருளாக்கி உயர்ந்த வீட்டு நெறியில் செல்லுர்படி செய்த என அதனை விரித் துரைக்க . அம்மை - தாய் . அம்மை போல இரங்கியருளும் இறைவனை ' அம்மை ' என்றார் . இகன்கண் . நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளிய வாற்றின்வழி அறியப்படாமையின் அனுபவவழியறியாமை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 9