திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இத்திருப்பாட்டில் பாவை நோன்பு நோற்கும் கன்னியர் இறை வனையும் இறைவியையும் புகழ்ந்துபாடி நீராடியமை கூறினார். 540 இதன்கண், "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்திறம்பாடி என்ற தனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 14 169 45 ஓ ரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும் ஆரொருவ ரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். ப-ரை. வார் உருவ பூண் முலையீர் - கச்சணிந்த அழகிய அணி கலன்கள் அணிந்த தனங்களையுடையவர்களே, "சிவானுப நிலையி லுள்ளவளாகிய நம்முள் ஒருத்தி", சித்தம் களிகூர - மனம் மகிழ்ச்சி மிகவும், நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப - ஆனந்தக் கண்ணீர் ஒருபொழுதும் மாறாமல் ஒழியாத நெடிய தாரையாகக் கண்களினின்றும் துளிப்பவும், ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்று - அடிக்கடி எம்பெருமான் எம்பெருமான் என்று கூறி, நம் பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள்-எம்தலைவனாகிய சிவபெரு மானுடைய சிறந்த புகழை ஒருபோதும் வாய் ஒழியாமல் பாடிக் கொண்டிருப்பாள், அனையாள் ஒருகால் பார் வந்து விண்ணோரை தான் பணியாள் - அத்தன்மையுடையாள் ஒரு முறை பூமியில் வந்து பிறந்தும் முழுமுதலிறைவனையன்றி மற்றைத் தேவரை மறந்தும் தான் வணங்குகின்றிலள், பேர் அரையற்கு இங்ஙன் ஒருவர் பித்து ஆமாறும் - தெய்வப்பேரரசனாகிய இறைவனுக்கு இப்படி அன்பால் ஒருவர் பித்தராகும் வண்ணமும் உள்ளதோ? ஆர் ஒருவர் இவ் வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் - யார் ஒருவர் இவ்விதமாக அவளை ஆட்கொண்டருளும் திறமையுடையவர்; தாள் நாம் வாய் ஆர பாடி - அவ்விறைவருடைய திருவடிகளை நாம் வாயாரப்பாடிக் கொண்டு, ஏர் உருவ பூம்புனல் பாய்ந்து ஆடு - அழகிய தோற்ற முள்ள பூக்களையுடைய நீரில் பாய்ந்து நீராடுவோமாக. எம்பா வாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி! இப்பெண்மணியின் நிலைமையினை எங்களுக்கும் அருள்வாயாக. (எனத் தம்முள் ஒருத்தியின் அன்பின் திறத்தை வியந்து கூறினர்,) என்ப தாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை இத்திருப்பாட்டில் பாவை நோன்பு நோற்கும் கன்னியர் இறை வனையும் இறைவியையும் புகழ்ந்துபாடி நீராடியமை கூறினார் . 540 இதன்கண் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்திறம்பாடி என்ற தனால் சத்தியை வியந்தது என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 14 169 45 ரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும் ஆரொருவ ரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் . - ரை . வார் உருவ பூண் முலையீர் - கச்சணிந்த அழகிய அணி கலன்கள் அணிந்த தனங்களையுடையவர்களே சிவானுப நிலையி லுள்ளவளாகிய நம்முள் ஒருத்தி சித்தம் களிகூர - மனம் மகிழ்ச்சி மிகவும் நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப - ஆனந்தக் கண்ணீர் ஒருபொழுதும் மாறாமல் ஒழியாத நெடிய தாரையாகக் கண்களினின்றும் துளிப்பவும் ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்று - அடிக்கடி எம்பெருமான் எம்பெருமான் என்று கூறி நம் பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள் - எம்தலைவனாகிய சிவபெரு மானுடைய சிறந்த புகழை ஒருபோதும் வாய் ஒழியாமல் பாடிக் கொண்டிருப்பாள் அனையாள் ஒருகால் பார் வந்து விண்ணோரை தான் பணியாள் - அத்தன்மையுடையாள் ஒரு முறை பூமியில் வந்து பிறந்தும் முழுமுதலிறைவனையன்றி மற்றைத் தேவரை மறந்தும் தான் வணங்குகின்றிலள் பேர் அரையற்கு இங்ஙன் ஒருவர் பித்து ஆமாறும் - தெய்வப்பேரரசனாகிய இறைவனுக்கு இப்படி அன்பால் ஒருவர் பித்தராகும் வண்ணமும் உள்ளதோ ? ஆர் ஒருவர் இவ் வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் - யார் ஒருவர் இவ்விதமாக அவளை ஆட்கொண்டருளும் திறமையுடையவர் ; தாள் நாம் வாய் ஆர பாடி - அவ்விறைவருடைய திருவடிகளை நாம் வாயாரப்பாடிக் கொண்டு ஏர் உருவ பூம்புனல் பாய்ந்து ஆடு - அழகிய தோற்ற முள்ள பூக்களையுடைய நீரில் பாய்ந்து நீராடுவோமாக . எம்பா வாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி ! இப்பெண்மணியின் நிலைமையினை எங்களுக்கும் அருள்வாயாக . ( எனத் தம்முள் ஒருத்தியின் அன்பின் திறத்தை வியந்து கூறினர் ) என்ப தாம் .