திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 541 வார் உருவப் பூண்முலையீர், மனம் மகிழ்ச்சி மிக ஆனந்தக் கண்ணீர் ஒருகாலும் ஒழியாமல் நெடிய தாரையாகக் கண்களினின் றும் பொழிய அடிக்கடி எம்பெருமானே என்று பலதரஞ் சொல்லி நம்பெருமானுடைய சிறந்த புகழை ஒருகாலும் வாய் ஓயாமல் பாடிக்கொண்டேயிருக்கிறாள். அத்தன்மையுடையாள் ஒருமுறை பூமியில் வந்து பிறந்தும் இறைவனையன்றி மற்றைத் தேவரைத்தான் வணங்குகின்றிலள். பேர் அரையனாகிய இறைவனுக்கு இப்படி ஒருவர் பித்தராகும் வண்ணமும் உள்ளதோ? ஆர் ஒருவர் இவ்விதமாக ஆட்கொண்டருளும் திறமையுடையவர்? அவ்விறைவருடைய திரு வடிகளை நாம்வாயாரப் பாடிக்கொண்டு, பூம்புனலிற் பாய்ந்து நீராடு வோமாக, எம்பாவாய், இப்பெண்ணின் அன்புத் திறத்தை எங்க ளுக்கும் அருள்வாயாக. (எனத் தம்முள் ஒருத்தியின் அன்புத் திறத்தை வியந்து கூறினர் ) என்பதாம். சிவானுபவ நிலையிலுள்ள பெண் அடிக்கடி எம்பெருமான். எம் பெருமான் என்று பலகாற் கூறுதலின் "ஓரொருகால் எம்பெரு மான் என்றென்று" என்றாள். இனி ஓரொரு கால் என்பதற்கு இடையிடையே யெனப்பொருள் கொள்ளின் சீரொருகால் வாயோ வாள் என்பதற்கு அது முரணாகும். ஏனைச் சமயங்களில் நம்பெரு மானுடைய சிறந்த புகழை ஒருபொழுதும் ஒழியாமல் வாயினாற் கூறிக்கொண்டே இருத்தலின் 'நம் பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்" என்றாள். சீர் - புகழ் "ஆனாச் சீர் கூடலுள்" (கலி.-30-12) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஒருகாலும் என்னும் உம்மை தொக்கது ஓவாமை - ஒழியாமை; மாறாமை. எப்பொழுதும் பாடிக்கொண்டேயிருத்தலின் "வாய் ஓவாள்'' என்றார். "சித்தம் என்றார்': எம்பெருமான் புகழை ஒருபோதும் ஒழியாமல் வாயினாற் கூறும் போது மனத்தே களிப்பு மிகுதலோடு ஆனந்தக்கண்ணீர் இடைய றாது நெடிய தாரையாக கண்களினின்று ஒழகுதலின் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரைகண் பனிப்ப" ஒருகால் உம்மை தொக்கது. ஓவா - ஓவாமல்; மாறாமல் கண் பனிப்ப என்றார், உள்ள முருகுந்தோறும் கண் பனித்தலின். ''பாய் திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் " (கலி. - 129-8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பனிப்ப ஓவாள் என மாற்றிக் கூட்டி முடிக்க. அனையாள் பாரொருகால் வந்து விண்ணோரைத்தான் பணியாள் எனமாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க. பாவை நோன்பு நோற்கும் கன்னியர்களுள் தம்மை ஒரு பெண்ணாக வைத்து அவர்கள் கூற்றாகத் தமது வரலாற்றினை அருளிச் செய்கின்றாராதலின் அனையாள் என் றது அடிகளையே குறிப்பதாகும். அவர் பூமியில் லந்து பிறந்தமை யின் பாரொருகால் வந்து என்றார். இதனை,
திருவெம்பாவை 541 வார் உருவப் பூண்முலையீர் மனம் மகிழ்ச்சி மிக ஆனந்தக் கண்ணீர் ஒருகாலும் ஒழியாமல் நெடிய தாரையாகக் கண்களினின் றும் பொழிய அடிக்கடி எம்பெருமானே என்று பலதரஞ் சொல்லி நம்பெருமானுடைய சிறந்த புகழை ஒருகாலும் வாய் ஓயாமல் பாடிக்கொண்டேயிருக்கிறாள் . அத்தன்மையுடையாள் ஒருமுறை பூமியில் வந்து பிறந்தும் இறைவனையன்றி மற்றைத் தேவரைத்தான் வணங்குகின்றிலள் . பேர் அரையனாகிய இறைவனுக்கு இப்படி ஒருவர் பித்தராகும் வண்ணமும் உள்ளதோ ? ஆர் ஒருவர் இவ்விதமாக ஆட்கொண்டருளும் திறமையுடையவர் ? அவ்விறைவருடைய திரு வடிகளை நாம்வாயாரப் பாடிக்கொண்டு பூம்புனலிற் பாய்ந்து நீராடு வோமாக எம்பாவாய் இப்பெண்ணின் அன்புத் திறத்தை எங்க ளுக்கும் அருள்வாயாக . ( எனத் தம்முள் ஒருத்தியின் அன்புத் திறத்தை வியந்து கூறினர் ) என்பதாம் . சிவானுபவ நிலையிலுள்ள பெண் அடிக்கடி எம்பெருமான் . எம் பெருமான் என்று பலகாற் கூறுதலின் ஓரொருகால் எம்பெரு மான் என்றென்று என்றாள் . இனி ஓரொரு கால் என்பதற்கு இடையிடையே யெனப்பொருள் கொள்ளின் சீரொருகால் வாயோ வாள் என்பதற்கு அது முரணாகும் . ஏனைச் சமயங்களில் நம்பெரு மானுடைய சிறந்த புகழை ஒருபொழுதும் ஒழியாமல் வாயினாற் கூறிக்கொண்டே இருத்தலின் ' நம் பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் என்றாள் . சீர் - புகழ் ஆனாச் சீர் கூடலுள் ( கலி . - 30-12 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஒருகாலும் என்னும் உம்மை தொக்கது ஓவாமை - ஒழியாமை ; மாறாமை . எப்பொழுதும் பாடிக்கொண்டேயிருத்தலின் வாய் ஓவாள் ' ' என்றார் . சித்தம் என்றார் ' : எம்பெருமான் புகழை ஒருபோதும் ஒழியாமல் வாயினாற் கூறும் போது மனத்தே களிப்பு மிகுதலோடு ஆனந்தக்கண்ணீர் இடைய றாது நெடிய தாரையாக கண்களினின்று ஒழகுதலின் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரைகண் பனிப்ப ஒருகால் உம்மை தொக்கது . ஓவா - ஓவாமல் ; மாறாமல் கண் பனிப்ப என்றார் உள்ள முருகுந்தோறும் கண் பனித்தலின் . ' ' பாய் திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் ( கலி . - 129-8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பனிப்ப ஓவாள் என மாற்றிக் கூட்டி முடிக்க . அனையாள் பாரொருகால் வந்து விண்ணோரைத்தான் பணியாள் எனமாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க . பாவை நோன்பு நோற்கும் கன்னியர்களுள் தம்மை ஒரு பெண்ணாக வைத்து அவர்கள் கூற்றாகத் தமது வரலாற்றினை அருளிச் செய்கின்றாராதலின் அனையாள் என் றது அடிகளையே குறிப்பதாகும் . அவர் பூமியில் லந்து பிறந்தமை யின் பாரொருகால் வந்து என்றார் . இதனை