திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 547 முடைத்தாய்" (கோவை - 327 பேர். உரை) கரும்புருவச் சிலை ' (கோவை-352) எனவருவன காண்க. சிலை-வில், குலவி-வளைத்து, குலவு-வளைவு. "குலவுச் சினைப்பூக் கொய்து" (புற.- 11- 4) தன்னில் பிரிவிலா எங்கோமான் - எம்மையாளாகவுடைய எங் கோமான் இறைவி தன்னிற் பிரியாமையை "உடையாள் உன்தன் நடு விருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி" என அடிகள் அருளுமாற் றாலுமறிக. அன்பர் என்றது சீவன் முத்தராய்த் திகழும் மெய்யன் பரை. நமக்கு என்றது இறை வியின் தொண்டுடைய கன்னியர்களாகிய நமக்கும் என்றவாறு. அன்பர்க்கும் நமக்கும் என்னும் உம்மைகள் தொக்கு நின்றன. ஆளுடையாள் கோமான் அன்பர்க்கும் நமக்கும் சுரக்கும் இன்ன ருளே என்னப் பொழியாய் என்க. "தெய்வ நாயக னீறணி மேனிபோற் சென்று பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்து எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்னக் கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரன் மேகம்" எனத் திருவிளையாடற் புராணத்து வருதலுங் காண்க. (நாட்டு-2) முன்னி முன்சுரக்கும் இன்னருள் என்றது எங்கோமான் அன்பர்க் கும் தன்னடியாராகிய நமக்கும் இறைவி சார்ந்து நின்று முதலிற் செய்யும் இனிய அருள் என்றவாறு. இவ்வருள் சத்திநிபாதம் எனப் படும். சத்திநிபாதம் - திருவருட்சத்தி பதிதல். அது உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நால் வகைப்படும். திருவருட்சத்தி பதிதலை, வளர்மதியின் ஒளி வளர்ந்து வளர்ந்து நிறைவெய்த அக்காலத்து இருள் தேய்ந்து தேய்ந்து இல தாகுமாறுபோலத் திருவருட் சத்தியின் பதிதல் வளர்ந்து வளர்ந்து தீவிரதர நிலையை எய்தி பரிபா கமடைந்த மல ஆற்றலை முழுவதும் நீக்கி உயிர்களை இறைவன் திருவடியிற் சேர்த்து உய்விற்கும் என்க. இன்னருளே என்னப்பொழியாய் என்றது இறைவியின் இன்னருள் உயிர்க்கு உய்தி அருளுவதுபோல நீமழையினைப் பொழிந்து உலகு உயிர்களைப் பாதுகாப்பாயாக எனவேண்டியவாறு காண்க,
திருவெம்பாவை 547 முடைத்தாய் ( கோவை - 327 பேர் . உரை ) கரும்புருவச் சிலை ' ( கோவை -352 ) எனவருவன காண்க . சிலை - வில் குலவி - வளைத்து குலவு - வளைவு . குலவுச் சினைப்பூக் கொய்து ( புற.- 11- 4 ) தன்னில் பிரிவிலா எங்கோமான் - எம்மையாளாகவுடைய எங் கோமான் இறைவி தன்னிற் பிரியாமையை உடையாள் உன்தன் நடு விருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி என அடிகள் அருளுமாற் றாலுமறிக . அன்பர் என்றது சீவன் முத்தராய்த் திகழும் மெய்யன் பரை . நமக்கு என்றது இறை வியின் தொண்டுடைய கன்னியர்களாகிய நமக்கும் என்றவாறு . அன்பர்க்கும் நமக்கும் என்னும் உம்மைகள் தொக்கு நின்றன . ஆளுடையாள் கோமான் அன்பர்க்கும் நமக்கும் சுரக்கும் இன்ன ருளே என்னப் பொழியாய் என்க . தெய்வ நாயக னீறணி மேனிபோற் சென்று பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்து எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்னக் கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரன் மேகம் எனத் திருவிளையாடற் புராணத்து வருதலுங் காண்க . ( நாட்டு -2 ) முன்னி முன்சுரக்கும் இன்னருள் என்றது எங்கோமான் அன்பர்க் கும் தன்னடியாராகிய நமக்கும் இறைவி சார்ந்து நின்று முதலிற் செய்யும் இனிய அருள் என்றவாறு . இவ்வருள் சத்திநிபாதம் எனப் படும் . சத்திநிபாதம் - திருவருட்சத்தி பதிதல் . அது உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நால் வகைப்படும் . திருவருட்சத்தி பதிதலை வளர்மதியின் ஒளி வளர்ந்து வளர்ந்து நிறைவெய்த அக்காலத்து இருள் தேய்ந்து தேய்ந்து இல தாகுமாறுபோலத் திருவருட் சத்தியின் பதிதல் வளர்ந்து வளர்ந்து தீவிரதர நிலையை எய்தி பரிபா கமடைந்த மல ஆற்றலை முழுவதும் நீக்கி உயிர்களை இறைவன் திருவடியிற் சேர்த்து உய்விற்கும் என்க . இன்னருளே என்னப்பொழியாய் என்றது இறைவியின் இன்னருள் உயிர்க்கு உய்தி அருளுவதுபோல நீமழையினைப் பொழிந்து உலகு உயிர்களைப் பாதுகாப்பாயாக எனவேண்டியவாறு காண்க