தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

நளித் திங்கள், 2020 ஈ தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன், ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை, சைவ மாணவர் சபை (பதிவு - HAJ4IJA/343) 0715588737, aathan@thennadu.org சிறந்து ஓங்குக செந்தமிழ் வழிபாடு வரலாற்றின் பக்கங்களை வருத்தத்தோடு புரட்டும், ஒரு பேரினத்தின் இளைய தலைமுறை, தமது முன்னைய தலைமுறை களை எண்ணி கோவப்பட்டுக் கொள்ளும். அவர்களது அறி யாமையாலும், கோழைத்தனத்தாலும் தாம் இழந்தவற்றை நினைத்து நினைத்து வெட்கமடைவது தான் பேரவலமாகும். பெரும் துன்பமும், மனக்குறையும் வருகின்ற போதும், சக மனிதன் உதவ மறுக்கும் போதும், தம் கவலைகளைச் சொல்லி அழுவதற்காக கடவுளிடம் ஓடும் போது அங்கு ஒரு இடைத்தரகர் வழிமறித்து எங்கள் துன்பங்களை கடவுளிடம் மொழிபெயர்ப்புச் செய்து தான் வெளிப்படுத்து வார் எனின் அதைக்காட்டிலும் ஒரு துயரம் வேறெதுவும் இருக்க முடியாது. தமிழன் கட்டிய பெரும் கோயில்களிலெல்லாம் தமிழ் மறுக்கப்படுவதும் சிலரால் வெறுக்கப்படுவதும் காலக்கொடுமை! ‘மருந்து வேண்டில் இவை, மந்திரங்கள்இவை, புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மொழி செய்த தமிழே, மந்திர மொழி என்பதை மறந்த எம் முன்னோர்கள் கோயில்களோடு மொழியையும் தாரை வார்த்து கொடுத்தனர்! புரியாத ஏவல் மந்திரங்களை இறைவனை அர்ச்சனை செய்யும் மந்திரங்களாக எண்ணி மகிழ்ந்தனர்! தன்னைத் தகவமைத்து நிலை நிறுத்திக் கொள்ள இயலாத, பேச்சு வழக்கிழந்த வடமொழியை இறைமொழி என்றனர், நிறை மொழியாகிய தமிழை கருவறையில் நுழையத்தடுத்தனர்! காலம் முழுதும் கருவறையில் ஒலித்த தமிழ், ஆரியப்படையெடுப்புக்களால் அகன்று, அந்நிய மேலைத்தேய படையெடுப்புகளால் தன்னிலை மறந்து முன்னிலை அடைவதில் தடைப்பட்டு நின்றது என்பதை இளைய சைவத் தமிழ் உலகம் அறிவில் ஏற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டிய மறுமலர்ச்சிக் காலம் இப்போது கனிந்திருக்கின்றது. தமிழன் தன்னிலை மறந்திருந்த காலத்திலும், அவனது அடையாளங்களும் மரபும் அழிந்து போய் விடாது இருக்க சில விடிவெள்ளிகள் தோன்றி அரும்பணியாற்றிய புண்ணிய பலனாலேயே இன்றும் மறைந்த வேர்களைப்பற்றி நீர்பாய்ச்சும் புதிய முயற்சிகள் முன்னின்று நடக்கின்றன எனலாம்! எம் பெரும் கடவுளர்களாகிய முன்னவர் வழிபாடும் சிவ வழிபாடும் செந்தமிழிலேயே இனிச் சிறக்கவேண்டி என்றும் எமக்கு முன்னையவர் செய்த பிழையை இளைய பிள்ளைகள் இனிச் செய்வதில்லை என்றும் உறுதி கொள்ள வேண்டும் மற்று நீ வன்மை பேசி வன்றொண்டன் எனும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மை 'சொற்றமிழ்'பாடுக!' என்று இறைவன் விரும்பிக்கேட்ட இன்தமிழே இனி இறைத்தமிழாக ஓங்கி ஒலிக்க வேண் டும்! 'ஓம்' என்கிற பிரபஞ்ச ஒலிக்கு மந்திர தகுதியளித்த முருகன் அதன் பொருளறியாத பிரம்மனைத் தண்டித்தார் என்பது வெறும் புராணக் கதையல்ல அது பெருந்தமிழின் உயர் சிறப்பு என்பதை எப்போதும் நாம் ஆழ்ந்து விளங்கிக் கொள்கின்றோமோ...., 'ஆவாஹயாமி...' என்று வேத வேள்வியிலும் கோவிலிலும் ஓதிய போதெல்லாம் வராத இறைவன் 'அம்மையே.... அப்பா...' என்ற குரலுக்கு ஓடி வந்ததன் உள்ளார்ந்த செய்தியை தெளிந்து அறிந்து கொள்கின்றோமோ.... அந்தப் புள்ளிகளிலிருந்து எமது வரலாற்றின் மீது படிந்த இருள் அகன்று புதிய ஒளி விரிந்து பரவும்!. இந்த விளக்கமும் தெளிவும் விரைந்து கிடைக்க அருவ நிலையில் நின்று நம்மை ஆளும் கடவுளர்களின் நிறைந்த அருளை வேண்டுவதும் எல்லோரும் ஒருமித்து அந்த அருளுக்காய் இறைஞ்சுவதுமே ஒரே வழி! இறந்து போன காலத்தின் இருள் அகன்று இனிச் சிறந்து ஓங்கட்டும் செந்தமிழ் வழிபாடு! திங்கள் ஒரு பள்ளி யாழ்ப்பாணத்தின் சைவப் பாசறை- மகாஜனக் கல்லூரி பாடசாலையை நிர்வகித்தனர். திரு. ஜெயரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப் பகுதியில், பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பாடசாலை வளாகத்தின் வடகிழக்கு பகுதியில், தெற்கு நோக்கிய ஆலயம் அமைக்கப்பட்டு, ஐம்பொன்னினாலான சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சிவத்திரு.வைத்தியநாதக் குருக்களினால் 30.10.1960ல் கடவுள் மங்கல நீராட்டு நிகழ்த்தப்பட்டது. திருமதி.கேசினி.கோணேஸ்வரன் (மகாஜனக் கல்லூரி பழைய மாணவி - சிட்னி, அவுஸ்திரேலியா இலங்கையில் உள்ள சைவப் பாடசாலைகளில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு ஒரு தனித்துவமான இடம் வழங்கப்படுகின்றது. ஆலயத்தில் தினசரி பூகை, தேவார, திருவாசகம், பெரிய புராணம் பாடுதல், முக்கியமான விழாக்களை முறையாகக் கொண்டாடுதல், கோவில்களின் திருவிழாக் காலத்தில் பூசைகள் செய்தல், சைவ நெறியுடன் கூடிய வாழ்க்கை முறை, சைவ உணவு, சரியைத் தொண்டுகளைச் செய்தல், சைவ சமய புத்தகங்களை பொருள் உணர்ந்து படித்தல், என இன்னும் பல சைவ நெறிமுறைகளை செயன்முறையாகச் செய்து, மண்ணில் நல்ல வண்ணம் வாழ வகுப்பதால், மகாஜனக் கல் லூரி அன்று முதல் இன்று வரை ஒரு சிறந்த சைவப் பாடசாலையாக மிளிர்கிறது. சைவ சமயம் மக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளதை உணர்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள், தெல்லிப்பழை என்ற கிராமத்திலே சைவப் பாடசாலை ஒன்றை 1910ல் ஆரம்பித்தார். தினசரி பிரார்த்தனை, வழிபாடு களின் பின்னரே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், மாலையி லும் பிரார்த்தனையின் பின்னரே வீடு செல்வதாகவும், பாடசாலை யில் கற்ற பெரியோர்கள் கூறி யுள்ளனர். வகுப்பறைகளின் நடு வில் ஓரிடத்தில், அடுக்குப்பெட்டி ஒன்றினுள் சுவாமிப் படங்களை வைத்து, திருமுறைகள் பாடி வழிபாடு நிகழ்ந்ததாகவும், ஒன்பனிரா (நவராத்திரி விழாவினை கொண்டாடியதாகவும் 1930ல் பாடசாலையில் படித்த முதியவர் ஒருவர் கூறியுள்ளார். 03 தென்னாடு கேமடய கோத்ரம் "ஆலயந் தொழுவது சாலவும் நன்று " என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க மாணவர்கள் காலையில் வரிசையாக சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று, அங்கு நடைபெறும் தீபவழிபாடு, பூவழிபாடு (அர்ச்சனை) என்பவற்றிற் கலந்து, தேவாரம், புராணம் பாடிய பின்பே வகுப்புகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்க ஆரம் பித்தனர். பூசை நிறைவடைந்ததும் திருமுறைகள் ஒலிவாங்கியில் பாடப்படுகின்றன. ஆலயத்தில் வழிபாடு செய்யும் மாணவர்களு டன், பாடசாலையின் வெவ்வேறு பகுதிகளில் கடமையில் இருக்கும் மாணவத் தலைவர்கள், ஆசிரியர் கள், சிற்றூழியர்கள் போன்ற அனைவரும் நின்ற இடத்தில் இருந்தே வழிபாடு செய்ய வசதி யாய் பாடசாலை சூழல் உள்ளது. திரு.தெ. துரையப்பாபிள்ளை இதே போன்று பாடசாலைக்கு வெளியேயும், அயலிலுள்ள மக்கள் அந்தந்த இடத்தில் நின்ற படியே கும்பிடுவது வழமை. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தேவார புராணத்துடன், சிவபுராணமும் பாடி வழிபட்டு வருகிறார்கள். இதனாலே எல்லா மாணவர்களுக்கும் சிவபுராணம் மனப்பாடமாக இருக்கிறது.ஆலயத்தில் ஆனந்தக் கூத்தனுக்கு ஆறு ஆடல்வல்லான் சிவ நீராட்டுக்களும் மிகச் சிறப்பாக (05ஆம் பக்கம் பார்க்க) பாவலரின் மறைவின் பின் திரு.கா. சின்னப்பா அவர்களும், அவரைத் தொடர்ந்து பாவலரின் மூத்த மகன் திரு. து. ஜெயரத்தினம் அவர்களும் — தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : aathan@thennadu.org இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி
நளித் திங்கள் 2020 தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன் ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை சைவ மாணவர் சபை ( பதிவு - HAJ4IJA / 343 ) 0715588737 aathan@thennadu.org சிறந்து ஓங்குக செந்தமிழ் வழிபாடு வரலாற்றின் பக்கங்களை வருத்தத்தோடு புரட்டும் ஒரு பேரினத்தின் இளைய தலைமுறை தமது முன்னைய தலைமுறை களை எண்ணி கோவப்பட்டுக் கொள்ளும் . அவர்களது அறி யாமையாலும் கோழைத்தனத்தாலும் தாம் இழந்தவற்றை நினைத்து நினைத்து வெட்கமடைவது தான் பேரவலமாகும் . பெரும் துன்பமும் மனக்குறையும் வருகின்ற போதும் சக மனிதன் உதவ மறுக்கும் போதும் தம் கவலைகளைச் சொல்லி அழுவதற்காக கடவுளிடம் ஓடும் போது அங்கு ஒரு இடைத்தரகர் வழிமறித்து எங்கள் துன்பங்களை கடவுளிடம் மொழிபெயர்ப்புச் செய்து தான் வெளிப்படுத்து வார் எனின் அதைக்காட்டிலும் ஒரு துயரம் வேறெதுவும் இருக்க முடியாது . தமிழன் கட்டிய பெரும் கோயில்களிலெல்லாம் தமிழ் மறுக்கப்படுவதும் சிலரால் வெறுக்கப்படுவதும் காலக்கொடுமை ! மருந்து வேண்டில் இவை மந்திரங்கள்இவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை ' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மொழி செய்த தமிழே மந்திர மொழி என்பதை மறந்த எம் முன்னோர்கள் கோயில்களோடு மொழியையும் தாரை வார்த்து கொடுத்தனர் ! புரியாத ஏவல் மந்திரங்களை இறைவனை அர்ச்சனை செய்யும் மந்திரங்களாக எண்ணி மகிழ்ந்தனர் ! தன்னைத் தகவமைத்து நிலை நிறுத்திக் கொள்ள இயலாத பேச்சு வழக்கிழந்த வடமொழியை இறைமொழி என்றனர் நிறை மொழியாகிய தமிழை கருவறையில் நுழையத்தடுத்தனர் ! காலம் முழுதும் கருவறையில் ஒலித்த தமிழ் ஆரியப்படையெடுப்புக்களால் அகன்று அந்நிய மேலைத்தேய படையெடுப்புகளால் தன்னிலை மறந்து முன்னிலை அடைவதில் தடைப்பட்டு நின்றது என்பதை இளைய சைவத் தமிழ் உலகம் அறிவில் ஏற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டிய மறுமலர்ச்சிக் காலம் இப்போது கனிந்திருக்கின்றது . தமிழன் தன்னிலை மறந்திருந்த காலத்திலும் அவனது அடையாளங்களும் மரபும் அழிந்து போய் விடாது இருக்க சில விடிவெள்ளிகள் தோன்றி அரும்பணியாற்றிய புண்ணிய பலனாலேயே இன்றும் மறைந்த வேர்களைப்பற்றி நீர்பாய்ச்சும் புதிய முயற்சிகள் முன்னின்று நடக்கின்றன எனலாம் ! எம் பெரும் கடவுளர்களாகிய முன்னவர் வழிபாடும் சிவ வழிபாடும் செந்தமிழிலேயே இனிச் சிறக்கவேண்டி என்றும் எமக்கு முன்னையவர் செய்த பிழையை இளைய பிள்ளைகள் இனிச் செய்வதில்லை என்றும் உறுதி கொள்ள வேண்டும் மற்று நீ வன்மை பேசி வன்றொண்டன் எனும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும் . ஆதலால் மண்மேல் நம்மை ' சொற்றமிழ்'பாடுக ! ' என்று இறைவன் விரும்பிக்கேட்ட இன்தமிழே இனி இறைத்தமிழாக ஓங்கி ஒலிக்க வேண் டும் ! ' ஓம் ' என்கிற பிரபஞ்ச ஒலிக்கு மந்திர தகுதியளித்த முருகன் அதன் பொருளறியாத பிரம்மனைத் தண்டித்தார் என்பது வெறும் புராணக் கதையல்ல அது பெருந்தமிழின் உயர் சிறப்பு என்பதை எப்போதும் நாம் ஆழ்ந்து விளங்கிக் கொள்கின்றோமோ .... ' ஆவாஹயாமி ... ' என்று வேத வேள்வியிலும் கோவிலிலும் ஓதிய போதெல்லாம் வராத இறைவன் ' அம்மையே .... அப்பா ... ' என்ற குரலுக்கு ஓடி வந்ததன் உள்ளார்ந்த செய்தியை தெளிந்து அறிந்து கொள்கின்றோமோ .... அந்தப் புள்ளிகளிலிருந்து எமது வரலாற்றின் மீது படிந்த இருள் அகன்று புதிய ஒளி விரிந்து பரவும் !. இந்த விளக்கமும் தெளிவும் விரைந்து கிடைக்க அருவ நிலையில் நின்று நம்மை ஆளும் கடவுளர்களின் நிறைந்த அருளை வேண்டுவதும் எல்லோரும் ஒருமித்து அந்த அருளுக்காய் இறைஞ்சுவதுமே ஒரே வழி ! இறந்து போன காலத்தின் இருள் அகன்று இனிச் சிறந்து ஓங்கட்டும் செந்தமிழ் வழிபாடு ! திங்கள் ஒரு பள்ளி யாழ்ப்பாணத்தின் சைவப் பாசறை மகாஜனக் கல்லூரி பாடசாலையை நிர்வகித்தனர் . திரு . ஜெயரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப் பகுதியில் பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன . பாடசாலை வளாகத்தின் வடகிழக்கு பகுதியில் தெற்கு நோக்கிய ஆலயம் அமைக்கப்பட்டு ஐம்பொன்னினாலான சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சிவத்திரு.வைத்தியநாதக் குருக்களினால் 30.10.1960 ல் கடவுள் மங்கல நீராட்டு நிகழ்த்தப்பட்டது . திருமதி.கேசினி.கோணேஸ்வரன் ( மகாஜனக் கல்லூரி பழைய மாணவி - சிட்னி அவுஸ்திரேலியா இலங்கையில் உள்ள சைவப் பாடசாலைகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு ஒரு தனித்துவமான இடம் வழங்கப்படுகின்றது . ஆலயத்தில் தினசரி பூகை தேவார திருவாசகம் பெரிய புராணம் பாடுதல் முக்கியமான விழாக்களை முறையாகக் கொண்டாடுதல் கோவில்களின் திருவிழாக் காலத்தில் பூசைகள் செய்தல் சைவ நெறியுடன் கூடிய வாழ்க்கை முறை சைவ உணவு சரியைத் தொண்டுகளைச் செய்தல் சைவ சமய புத்தகங்களை பொருள் உணர்ந்து படித்தல் என இன்னும் பல சைவ நெறிமுறைகளை செயன்முறையாகச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வகுப்பதால் மகாஜனக் கல் லூரி அன்று முதல் இன்று வரை ஒரு சிறந்த சைவப் பாடசாலையாக மிளிர்கிறது . சைவ சமயம் மக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளதை உணர்ந்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தெல்லிப்பழை என்ற கிராமத்திலே சைவப் பாடசாலை ஒன்றை 1910 ல் ஆரம்பித்தார் . தினசரி பிரார்த்தனை வழிபாடு களின் பின்னரே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் மாலையி லும் பிரார்த்தனையின் பின்னரே வீடு செல்வதாகவும் பாடசாலை யில் கற்ற பெரியோர்கள் கூறி யுள்ளனர் . வகுப்பறைகளின் நடு வில் ஓரிடத்தில் அடுக்குப்பெட்டி ஒன்றினுள் சுவாமிப் படங்களை வைத்து திருமுறைகள் பாடி வழிபாடு நிகழ்ந்ததாகவும் ஒன்பனிரா ( நவராத்திரி விழாவினை கொண்டாடியதாகவும் 1930 ல் பாடசாலையில் படித்த முதியவர் ஒருவர் கூறியுள்ளார் . 03 தென்னாடு கேமடய கோத்ரம் ஆலயந் தொழுவது சாலவும் நன்று என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க மாணவர்கள் காலையில் வரிசையாக சிவகாமி அம்மனுடனுறை ஆனந்தக் கூத்தப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் தீபவழிபாடு பூவழிபாடு ( அர்ச்சனை ) என்பவற்றிற் கலந்து தேவாரம் புராணம் பாடிய பின்பே வகுப்புகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்க ஆரம் பித்தனர் . பூசை நிறைவடைந்ததும் திருமுறைகள் ஒலிவாங்கியில் பாடப்படுகின்றன . ஆலயத்தில் வழிபாடு செய்யும் மாணவர்களு டன் பாடசாலையின் வெவ்வேறு பகுதிகளில் கடமையில் இருக்கும் மாணவத் தலைவர்கள் ஆசிரியர் கள் சிற்றூழியர்கள் போன்ற அனைவரும் நின்ற இடத்தில் இருந்தே வழிபாடு செய்ய வசதி யாய் பாடசாலை சூழல் உள்ளது . திரு.தெ. துரையப்பாபிள்ளை இதே போன்று பாடசாலைக்கு வெளியேயும் அயலிலுள்ள மக்கள் அந்தந்த இடத்தில் நின்ற படியே கும்பிடுவது வழமை . ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தேவார புராணத்துடன் சிவபுராணமும் பாடி வழிபட்டு வருகிறார்கள் . இதனாலே எல்லா மாணவர்களுக்கும் சிவபுராணம் மனப்பாடமாக இருக்கிறது.ஆலயத்தில் ஆனந்தக் கூத்தனுக்கு ஆறு ஆடல்வல்லான் சிவ நீராட்டுக்களும் மிகச் சிறப்பாக ( 05 ஆம் பக்கம் பார்க்க ) பாவலரின் மறைவின் பின் திரு.கா. சின்னப்பா அவர்களும் அவரைத் தொடர்ந்து பாவலரின் மூத்த மகன் திரு . து . ஜெயரத்தினம் அவர்களும் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : aathan@thennadu.org இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . அனுப்ப வேண்டிய முகவரி