தென்னாடு கார்த்திகை திங்கள் இதழ் - 02

நளித் திங்கள், 2020 சிவத்திரு. திருவம்பலம் தென்னவன் கடந்த மாதத் தொடர்) மண்மருளத் துடிகறங்க விண்மேயாற்குக் கல்கொண்டன்று நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் கல்லை எடுத்து கொணர்தல். - நீர்ப்படை - கல் நீர்ப்படுத்தல் வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக் கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் நீராட்டி வாவியில் கல்லை இட்டனர். பின்னர் அதனை சுத்தப்படுத்தி எழுந்தருள செய்வதற்கான ஆயத்தமாக இந்த படியை செய்தனர். நடுதல் - எழுந்தருள செய்தல் வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி அதாவது கல்லினை அடையாளப்படுத்தி அக்கல்லை நடுதல். முழுமையாக சிலைசெய்யமுடியாத காலத்தில் பெயரினை மட்டும் எழுத்து வடிவமாக எழுதி கல்லினை நட்டனர். மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி அணிந்து பெயர்பொறித்து - வேல்அமருள் ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று காண்தக நாட்டினார் கல் மாலைசூட்டி, மணி ஒலித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேற்போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்' . இதனையே தற்போதைய ஆகமங்களில் எழுந்தருள செய்தல் என்று கொள்ளலாம். பெரும்படை - கல் முறைப் பழிச்சல் நிழலவிர் எழில்மணிப்பூண் கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று - ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள். இறந்த வீரனின் சிறப்புக்களை மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் வாழ்த்துதலும் என்று பொருள் கொள்ளலாம். வாழ்த்துதல்-இற்கொண்டு புகுதல் வேத்த மருள் விளிந்தோன் கல்லென ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல்' என்பது இதன் விளக்கம். இவ்வாறே தமிழர் வழிபாடுகள் ஆரம்பமாயின என்று இலக்கியப்பார்வையில் உறுதி படச்சொல்லமுடியும். இவைகளே பின்னர் கோவில்களாகவும் ஆகமங்களாகவும் மாறின என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். போரில் மரணமடைந்தவர்கள் தம் குடிகளைக் காக்க வந்தவர்களாகவும் அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள் என்பதனையும் மக்கள் நம்பினர். பிற்காலத்தில் இவர்கள் குலதெய்வங்களாகவும் காவல் தெய்வங்களாகவும் மாறுகின்றனர்.ஆகவே நடுகல் வழிபாடே முன்னோரை தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபை முதன்முதலில் எடுத்துக்காட்டி நிற்கிறது. களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி, அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது விருந்து எதிர் பெறுகதில் யானே என்னையு மோ.......... வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே - அள்ளுார் நன் முல்லையார் பாடல்-புறநானூறு யானைகள் மிதித்து இடையிடையே சிதைந்த முள்வேலியும், மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்தாள் ஒரு மறக்குல இளையவள், விருந்தினர்கள் என் இல்லத்துக்கு வரவேண்டும் என்றும் என் கணவனுக்கும் வேந்தனுக்கும் நாடு விரிவாக்கும் பகைவனோடு போர் வரவேண்டும் என்றும் அதில் அவர்கள் வெல்லவேண்டும் என்றும் தன் குடி முன்னோரின் நடுகற்களை கைதொழுது பரவுகிறாள். இப்படித்தான் நீத்தார் வழிபாடு ஆரம்பமாகிறது. கல்லை கணவனாக்கி ஃ வீரனாக்கி கடைசியில் காவல் தெய்வமாக்குகிறார்கள். இதிலிருந்து தான் தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரம்பமாகின்றன. தென்புலத்தார் வழிபாடு குமரிக்கண்ட கடல்கோளின் பின்னர், அங்கே அதாவது தெற்கே வாழ்ந்து கடல்கோளில் காவுகொள் ளப்பட்ட மக்களை நினைத்து முன்னெடுக்கப்பட்ட தென்னாடு நீத்தார் வழிபாடுகளே தென்புலத்தார் வழிபாடு என்றாகியது. பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென்திசை ஆண்ட தென்னவன் வாழி - சிலப்பதிகாரம் மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் - கலித்தொகை தென்புலம், தென்னாடு என்றழைக்கப்பட்ட குமரிக்கண்ட நிலத்தின் இலக்கிய குறிப்புகள் மேலே காட்டப்பட்டுள்ளன. இங்கு இருந்த பெருமளவான மக்கள் கடல்கோளினால் காவு கொள்ளப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. தெற்கினை யம திசை என்று மக்களுக்கு பயமூட்டியதற்கு இந்த கடல்கோளும் காரணமாகவிருக்கலாம். அத்துடன் தெற்கே கால் நீட்டி துயில் கொள்ளக்கூடாது என்பதும், எங்கள் முன்னோர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணிற்கு காலை நீட்டாமல் அவர்களுக்கு மரியாதையை செய்வதாகவும் இருக்கலாம். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை - திருக்குறள் தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர் கள், தெய்வங்கள், விருந்தினர்கள், உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள், தான் என்னும் தன்னை ஆக்கிய ஐந்து வகையாரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும். திருக்குறளை தமிழ்வேதம் என்று பாராட்டுபவர்கள் குமரிக்கண்டம், தென்புலம், தென்புலத்தார் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதற்கு இந்தக்குறள் ஒரு சான்றாக அமைகிறது. இந்தியாவில் கன்னியாகுமரி, ராமேசுவரம் கடல்பகுதியில் தெற்கு நோக்கி மக்கள் மறைந்த மக்களை வழிபாடு செய்யும் வழமை இன்றும் இருந்து வருகிறது. யா - என்றால் தெற்கு, தரை என்பது இடம் ஃ நிலம், யாத்தரை என்பது யாத்திரை ஆகி, தற்போது யாத்ரா ஆகிவிட்டது. இது எல்லாமே பண்டைத்தமிழர் வாழ்வியலும் பண்பாடும் சார்ந்தவையே. டெம்பிள் (Temple) என்ற ஆங்கில வார்த்தையின் கருத்து தென்புலம் என்னும் தென்னாடு என எடுக்கலாம் தென்புலம் என்ற சொல் இலத்தீனில் Templum என்றழைக்கப்பட்டிருக்கலாம். அது பின்னர் ஆங்கிலத்தில் வுநஅடரஅ இலிருந்து வுநஅடந் ஆகியிருக்கலாம். அதாவது மூத்தோர் மற்றும் தென்புலத்தார் வழிபாடே மனித நாகரிகத்தில் வழிபாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று பெருமைப்படுவதில் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்துடன் இதனை உலகத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். தென்புலத்தார் வழிபாடு == 07 தென்னாடு செண்டபாப் தென்புலத்தார் வழிபாடுகளும் வழிபாட்டுக் காலங்களும் நீத்தார் வழிபாட்டிற்கு தென்புலத்தார் வழிபாடு என்ற பெயர்வரக் காரணத்தை முன்னர் விளகியிருந்தேன். பிறப்பினை நாள்மீன் (நட்சத்திரத்தினை வைத்தும்) இறப்பினை நிலவுடன் தொடர்பாக பிறைநாளினை (திதியை) வைத்தும் குறிப்பிட்டனர் பண்டைத்தமிழர். இது பொதுவாக பகல் / இரவு, எழுச்சி / வீழ்ச்சி என்ற தத்துவத்தில் வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமா விஞ்ஞான விளக்கம் இருக்கும் அதுபற்றிய முழுமையான அறிவு எனக்கு இல்லை. சூரியன் முதலான கிரகங்களை கோள்மீன் என்றும், நட்சத்திரங்களை நாள்மீன் என்றும் சொல்வது பண்டைத் தமிழ் மரபு. சூரியன் செல்லும் வீதியில் 12 வீடுகள் உள்ளன என்றும், அவற்றுள் மேடராசியே முதலில் உள்ளது என்றும் ”நெடுநல்வாடை"கூறுகிறது. (இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்) மெழுகு செய் படமிசைத் திண் நிலை மருப்பின் ஆடு தலையாக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து நெடுநல்வாடை 161 மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் ஆடு (மேடராசி) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. இதிலிருந்து மேடராசி தான் முதலாவது வீடாக ஃராசியாக குறிக்கப்படுகிறது. சூரியனின் பயணத்தினை இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சூரியன் மகரராசியில் இருந்து மிதுனராசி வரைக்கும் திங்களில் (மாதத்தில்) சுறவம் (தை) முதல் ஆடவை (ஆனி) வரை இருக்கும் காலம் ஆண்டுப்பகல் படைப்புருவாக்க காலமெனவும் அதாவது சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் காலம் (வடபுலப்பயணம் - உத்தராயணம்) எனவும் பின்னர் சூரியன் கடகத்தில் இருந்து தனுசு ராசி வரைக்கும் திங்களில் (மாதத்தில்) கடகத்தில் (ஆடியில்) இருந்து சிலை (மார்கழி) வரை ஆண்டிரவு ஒடுக்க காலம் அதாவது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் காலம் (தென்புலப்பயணம் - தக்க்ஷிணாயணம்) எனவும் பிரிக்கலாம். தென்புலப்பயணம் தூய்மைப்படுத்துவதற் கானது, வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று மரபுவழி பின்பற்றப்படுகிறது. பீசுமர் அம்புப்படுகையில் சிலைத்திங்களில் (மார்கழியில்) இருந்து சுறவத்திங்கள் (தை) வரை உயிரை விடாமல் வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று காத்திருந்து உயிரை விட்டார். ஏனெனில், இயற்கையின் இந்த மாற்றத்தை உபயோகித்து அவர் தன்னிலை மாற்றத்தை சாத்தியமாக்க விரும்பினார்.அதுபோல் சித்தாத்தர் (புத்தபெருமான்) அவர்களும் வடபுலப் பயணத்தின் மூன்றாவது நிறைமதி நாளில் ஞானம் அடைந்தார். அத்துடன் இந்த காலப்பகுதியில் வளர்ச்சி, செழிப்பு அறுவடைக்கு உகந்த காலமாகும். தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலும் வடபயண முதல்நாளிலே கொண்டாடப்படுகிறது. வடபுலப்பயணத்தில் வரும் மறைமதியானது சுறவமறைமதி (தை அமாவாசை) எனவும் தென்புலப் பயணத்தில் வரும் மறைமதியானது கடகமறைமதி (ஆடி அமாவாசை) எனவும் கொண்டாடப்படுகிறது. நீத்தார் நாள் (இறந்ததினம்) மற்றும் நீத்தல் பிறைநாள் (திதி) வழிபாடுகள் உங்கள் அப்பாவோ, அம்மாவோ, உடன்பிறந்தோரோ அல்லது உறவினரோ சிவபுரம் அடைந்தால் (மறைந்தால்), அது நிச்சயமா வீடு பெறுதலே. அவர்களின் ஆன்மாவைப் பொறுத்தவரை உடம்பெனும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சென்றடைகிறார்கள். அவர்கள் நாள், இறந்தநேரம் என்ன பிறைநாள் (திதி) இருக்கிறதோ அதுதான் அவர்களின் இறந்தகாலத்தினைக் குறிக்கும் பிறைநாள் கணக்கு (திதி). பிறைநாள் (திதி) என்பது நிலவின் அசைவில் வைத்து கணிக்கப்படுகிறது. பதினாறு பிறைநாட்கள் இருக்கின்றன. இவற்றினை தமிழில் அதாவது உருவாக்கப்பட்ட மொழியில் பார்த்தால் காரணத்துடன் விளக்கமும் கிடைக்கும். மறைமதி (அமாவாசை) அடுத்து ஒருமை (பிரதமை), பின்னர் இருமை (துவிதியை), மும்மை (திருதியை), நான்மை (சதுர்த்தி), ஐம்மை (பஞ்சமி), அறுமை (சஷ்டி), எழுமை (சப்தமி), எண்மை (அஷ்டமி), தொண்மை(நவமி), பதின்மை (தசமி), பதிற்றொருமை (ஏகாதசி), பதிற்றிருமை (துவாதசி), பதின்மும்மை (திரயோதசி), பதினான்மை (சதுர்த்தசி), நிறைமதி (பௌர்ணமி) என்று வளர்கிறது தேய்கிறது. உதாரணமாக அம்மா அல்லது அப்பா பதிற்றிருமை (துவாதசி) பிறைநாளில் இறந்தால், மாதந்தோறும் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்கு பதிற்றிருமைப் பிறைநாளில் அவருக்கு உரிய பூசை வழிபாடுகளை செய்து உணவு படைத்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்து, காகம், பசு போன்ற உயிரினங்களுக்கும், சிவனடி யார்களுக்கும் உணவளித்து அவர்களின் சிவபுரப் பயணத்திற்கு வலுவூட்டுவதே அவர்களின் அவ்வுலக வாழ்விற்கும் எங்களின் இவ்வுலக வாழ்விற்கும் அருள் சேர்க்கும். (08ஆம் பக்கம் பார்க்க)
நளித் திங்கள் 2020 சிவத்திரு . திருவம்பலம் தென்னவன் கடந்த மாதத் தொடர் ) மண்மருளத் துடிகறங்க விண்மேயாற்குக் கல்கொண்டன்று நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் கல்லை எடுத்து கொணர்தல் . - நீர்ப்படை - கல் நீர்ப்படுத்தல் வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக் கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால் அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் நீராட்டி வாவியில் கல்லை இட்டனர் . பின்னர் அதனை சுத்தப்படுத்தி எழுந்தருள செய்வதற்கான ஆயத்தமாக இந்த படியை செய்தனர் . நடுதல் - எழுந்தருள செய்தல் வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி அதாவது கல்லினை அடையாளப்படுத்தி அக்கல்லை நடுதல் . முழுமையாக சிலைசெய்யமுடியாத காலத்தில் பெயரினை மட்டும் எழுத்து வடிவமாக எழுதி கல்லினை நட்டனர் . மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி அணிந்து பெயர்பொறித்து - வேல்அமருள் ஆண்தக நின்ற அமர்வெய்யோற் ( கு ) ஆகுஎன்று காண்தக நாட்டினார் கல் மாலைசூட்டி மணி ஒலித்து மயிற்பீலியைச் சூட்டி அவன் பெயரை எழுதி வேற்போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள் ' . இதனையே தற்போதைய ஆகமங்களில் எழுந்தருள செய்தல் என்று கொள்ளலாம் . பெரும்படை - கல் முறைப் பழிச்சல் நிழலவிர் எழில்மணிப்பூண் கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று - ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள் . இறந்த வீரனின் சிறப்புக்களை மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் வாழ்த்துதலும் என்று பொருள் கொள்ளலாம் . வாழ்த்துதல் - இற்கொண்டு புகுதல் வேத்த மருள் விளிந்தோன் கல்லென ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல் ' என்பது இதன் விளக்கம் . இவ்வாறே தமிழர் வழிபாடுகள் ஆரம்பமாயின என்று இலக்கியப்பார்வையில் உறுதி படச்சொல்லமுடியும் . இவைகளே பின்னர் கோவில்களாகவும் ஆகமங்களாகவும் மாறின என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . போரில் மரணமடைந்தவர்கள் தம் குடிகளைக் காக்க வந்தவர்களாகவும் அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள் என்பதனையும் மக்கள் நம்பினர் . பிற்காலத்தில் இவர்கள் குலதெய்வங்களாகவும் காவல் தெய்வங்களாகவும் மாறுகின்றனர்.ஆகவே நடுகல் வழிபாடே முன்னோரை தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபை முதன்முதலில் எடுத்துக்காட்டி நிற்கிறது . களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது விருந்து எதிர் பெறுகதில் யானே என்னையு மோ .......... வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக எனவே - அள்ளுார் நன் முல்லையார் பாடல் - புறநானூறு யானைகள் மிதித்து இடையிடையே சிதைந்த முள்வேலியும் மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்தாள் ஒரு மறக்குல இளையவள் விருந்தினர்கள் என் இல்லத்துக்கு வரவேண்டும் என்றும் என் கணவனுக்கும் வேந்தனுக்கும் நாடு விரிவாக்கும் பகைவனோடு போர் வரவேண்டும் என்றும் அதில் அவர்கள் வெல்லவேண்டும் என்றும் தன் குடி முன்னோரின் நடுகற்களை கைதொழுது பரவுகிறாள் . இப்படித்தான் நீத்தார் வழிபாடு ஆரம்பமாகிறது . கல்லை கணவனாக்கி வீரனாக்கி கடைசியில் காவல் தெய்வமாக்குகிறார்கள் . இதிலிருந்து தான் தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரம்பமாகின்றன . தென்புலத்தார் வழிபாடு குமரிக்கண்ட கடல்கோளின் பின்னர் அங்கே அதாவது தெற்கே வாழ்ந்து கடல்கோளில் காவுகொள் ளப்பட்ட மக்களை நினைத்து முன்னெடுக்கப்பட்ட தென்னாடு நீத்தார் வழிபாடுகளே தென்புலத்தார் வழிபாடு என்றாகியது . பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி - சிலப்பதிகாரம் மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் - கலித்தொகை தென்புலம் தென்னாடு என்றழைக்கப்பட்ட குமரிக்கண்ட நிலத்தின் இலக்கிய குறிப்புகள் மேலே காட்டப்பட்டுள்ளன . இங்கு இருந்த பெருமளவான மக்கள் கடல்கோளினால் காவு கொள்ளப்பட்டனர் என்று நம்பப்படுகிறது . தெற்கினை யம திசை என்று மக்களுக்கு பயமூட்டியதற்கு இந்த கடல்கோளும் காரணமாகவிருக்கலாம் . அத்துடன் தெற்கே கால் நீட்டி துயில் கொள்ளக்கூடாது என்பதும் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணிற்கு காலை நீட்டாமல் அவர்களுக்கு மரியாதையை செய்வதாகவும் இருக்கலாம் . தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை - திருக்குறள் தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர் கள் தெய்வங்கள் விருந்தினர்கள் உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் தான் என்னும் தன்னை ஆக்கிய ஐந்து வகையாரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும் . அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும் . திருக்குறளை தமிழ்வேதம் என்று பாராட்டுபவர்கள் குமரிக்கண்டம் தென்புலம் தென்புலத்தார் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதற்கு இந்தக்குறள் ஒரு சான்றாக அமைகிறது . இந்தியாவில் கன்னியாகுமரி ராமேசுவரம் கடல்பகுதியில் தெற்கு நோக்கி மக்கள் மறைந்த மக்களை வழிபாடு செய்யும் வழமை இன்றும் இருந்து வருகிறது . யா - என்றால் தெற்கு தரை என்பது இடம் நிலம் யாத்தரை என்பது யாத்திரை ஆகி தற்போது யாத்ரா ஆகிவிட்டது . இது எல்லாமே பண்டைத்தமிழர் வாழ்வியலும் பண்பாடும் சார்ந்தவையே . டெம்பிள் ( Temple ) என்ற ஆங்கில வார்த்தையின் கருத்து தென்புலம் என்னும் தென்னாடு என எடுக்கலாம் தென்புலம் என்ற சொல் இலத்தீனில் Templum என்றழைக்கப்பட்டிருக்கலாம் . அது பின்னர் ஆங்கிலத்தில் வுநஅடரஅ இலிருந்து வுநஅடந் ஆகியிருக்கலாம் . அதாவது மூத்தோர் மற்றும் தென்புலத்தார் வழிபாடே மனித நாகரிகத்தில் வழிபாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று பெருமைப்படுவதில் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சி கொள்ளவேண்டும் . அத்துடன் இதனை உலகத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் . தென்புலத்தார் வழிபாடு == 07 தென்னாடு செண்டபாப் தென்புலத்தார் வழிபாடுகளும் வழிபாட்டுக் காலங்களும் நீத்தார் வழிபாட்டிற்கு தென்புலத்தார் வழிபாடு என்ற பெயர்வரக் காரணத்தை முன்னர் விளகியிருந்தேன் . பிறப்பினை நாள்மீன் ( நட்சத்திரத்தினை வைத்தும் ) இறப்பினை நிலவுடன் தொடர்பாக பிறைநாளினை ( திதியை ) வைத்தும் குறிப்பிட்டனர் பண்டைத்தமிழர் . இது பொதுவாக பகல் / இரவு எழுச்சி / வீழ்ச்சி என்ற தத்துவத்தில் வந்திருக்கலாம் . ஆனால் நிச்சயமா விஞ்ஞான விளக்கம் இருக்கும் அதுபற்றிய முழுமையான அறிவு எனக்கு இல்லை . சூரியன் முதலான கிரகங்களை கோள்மீன் என்றும் நட்சத்திரங்களை நாள்மீன் என்றும் சொல்வது பண்டைத் தமிழ் மரபு . சூரியன் செல்லும் வீதியில் 12 வீடுகள் உள்ளன என்றும் அவற்றுள் மேடராசியே முதலில் உள்ளது என்றும் நெடுநல்வாடை கூறுகிறது . ( இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும் ) மெழுகு செய் படமிசைத் திண் நிலை மருப்பின் ஆடு தலையாக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து நெடுநல்வாடை 161 மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் ஆடு ( மேடராசி ) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது . இதிலிருந்து மேடராசி தான் முதலாவது வீடாக ஃராசியாக குறிக்கப்படுகிறது . சூரியனின் பயணத்தினை இரண்டாகப் பிரிக்கலாம் . இதில் சூரியன் மகரராசியில் இருந்து மிதுனராசி வரைக்கும் திங்களில் ( மாதத்தில் ) சுறவம் ( தை ) முதல் ஆடவை ( ஆனி ) வரை இருக்கும் காலம் ஆண்டுப்பகல் படைப்புருவாக்க காலமெனவும் அதாவது சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் காலம் ( வடபுலப்பயணம் - உத்தராயணம் ) எனவும் பின்னர் சூரியன் கடகத்தில் இருந்து தனுசு ராசி வரைக்கும் திங்களில் ( மாதத்தில் ) கடகத்தில் ( ஆடியில் ) இருந்து சிலை ( மார்கழி ) வரை ஆண்டிரவு ஒடுக்க காலம் அதாவது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் காலம் ( தென்புலப்பயணம் - தக்க்ஷிணாயணம் ) எனவும் பிரிக்கலாம் . தென்புலப்பயணம் தூய்மைப்படுத்துவதற் கானது வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று மரபுவழி பின்பற்றப்படுகிறது . பீசுமர் அம்புப்படுகையில் சிலைத்திங்களில் ( மார்கழியில் ) இருந்து சுறவத்திங்கள் ( தை ) வரை உயிரை விடாமல் வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று காத்திருந்து உயிரை விட்டார் . ஏனெனில் இயற்கையின் இந்த மாற்றத்தை உபயோகித்து அவர் தன்னிலை மாற்றத்தை சாத்தியமாக்க விரும்பினார்.அதுபோல் சித்தாத்தர் ( புத்தபெருமான் ) அவர்களும் வடபுலப் பயணத்தின் மூன்றாவது நிறைமதி நாளில் ஞானம் அடைந்தார் . அத்துடன் இந்த காலப்பகுதியில் வளர்ச்சி செழிப்பு அறுவடைக்கு உகந்த காலமாகும் . தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலும் வடபயண முதல்நாளிலே கொண்டாடப்படுகிறது . வடபுலப்பயணத்தில் வரும் மறைமதியானது சுறவமறைமதி ( தை அமாவாசை ) எனவும் தென்புலப் பயணத்தில் வரும் மறைமதியானது கடகமறைமதி ( ஆடி அமாவாசை ) எனவும் கொண்டாடப்படுகிறது . நீத்தார் நாள் ( இறந்ததினம் ) மற்றும் நீத்தல் பிறைநாள் ( திதி ) வழிபாடுகள் உங்கள் அப்பாவோ அம்மாவோ உடன்பிறந்தோரோ அல்லது உறவினரோ சிவபுரம் அடைந்தால் ( மறைந்தால் ) அது நிச்சயமா வீடு பெறுதலே . அவர்களின் ஆன்மாவைப் பொறுத்தவரை உடம்பெனும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சென்றடைகிறார்கள் . அவர்கள் நாள் இறந்தநேரம் என்ன பிறைநாள் ( திதி ) இருக்கிறதோ அதுதான் அவர்களின் இறந்தகாலத்தினைக் குறிக்கும் பிறைநாள் கணக்கு ( திதி ) . பிறைநாள் ( திதி ) என்பது நிலவின் அசைவில் வைத்து கணிக்கப்படுகிறது . பதினாறு பிறைநாட்கள் இருக்கின்றன . இவற்றினை தமிழில் அதாவது உருவாக்கப்பட்ட மொழியில் பார்த்தால் காரணத்துடன் விளக்கமும் கிடைக்கும் . மறைமதி ( அமாவாசை ) அடுத்து ஒருமை ( பிரதமை ) பின்னர் இருமை ( துவிதியை ) மும்மை ( திருதியை ) நான்மை ( சதுர்த்தி ) ஐம்மை ( பஞ்சமி ) அறுமை ( சஷ்டி ) எழுமை ( சப்தமி ) எண்மை ( அஷ்டமி ) தொண்மை ( நவமி ) பதின்மை ( தசமி ) பதிற்றொருமை ( ஏகாதசி ) பதிற்றிருமை ( துவாதசி ) பதின்மும்மை ( திரயோதசி ) பதினான்மை ( சதுர்த்தசி ) நிறைமதி ( பௌர்ணமி ) என்று வளர்கிறது தேய்கிறது . உதாரணமாக அம்மா அல்லது அப்பா பதிற்றிருமை ( துவாதசி ) பிறைநாளில் இறந்தால் மாதந்தோறும் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்கு பதிற்றிருமைப் பிறைநாளில் அவருக்கு உரிய பூசை வழிபாடுகளை செய்து உணவு படைத்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து காகம் பசு போன்ற உயிரினங்களுக்கும் சிவனடி யார்களுக்கும் உணவளித்து அவர்களின் சிவபுரப் பயணத்திற்கு வலுவூட்டுவதே அவர்களின் அவ்வுலக வாழ்விற்கும் எங்களின் இவ்வுலக வாழ்விற்கும் அருள் சேர்க்கும் . ( 08 ஆம் பக்கம் பார்க்க )