தென்னாடு மார்கழித் திங்கள் இதழ் - 03

ஈ தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 14ம் நாள் (29.12.2020) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தென்னாட்டின் விதிமாற்றும் விரிசடையான் திருமுறைத் தொகுப்பு சிவவழி நின்று விதியை வெல்லலாம் என்று சத்தியம் செய்துள்ளார் திருஞானசம்பந்தர் சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே நீங்கள் விதியை வெல்ல முடியுமா? நிச்சயமாக வெல்லலாம். விரிசடையான் துணைகொண்டு விதியை வெல்லலாம் என்று ஆணையாகச் சொல்லுகிறார் திருஞானசம்பந்தர் சுவாமிகள். உலகின் முதற்கடவுளும், சைவத்தினையும் தமிழினையும் உருவாக்கிய சிவபெருமானின் பாதங்களை, அவனருளாலே வணங்கி திருவருட் துணையுடன் உண்மைகளை உங்களிடம் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன். தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும், அதன் ஓசையும், ஒலியும் இறைவனால் உருவாக்கப்பட்டவை. அதனாலே தான்தமிழ், தெய்வத்தமிழாகப் போற்றப்படுகின்றது. கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து, பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் என்ற பரஞ்சோதி முனிவரின் வரிகளும், நிழல்பொலி, கணிச்சிமணி நெற்றி, உமிழ் செங்கண், தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் என்ற கம்பரின் வரிகளும் தெய்வத் தமிழின் தோற்றத்தினை தெளிவாக்கியுள்ளன. தமிழ் மொழியை முத்தமிழ் என்பதற்கு இயல், இசை, நாடகம் என்பதை விடவும் இன்னும் ஒரு கருத்தியலும் இருந்து வருகிறது. தமிழ் மொழியானது மந்திரம் (மனதைத் திரமடையச் செய்யும் தன்மை), மந்தரம் (மனதைத் தரமடையச் செய்யும் தன்மை) மற்றும் மந்திறம் (மனதைத் திறமையடையச் செய்யும் தன்மை) என்ற மூன்று வகை ஆற்றலை உடையது. இது தெய்வத்தமிழாகிய எங்கள் பைந்தமிழுக்கே உரிய சிறப்பம்சமாகும். வினையும் விதியும் - வினையின் விளைவே விதியாகும் தமிழ் இலக்கணமாயினும் சரி, சைவக் கோட்பாடாயினும் சரி, வினை என்றால் ஒரு செயலையே குறிக்கும். நாங்கள் வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, நினைத்தோ நினைக்காமலோ பலவிதமான செய்கைகளை அதாவது வினைகளைச் செய்கிறோம். அவை நல்லதாக இருந்தால் நல்வினை என்றும் தீயவையாயின் தீவினை என்றும் இரண்டு பிரிவுகளாகின்றன. சுதந்திரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவதற்காக கடவுளின் படைப்பில் மனிதரை சுயாதீனமாகப் படைத்தது ஆறாம் அறிவு எனும் பிரித்தறியும் திறனையும் சேர்த்து பூவுலகுக்கு அனுப்புகிறார். அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி எது சரி எது பிழையென்று பிரித்தறிய முடியாமல் எமக்காக, எம்மைச் சார்ந்தவர்களுக்காக மனம், வாக்கு, காயம் இவை மூன்றினாலும் ஐம்பொறிகளா லும் நாங்கள் பலவகையான தீய வினைகளைச் செய்து இறுதியில் தீவினைத் தொகுப்பையே மேலோங்கச் செய்கிறோம். வினையும் விதியும் என்ற விடயத்தில் இன்னுமொரு கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த நூற்றாண்டில் விதியெனப் படும் சட்டவிதிகளால் வினையாகிய குற்றங்களை கட்டுபடுத்தியும், தண்டித்தும் வருகிறது நீதிமன்றம். இதையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, வினையின் விளைவே விதியாகும் என்றும் வினைகளைக் கட்டுப் படுத்த இறைவழியினை முதன்மை வழியாகவும் கொண்டும் வாழ்ந்தனர் சைவத்தமிழர்கள். அத்துடன் ஊழ்வினையாகிய முற்பிறப்பு வினைகளையும் அழிக்கும் உபாயத்தினையும் கையாண்டு விதியை வென்று வாழ்ந்தனர் பண்டைத் தமிழர்கள். மனிதர்களின் விதிகளில் இயங்கும் நீதிமன்றத்தால் தண்டனைக் காலத்தினைக் குறைத்து மன்னிப்புக் கொடுக் கும் பொழுது, உயிர்களிடத்தில் எல்லையற்ற அன்பைக் கொண்ட எம்பெருமான் விதியினை நிச்சயம் மாற்றி உங்களுக்கு அருள்பாலிப்பார் என்பதில் ஐயமேது. நாம் செய்யும் சகல வினைகளுக்கு மூலகார ணம் எங்களின் மனம்.ஆறாம் அறிவினைப் பயன்படுத்தி மனதை நெறிப்படுத்தி நல்லதை செய்தால் விதி நல்லாயிருக்கும், பிரித்தறியாமல் தீயவற்றினை செய்தால் விதி மாறிப்போகிறது. அந்தவகையில் விதியை வெல்லும் போரில் வெல்லவேண்டியது மனமே என்ற உண்மை வெளிப்படுகிறது.இனி மனதை வெல்வது எப்படி என்று பார்த்தால், முத்தமிழின் திறனாகிய மந்திரம், மந்தரம் மற்றும் மந்திறம் ஆகிய மூன்றாலும் என்ற தெளிவு பிறக்கிறது. அந்தவகையில் தமிழ் வேதங்களாகிய திருமுறைகளை, விரிசடையானை நினைந்து ஒலியெழுப்பி பாடுவதன் மூலம் மனம் திரம், தரம் மற்றும் திறம் அடைகின்றது. இந்நிலையில் உள்ள மனம் நல்லதையே செய்யும். அதனால் நல்வினைப் பயனையே அனுபவிக்கும். அத்துடன் திருமுறைகள் ஊழ் வினையையும் அறுத்து பேரின்பப் பெருவாழ் வினை தரவல்ல மருந்தாகவே இருக்கின்றன. ஆமை தன் கால்கள், தலை முதலாய ஐந்து உறுப்புக்களையும் ஓட்டுக்குள் ஒடுக்கி (02ஆம் பக்கம் பார்க்க) திருவாசகத்தில் ஒரு வாசகம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் - திருவெம்பாவை (1-2) வேத காலத்தில் சூரியனே ஒளியின் மூலமாய் கடவுளென வணங்கினர்.அனைத்திற்கும் காரணமானவன் கதிரவனே என்ற விஞ்ஞானக் கருதும் இருந்தது. அவனே சோதி. ஐதரசனை எரித்தே சூரியன் ஒளியைத் தருகிறான். இது ஒரு நாளைக்கு முடிவடைந்து அவன் ஒளியிழந்து உலகம் இருளும் காலமும் உண்டு. எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளே இந்தச் சோதியையும் தோற்றுவித்தவர் அதனாலே அவர் "அரும்பெரும் சோதி" எனப்படுகிறார்.இதனையே மணிவாசகர் திருவண்டப் பகுதியில் “அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு" (திருவா 3:20) என்பதன் மூலம் "அமைத்தோன்" என்று அரும்பெரும் சோதியாகிய சிவனை குறிப்பிடுகிறார். "சோதியை யாம் பாட" என்ற பதத்தினைப் பார்த்தால், பாடுவதென்றால் உள்ளம் உவப்பாக அல்லது கவலையாக இருக்கவெண்டும். அது தான் இயற்கை. அவனருளால் அவன் தாள் வணங்குவது போல் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியின் அருள்கொண்டு அவன் புகழைச் சிந்திப்பதால் ஏற்படும் ஆனந்த உணர்வினால் இளமங்கையரின் வாய் முணுமுணுத்தல் பாட்டாக மலர்கிறது. அதேவேளை மணிவாசகர் திருவெம்பாவையைப் பாடும்போது, இறைவனாகிய காதலியை திருப்பெருந்துறையில் பிரிந்த பின்னர் எங்கும் காணமுடியாமல் ஏற்பட்ட கவலையின் வாட்டத்தால் பாடியருளினார். ஆறுமுக நாவலரின் குருபூசை ஐந்தாம் குரவர் எனப் போற்றப் படும் ஆறுமுக நாவ லரின் குருபூசை கார்த்திகைத் திங் கள் கொடுநுகம் (மகம்) விண்மீன் அன்று (டிசம்பர்7ம் திகதி) கொண்டா டப்பட்டது. அடுத்ததாக "கேட்டேயும்" என்பதனைப் பார்த்தால், ஒருவர் விரும்பினாலோ அல்லாமலோ இசை ஒலி காதினுள் சென்று செவிப்பறை மென்தகடுகளை அதிரவைக்கும். இது தூங்கும் போதும் நடக்கும். அதனாலே செவி மற்றைய பொறிகளிலிருந்தும் வேறுபட்டது. அப்படியிருக்கையில் எங்கள் பாட்டு உன்னை வந்து துயிலெழுப்பி இருக்கவேண்டும் ஆனால் நீ எழவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகும். மனிதப்பிறவியின் தன்மை அறிந்து, காலத்தினைப் போக்காமல் சிவனை நினைந்துருகிப் பாடி பேரின்பப் பெருவாழ்வினை அடைவோமாக. www அடியாருக்கு வாரி வழங்கும் சோழர்கால வாரிவனேசர் மீண்டும் சாவகச்சேரியின் மத்தியில் எழுந்தருளல் அதைக் கேட்ட சூதக முனிவர் அவர்களுக்கு வாரிவனப்பகுதியில் (சாவகச்சேரியில்) இருந்த வாரிவனேசர் சிவாலயத்தின் கதையைக் கூறத் தொடங்கினார். சூத முனிவர் கூறிய புராணமாகிய தக்ஷக்ஷிண (தென்) கைலாச புராணத்தில் பதின்னான்காவது படலத்தில் குறிப்பிட்டுள்ள புராணத்தில் வாரிவனம் பற்றிய வரலாற்றினை கீழே பார்ப்போம். சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில், இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன. முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும் ஆட்சியும் பெற்று வாழ்ந்தனர். அந்தவகையில் விருபாக்கன் என்ப வரினால் வாரிவனத்தில் (சாவகச்சேரி யில்) உருவாக்கப்பட்ட தான்தோன்றி இலிங்கக்கோயில், பின்னர் சோழர்களால் பெரிதாக்கப்பட்டு சிறப்பாக இருந்தது. பிற்பகுதியில் போத்துக்கேயர் மற்றும் குலத்தினைச் சேர்ந்த (வணிக குலம்: ஒல்லாந்தர்களால் கோயில் முற்றாக நாசமாக்கப்பட்டது. அதன்பின் சாவகச்சேரியில் மத்திய போக்குவரத்து நடுவத்திற்கு அண்மித்த இடத்தில் புதிய கோவிலமைத்து சோழர்கால வாரிவன் லிங்கத்தினை வைத்து மக்கள் வழிபட்டு குலவியல்புகள்-வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற் றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்) விருபாக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தன்னை நாடிவரும் முனிவர்கள், சிவனடியார்கள், வந்தனர். மீண்டும் இறைவன் திருவரு ளால் வாரிவனத்தின் நடுவிலே நீதிமன்ற வளாகத்தின் முன் புதுப்பொலிவுடன் கருங்கல் கருவூலமாகவும் புதிய இலிங்கமாக வாரியப்பர் எழுந்தருளி துறவிகள் மற்றும் அந்தணர்களுக்கு நெல், உணவு, பொன், பொருள், ஆடை போன்றவற்றை வாரி வழங்குவான். வெளிப்படுத்த விரும்பிய எங்கள் அடியார்தம் பெருமையை உலகிற்கு செந்தமிழில் வழிபடப்படுகிறார். இந்தியாவில் நைமிசாரண்யா வனத் தில் கூடி இருந்த ரிசிகள், முனிவர்கள் சூதக முனிவரிடம் "மாபெரும் முனிவரே! சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர்கள். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களைக் குறித்து விளக்கமான கதைகளை எடுத்துக் கூறியது போல் சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டு கிறோம்" என்று கேட்டார்கள். முற்காலத்தில் சோழவள நாட்டில் சிறப்பான இடமாகிய திருவாஞ்சியப் பகுதியில் சிவபத்தனாகிய வைசிய பெருமான், மறையவர் வேடம்தாங்கி விருபாக்கனிடம் வந்து தனக்கு வீடு வாசல் இல்லையென்றும் உண்ண உணவில்லையென்றும் கூறி இரந்து நிற்க, விருபாக்கன் தன் வீட்டையும் விளை நிலங்களையும் மறையவருக்கு எழுதிக்கொடுத்தார். பின்னர் இவற்றினை வாங்கிய மறையவர் மறைந்ததைக் கண்ட விருபாக்கன் இது ஆண்டவன் திரு விளையாடல் என்று உணர்ந்து மனைவி விசாலாட்சியுடன் திருமறைக்காட்டிற்கு வந்து மறைக்காட்டுநாதரை வணங்கிப் பின்னர் கப்பலேறி காங்கேசன்துறை வழியாக யாழ்ப்பாணம் வந்தார். சிவலிங்கம் தான்தோன்றியாக வாரிவனத்தில் வெளிப்படல் கொடிக்கமத்தில் (கொடிகாமம்) வசித்து வந்த விருபாக்கன் வணிக வழி வந்தவன். பொருள் இல்லாவிட்டாலும் அருள்பெற்ற விருபாக்கன் கொடிகாமம் பகுதியில் பசுக்கள் நிறைந்து இருந்ததால் தனது வாழ்வாதாரத்திற்கு பசுக்களை வளர்த்து பால் வணிகம் செய்தான். பாலினை குடத்தில் நிரப்பி தலையில் கொண்டு பல இடங்களுக்குச் சென்று வணிகம் செய்வான். (07ஆம் பக்கம் பார்க்க)
தென்னாடு www.thennadu.org வள்ளுவர் ஆண்டு 2051 வீறியெழல் ஆண்டு சிலை நல்லோரை மார்கழித் திங்கள் 14 ம் நாள் ( 29.12.2020 ) நிறைமதி வெளியீடு +94 21 221 2739 தென்னாட்டின் விதிமாற்றும் விரிசடையான் திருமுறைத் தொகுப்பு சிவவழி நின்று விதியை வெல்லலாம் என்று சத்தியம் செய்துள்ளார் திருஞானசம்பந்தர் சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே நீங்கள் விதியை வெல்ல முடியுமா ? நிச்சயமாக வெல்லலாம் . விரிசடையான் துணைகொண்டு விதியை வெல்லலாம் என்று ஆணையாகச் சொல்லுகிறார் திருஞானசம்பந்தர் சுவாமிகள் . உலகின் முதற்கடவுளும் சைவத்தினையும் தமிழினையும் உருவாக்கிய சிவபெருமானின் பாதங்களை அவனருளாலே வணங்கி திருவருட் துணையுடன் உண்மைகளை உங்களிடம் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன் . தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும் அதன் ஓசையும் ஒலியும் இறைவனால் உருவாக்கப்பட்டவை . அதனாலே தான்தமிழ் தெய்வத்தமிழாகப் போற்றப்படுகின்றது . கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் என்ற பரஞ்சோதி முனிவரின் வரிகளும் நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண் தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் என்ற கம்பரின் வரிகளும் தெய்வத் தமிழின் தோற்றத்தினை தெளிவாக்கியுள்ளன . தமிழ் மொழியை முத்தமிழ் என்பதற்கு இயல் இசை நாடகம் என்பதை விடவும் இன்னும் ஒரு கருத்தியலும் இருந்து வருகிறது . தமிழ் மொழியானது மந்திரம் ( மனதைத் திரமடையச் செய்யும் தன்மை ) மந்தரம் ( மனதைத் தரமடையச் செய்யும் தன்மை ) மற்றும் மந்திறம் ( மனதைத் திறமையடையச் செய்யும் தன்மை ) என்ற மூன்று வகை ஆற்றலை உடையது . இது தெய்வத்தமிழாகிய எங்கள் பைந்தமிழுக்கே உரிய சிறப்பம்சமாகும் . வினையும் விதியும் - வினையின் விளைவே விதியாகும் தமிழ் இலக்கணமாயினும் சரி சைவக் கோட்பாடாயினும் சரி வினை என்றால் ஒரு செயலையே குறிக்கும் . நாங்கள் வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ நினைத்தோ நினைக்காமலோ பலவிதமான செய்கைகளை அதாவது வினைகளைச் செய்கிறோம் . அவை நல்லதாக இருந்தால் நல்வினை என்றும் தீயவையாயின் தீவினை என்றும் இரண்டு பிரிவுகளாகின்றன . சுதந்திரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவதற்காக கடவுளின் படைப்பில் மனிதரை சுயாதீனமாகப் படைத்தது ஆறாம் அறிவு எனும் பிரித்தறியும் திறனையும் சேர்த்து பூவுலகுக்கு அனுப்புகிறார் . அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி எது சரி எது பிழையென்று பிரித்தறிய முடியாமல் எமக்காக எம்மைச் சார்ந்தவர்களுக்காக மனம் வாக்கு காயம் இவை மூன்றினாலும் ஐம்பொறிகளா லும் நாங்கள் பலவகையான தீய வினைகளைச் செய்து இறுதியில் தீவினைத் தொகுப்பையே மேலோங்கச் செய்கிறோம் . வினையும் விதியும் என்ற விடயத்தில் இன்னுமொரு கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும் . இந்த நூற்றாண்டில் விதியெனப் படும் சட்டவிதிகளால் வினையாகிய குற்றங்களை கட்டுபடுத்தியும் தண்டித்தும் வருகிறது நீதிமன்றம் . இதையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வினையின் விளைவே விதியாகும் என்றும் வினைகளைக் கட்டுப் படுத்த இறைவழியினை முதன்மை வழியாகவும் கொண்டும் வாழ்ந்தனர் சைவத்தமிழர்கள் . அத்துடன் ஊழ்வினையாகிய முற்பிறப்பு வினைகளையும் அழிக்கும் உபாயத்தினையும் கையாண்டு விதியை வென்று வாழ்ந்தனர் பண்டைத் தமிழர்கள் . மனிதர்களின் விதிகளில் இயங்கும் நீதிமன்றத்தால் தண்டனைக் காலத்தினைக் குறைத்து மன்னிப்புக் கொடுக் கும் பொழுது உயிர்களிடத்தில் எல்லையற்ற அன்பைக் கொண்ட எம்பெருமான் விதியினை நிச்சயம் மாற்றி உங்களுக்கு அருள்பாலிப்பார் என்பதில் ஐயமேது . நாம் செய்யும் சகல வினைகளுக்கு மூலகார ணம் எங்களின் மனம்.ஆறாம் அறிவினைப் பயன்படுத்தி மனதை நெறிப்படுத்தி நல்லதை செய்தால் விதி நல்லாயிருக்கும் பிரித்தறியாமல் தீயவற்றினை செய்தால் விதி மாறிப்போகிறது . அந்தவகையில் விதியை வெல்லும் போரில் வெல்லவேண்டியது மனமே என்ற உண்மை வெளிப்படுகிறது.இனி மனதை வெல்வது எப்படி என்று பார்த்தால் முத்தமிழின் திறனாகிய மந்திரம் மந்தரம் மற்றும் மந்திறம் ஆகிய மூன்றாலும் என்ற தெளிவு பிறக்கிறது . அந்தவகையில் தமிழ் வேதங்களாகிய திருமுறைகளை விரிசடையானை நினைந்து ஒலியெழுப்பி பாடுவதன் மூலம் மனம் திரம் தரம் மற்றும் திறம் அடைகின்றது . இந்நிலையில் உள்ள மனம் நல்லதையே செய்யும் . அதனால் நல்வினைப் பயனையே அனுபவிக்கும் . அத்துடன் திருமுறைகள் ஊழ் வினையையும் அறுத்து பேரின்பப் பெருவாழ் வினை தரவல்ல மருந்தாகவே இருக்கின்றன . ஆமை தன் கால்கள் தலை முதலாய ஐந்து உறுப்புக்களையும் ஓட்டுக்குள் ஒடுக்கி ( 02 ஆம் பக்கம் பார்க்க ) திருவாசகத்தில் ஒரு வாசகம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் - திருவெம்பாவை ( 1-2 ) வேத காலத்தில் சூரியனே ஒளியின் மூலமாய் கடவுளென வணங்கினர்.அனைத்திற்கும் காரணமானவன் கதிரவனே என்ற விஞ்ஞானக் கருதும் இருந்தது . அவனே சோதி . ஐதரசனை எரித்தே சூரியன் ஒளியைத் தருகிறான் . இது ஒரு நாளைக்கு முடிவடைந்து அவன் ஒளியிழந்து உலகம் இருளும் காலமும் உண்டு . எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளே இந்தச் சோதியையும் தோற்றுவித்தவர் அதனாலே அவர் அரும்பெரும் சோதி எனப்படுகிறார்.இதனையே மணிவாசகர் திருவண்டப் பகுதியில் அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு ( திருவா 3:20 ) என்பதன் மூலம் அமைத்தோன் என்று அரும்பெரும் சோதியாகிய சிவனை குறிப்பிடுகிறார் . சோதியை யாம் பாட என்ற பதத்தினைப் பார்த்தால் பாடுவதென்றால் உள்ளம் உவப்பாக அல்லது கவலையாக இருக்கவெண்டும் . அது தான் இயற்கை . அவனருளால் அவன் தாள் வணங்குவது போல் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியின் அருள்கொண்டு அவன் புகழைச் சிந்திப்பதால் ஏற்படும் ஆனந்த உணர்வினால் இளமங்கையரின் வாய் முணுமுணுத்தல் பாட்டாக மலர்கிறது . அதேவேளை மணிவாசகர் திருவெம்பாவையைப் பாடும்போது இறைவனாகிய காதலியை திருப்பெருந்துறையில் பிரிந்த பின்னர் எங்கும் காணமுடியாமல் ஏற்பட்ட கவலையின் வாட்டத்தால் பாடியருளினார் . ஆறுமுக நாவலரின் குருபூசை ஐந்தாம் குரவர் எனப் போற்றப் படும் ஆறுமுக நாவ லரின் குருபூசை கார்த்திகைத் திங் கள் கொடுநுகம் ( மகம் ) விண்மீன் அன்று ( டிசம்பர் 7 ம் திகதி ) கொண்டா டப்பட்டது . அடுத்ததாக கேட்டேயும் என்பதனைப் பார்த்தால் ஒருவர் விரும்பினாலோ அல்லாமலோ இசை ஒலி காதினுள் சென்று செவிப்பறை மென்தகடுகளை அதிரவைக்கும் . இது தூங்கும் போதும் நடக்கும் . அதனாலே செவி மற்றைய பொறிகளிலிருந்தும் வேறுபட்டது . அப்படியிருக்கையில் எங்கள் பாட்டு உன்னை வந்து துயிலெழுப்பி இருக்கவேண்டும் ஆனால் நீ எழவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகும் . மனிதப்பிறவியின் தன்மை அறிந்து காலத்தினைப் போக்காமல் சிவனை நினைந்துருகிப் பாடி பேரின்பப் பெருவாழ்வினை அடைவோமாக . www அடியாருக்கு வாரி வழங்கும் சோழர்கால வாரிவனேசர் மீண்டும் சாவகச்சேரியின் மத்தியில் எழுந்தருளல் அதைக் கேட்ட சூதக முனிவர் அவர்களுக்கு வாரிவனப்பகுதியில் ( சாவகச்சேரியில் ) இருந்த வாரிவனேசர் சிவாலயத்தின் கதையைக் கூறத் தொடங்கினார் . சூத முனிவர் கூறிய புராணமாகிய தக்ஷக்ஷிண ( தென் ) கைலாச புராணத்தில் பதின்னான்காவது படலத்தில் குறிப்பிட்டுள்ள புராணத்தில் வாரிவனம் பற்றிய வரலாற்றினை கீழே பார்ப்போம் . சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில் இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன . முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும் ஆட்சியும் பெற்று வாழ்ந்தனர் . அந்தவகையில் விருபாக்கன் என்ப வரினால் வாரிவனத்தில் ( சாவகச்சேரி யில் ) உருவாக்கப்பட்ட தான்தோன்றி இலிங்கக்கோயில் பின்னர் சோழர்களால் பெரிதாக்கப்பட்டு சிறப்பாக இருந்தது . பிற்பகுதியில் போத்துக்கேயர் மற்றும் குலத்தினைச் சேர்ந்த ( வணிக குலம் : ஒல்லாந்தர்களால் கோயில் முற்றாக நாசமாக்கப்பட்டது . அதன்பின் சாவகச்சேரியில் மத்திய போக்குவரத்து நடுவத்திற்கு அண்மித்த இடத்தில் புதிய கோவிலமைத்து சோழர்கால வாரிவன் லிங்கத்தினை வைத்து மக்கள் வழிபட்டு குலவியல்புகள் - வாணிபம் செய்தல் பயிரிடுதல் வள்ளல் தன்மை ஏமாற் றாமை கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல் ) விருபாக்கன் வாழ்ந்து வந்தான் . அவன் தன்னை நாடிவரும் முனிவர்கள் சிவனடியார்கள் வந்தனர் . மீண்டும் இறைவன் திருவரு ளால் வாரிவனத்தின் நடுவிலே நீதிமன்ற வளாகத்தின் முன் புதுப்பொலிவுடன் கருங்கல் கருவூலமாகவும் புதிய இலிங்கமாக வாரியப்பர் எழுந்தருளி துறவிகள் மற்றும் அந்தணர்களுக்கு நெல் உணவு பொன் பொருள் ஆடை போன்றவற்றை வாரி வழங்குவான் . வெளிப்படுத்த விரும்பிய எங்கள் அடியார்தம் பெருமையை உலகிற்கு செந்தமிழில் வழிபடப்படுகிறார் . இந்தியாவில் நைமிசாரண்யா வனத் தில் கூடி இருந்த ரிசிகள் முனிவர்கள் சூதக முனிவரிடம் மாபெரும் முனிவரே ! சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர்கள் . கயிலை காசி காஞ்சி சிதம்பரம் திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களைக் குறித்து விளக்கமான கதைகளை எடுத்துக் கூறியது போல் சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டு கிறோம் என்று கேட்டார்கள் . முற்காலத்தில் சோழவள நாட்டில் சிறப்பான இடமாகிய திருவாஞ்சியப் பகுதியில் சிவபத்தனாகிய வைசிய பெருமான் மறையவர் வேடம்தாங்கி விருபாக்கனிடம் வந்து தனக்கு வீடு வாசல் இல்லையென்றும் உண்ண உணவில்லையென்றும் கூறி இரந்து நிற்க விருபாக்கன் தன் வீட்டையும் விளை நிலங்களையும் மறையவருக்கு எழுதிக்கொடுத்தார் . பின்னர் இவற்றினை வாங்கிய மறையவர் மறைந்ததைக் கண்ட விருபாக்கன் இது ஆண்டவன் திரு விளையாடல் என்று உணர்ந்து மனைவி விசாலாட்சியுடன் திருமறைக்காட்டிற்கு வந்து மறைக்காட்டுநாதரை வணங்கிப் பின்னர் கப்பலேறி காங்கேசன்துறை வழியாக யாழ்ப்பாணம் வந்தார் . சிவலிங்கம் தான்தோன்றியாக வாரிவனத்தில் வெளிப்படல் கொடிக்கமத்தில் ( கொடிகாமம் ) வசித்து வந்த விருபாக்கன் வணிக வழி வந்தவன் . பொருள் இல்லாவிட்டாலும் அருள்பெற்ற விருபாக்கன் கொடிகாமம் பகுதியில் பசுக்கள் நிறைந்து இருந்ததால் தனது வாழ்வாதாரத்திற்கு பசுக்களை வளர்த்து பால் வணிகம் செய்தான் . பாலினை குடத்தில் நிரப்பி தலையில் கொண்டு பல இடங்களுக்குச் சென்று வணிகம் செய்வான் . ( 07 ஆம் பக்கம் பார்க்க )