தென்னாடு தைத் திங்கள் இதழ் - 04

சுறவம் நல்லோரை தைத் திங்கள், 2021 வரி தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன், ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை, சைவ மாணவர் சபை (பதிவு-HA/4/JA/343) 0715588737, aathan@thennadu.org தை பிறந்தது! வழி பிறக்குமா? சூரியனின் தென்முக நகர்வு நிறைவடைந்து வடமுக நகர்வு ஆரம்பிக்கின்ற தனுராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் புகுகின்ற தைமாதப் பிறப்பு நிகழ்ந்துள்ளது வயல் விளைந்து செழித்து அதில் புதிரெடுத்துச் சூரியனுக்கு பொங்கலிட்டு மகிழ்ந்தோம்! உலகின் தனிப்பெரும் பண்பாட்டுக் கோலங்களைத் தன்னகத்தே கொண்ட தழிழன், உழவுக்கு துணை செய்த ஆவினங்களுக்கும் நன்றி சொல்லிப் பொங்கலிட ஒருநாளையும், ஊர்கூடிப் பொங்கலிட “காணும் பொங்கல்" என்ற நாளையும் தன்னோடு இணைத்துக் கொண்டான். தை பிறந்து விட்டாலே, புதுவழி பிறக்கும் என்ற நம்பிக்கை, ஆண்டாண்டு காலமாய் தழிழர்களோடு ஒன்றித்துப் போனதொன்று! ஆடியில் நிலத்தை உழுது பண்படுத்தி, விதையிட்டு, சேமிப்பில் இருந்தவற்றை எல்லாம் செலவு செய்து, அதனை பாதுகாத்ததால், தற்காலிகமாக ஏற்பட்ட வறுமை, அறுவடையால் அகன்று விடும் என்ற நம்பிக்கையே, “தை பிறந்தால் வழி பிறந்து விடும்” என்ற, விவசாயத் தொல்குடிச் சமுதாயமாக இருக்கின்ற தமிழர்களின் எண்ணப்பாட்டிற்கு காரணமானது எனலாம். இன்று, எம்மை சூழவும், சர்வதேச ரீதியில் மக்கள் அனைவரும் அல்லலுறும், பெரு நோய்த் தொற்றும், பணமுதலைகளின் சதியும் பரவியிருப்பதனை காண்கின்றோம். எல்லா சமயத்தவரும் தம்மைத் துன்பம் அண்டக்கூடாது என தத்தம் கடவுளை வேண்டி அழுது தொழுகின்றனர். "நோயுளார் வாயுளான்” என்று ஞான சம்பந்தர் பாடியது இன்று எம்முன்னே தெரிகின்றது. வெறுமனே தை பிறந்து விட்டால் மட்டும் இந்தக் கொடுந் துயரங்கள் நீங்கிப் புதுவழி பிறந்து விடுமா? என்ற கோள்வியை நாம் எமக்குள்ளே கேட்க வேண்டும்! நமது நாட்டில் காலம் தவறிப் பெய்த பெருமழையால் வயல்களெல்லாம் முற்றி அறுவடைப் பருவத்தில். வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றது. வன்னிப் பெருநிலப் பரப்பிலும் குறிப்பிடத் தக்க நெல் அழிவு இடம்பெற்றிருக்கின்றது! எனவே விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வும் சிறக்குமா? என்பது கோள்விக் குறியே! இந்த இடத்தில் தான் எம்மை எல்லாம் மீறிய இயற்கை சக்தியை இறைசக்தியாக, இந்த உலகைச் சூழ்ந்திருப்பதை உணர்கின்றோம். இந்த உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், வேள்விகளையும் பூசை வழிபாடுகளையும் பல்லாண்டுகளாக செய்தும் பலனின்றியே தவிர்க்கின்றோம்! நிற்க. எமது வழிபாட்டுக்கு இடையிலே திணிக்கப்பட்ட வடமொழியைத் தக்கவைக்க, அதனை திணித்த சிலர், நாம் வீற்றிருக்கின்ற “அதிகார ஆசனங்கள்” கொடுத்த ஆற்றலால், இறைமொழியாகிய தமிழில் வழிபாடு செய்வது, உலக அழிவை ஏற்படுத்தும் என்றும், அப்படி வழிபாடு செய்பவரின் குலம் அழிந்து விடும் என்றும் கதைகட்டி வைத்தனர்! ஆனால் நடந்தது என்ன? இயற்கையின் சமநிலையோடு இனிதாக அமைந்த உலக வாழ்வு உருக்குலைந்து போனது! கோடிய யுத்தங்களும் உயிர் அழிவுகளும், இயற்கைச் சீற்றங்களும் தான் மாறி மாறி இத்தனை ஆண்டுகளாக எம்மை காவுகொண்டது! வழிபாட்டுக்கானதாக மட்டுமன்றி வாழ்வியலுக்காகவும் எம்முன்னவர்கள் திடமான அத்திபாரங்களின் மீது கட்டியெழுப்பிய “தழிழ்” இறைவனை வழிபட ஏற்றதல்ல என்று ஒதுக்கியதன் விளைவே இவை எல்லாம் என்பதை நாம் உணரவேண்டும்! இந்த மொழி சொன்ன விழுமியங்களும், கொள்கைகளும், உலக நீதியும், இயற்கையின் சமத்துவத்தைக் கட்டிக்காக்கும் அருமருந்துகள் என்பதை அடுத்த தலைமுறைக்கேனும் சொல்வோம்! வரலாற்றின் வழி வெல்வோம்! "தை பிறந்தது! வழி பிறக்கவேண்டுமாயின் எம்மொழி சிறக்க வேண்டும்!” தென்னாடு அம்பலவாண நாவலரின் சிந்தனையில் மதமாற்றத்தினை தடுக்க உருவாக்கப்பட்ட கலைக்கோயில் வட்டு இந்துக் கல்லூரி JIVADDU HINDU COLLEGE திங்கள் ஒரு பள்ளி DEA Sா எமது நாடு அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் அடி பணிந்திருந்த வேளை, சைவமும் தழிழும் திட்டமிட்டு நசுக்கப்பட்டு கிறிஸ்தவமும் ஆங்கிலமும் பரப்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி சைவத்தையும், தழிழையும் காத்தற் பொருட்டு கிறிஸ்தவத்திற்கு போட்டியாகச் செயற்பட தொடங்கினார். இந்தச் சூழ்நிலையிலே தான் சித்தன்கோணியைச் சேர்ந்த அம்பலவாண நாவலர் அவர்கள் ஆறுமுகநாவலரோடு இணைந்து அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று ஆறுமுகநாவலரின் சீடனாக அவரின் பணியை ஆற்றத் தொடங்கினார். -Y நாவலர்-நிறுவுனர் இக்கால சூழ்நிலையில் தென்னாசியா விலேயே சகல வசதிகளும் கொண்ட பல் கலைக்கழகத்திற்கு நிகரான உயர்கலாபீடமாக 'வட்டுக்கோட்டை செமினறி' என்ற பெய ரோடு இன்றைய யாழ்ப்பாணக் கல்லூரியை சிவத்திரு அம்பலவாண தந்திருந்தனர். மிசனறியினர் எனப்படும் கிறிஸ்தவர்கள் உருவாக்கியிருந்தனர். கல்லூரி ஆங்கில மொழி மூலமான கல்வியைப் போதித்தது. இங்கு கற்று வெளியேறியவர்கள் செமினறிப் பட்டதாரிகள் என அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் அரச தொழில் வாய்ப்பை பெறுவது என்றால் ஆங்கில மொழி அறிவு படைத்தவர்களுக்கே அது வழங்கப்பட்டது. ஆங்கில மொழியறிவை பெறவேண்டுமாயின் வட்டுக்கோட்டை செமனறியிலே இணைந்து கற்கவேண்டியிருந்தது. இங்கு இணைந்து கல்வி கற்க வேண்டுமானால் கிறிஸ்த வராக மதமாற வேண்டிய நிலை அன்று இருந்தது. அரச தொழில் தேவையெனில் கிறிஸ்தவராக மதம் மாறி வட்டுக்கோட்டை செமினறியில் இணைந்து ஆங்கில மொழியறிவை பெறவேண்டிய தேவை சைவப் பிள்ளைகளுக்கு இருந்தது. இதனால் பலர் கிறிஸ்த வர்களாக மாறினர். 03 அம்பலவாண நாவலரைத் தொடர்ந்து 1906இல் திருவாளர் சின்னத்துரை அவர்கள் அதிபர் ஆனார். இவ்வாறு காலங்கள் நகர அதிபர்களும் மாறக் கல்லூ ரியும் படிமுறை வளர்ச்சிகள் கண்டு தரமுயர்ந்து வளரத் தொடங்கியது. இத்தகைய வளர்ச்சிப் போக்கிலே கல்லூரி செல்கையிலே அர்ப்பணிப்புள்ள அதிபர்கள் கல்லூரி அன்னையை அலங்கரித்தனர். இத்தகைய அலங்கிப்பிலே கல்லூரி மாணவர்கள் பல சாதனைகளைச் செய்து கல்லூரியை பெருமைப் படுத்தினர். அந்த வகையிலே கல்லூரி மாணவன் திரு. கெ. கனகரத்தினம் கணக்காளர் நாயமாகவும், கல்வி மந்திரியின் பாராளு மன்றத் காரியதரிசியுமாக விளங்கினார். சேர் வேலுப்பிள்ளை, குமாரசுவாமி அவர்கள் வெளிநாட்டமைச்சில் நிரந்தரப் காரியதரிசி யாகவும் கனடா நாட்டிற்கு தூதுவராகவும் விளங்கினார். இவ்வாறு படிமுறை வளர்ச்சி கண்ட எம் கல்லூரிக்கு 1917ம் ஆண்டு கல்வியின் தலைவராக இருந்த திரு 'டென் காம்’ அவர்கள் வருகை தந்திருந்தார். இத னைத் தொடர்ந்து 1927ம் ஆண்டு அகிம்சை நாயகன் 'மகாத்மா காந்தி' அவர்கள் வருகை தந்திருந்தார். இவ்வாறாகக் கல்லூரிக்கு உயர் பதவி நிலைகளில் உள்ளவர்கள் வருகை தெ இவ்வாறு கல்லூரி வளர்ந்து வருகையில் 1948இல் திரு. எஸ்.சிவகுருநாதப்பிள்ளை அதிபராக கல்லூரிக்கு நியமிக்கப்பட்டார். இவர் கல்லூரியின் வளர்சிக்கு அரும்பணி ஆற்றினார். இவரது முயற்சியால் உருவானதே கல்லூரியின் வள்ளியம்மை மண்டபமாகும். அத்தோடு செல்வலட்சுமி விஞ்ஞான ஆய்வுகூடம் என்னும் ஆய்வு கூடத்தையும் நிறுவினார். இவ்வாறு கல்லூரிக்கு அரும்பணியாற்றிய அதிபர் சிவகுருநாதப்பிள்ளை அவர்களது காலத்தை கல்லூ ரிக்கு ஓர் பொற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது. சிவகுருநாதபிள்ளைக்குப் பின்னர் ஒரு சில அதிபர்கள் பதவிக்கு வந்தனர் அவர்களுள் 1927ம் ஆண்டு திரு.க.அருணாசலம் அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்திலே தான் வட்டு இந்துக் கல்லூரி 1AB தர பாடசாலையாகத் தரமுயர்ந்து உயர்தர வகுப்பில் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அக்காலத்தின் கல்வி மந்திரியாக இருந்த 'பதியுதீன் முகமது' அவர்களால் கல்லூரிக்கு தண்ணீர்த் தாங்கி நிர்மாணிக்கப்பட்டு மின்னிணைப்பும் பெறப்பட்டது. இதனால் கல்லூரி புதுப்பொலிவு பெற்றது. அத்தோடு கல்லூரிக்கு காணி நிலமும் கொள்வ னவு செய்யப்பட்டது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ். சுமதிபாலா மற்றும் அப்போதைய இவ்வாறு சைவத் தமிழ்ப் பிள்ளைகள் கிறிஸ்தவர் களாக மதம்மாறி ஆங்கில அறிவைப் பெறும் இச்செயற் பாட்டைத் தடுத்து நிறுத்தி ஏழைச் சைவத்தமிழ்ப் பிள்ளைகள் மதம் மாறாமலே ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்று அரச தொழிலை பெறும் நோக்கில் வட்டுக் கோட்டை செமினறிக்கு இணையாக சித்தன் கோணியிலே 1894ம் ஆண்டு புரட்டாதி மாதம் விஜயதசமி தினத்தன்று,(09.10.1894) அம்பலவாண நாவலர் அவர் களால் ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே வட்டு இந்துக் கல்லூரி ஆகும். இக் எதிர்க்கட்சித் தலைவர் திரு.அ.அமிர்தலிங்கம் ஆகியோரைப் பாடசாலைக்கு வரவழைத்து கல்லூ ரியின் பௌதீக வளங்களை அதிகரிக்க அரும்பாடு காலத்திலே இப்படியான பாடசாலைகளை ஆரம்பிப் பதிலே பல சிரமங்கள் இருந்தன. இருந்தாலும் அம்பல வாண நாவலர் அவர்கள் இச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாது தனது உறவினர் நொத்தரிசு சிதம்பரப் பிள்ளையின் உதவியைப் பெற்று துணிவுடன் பாட சாலையை நடாத்தி வந்தார். முதற் சில வருடங்கள் அம்பலவான நாவலர் அவர்களே இப்பாடசாலையில் தலைமை ஆசிரியராக செயற்பட்டார். இவரோடு இணைந்து இலக்கிய உலகில் 'தங்கத்தாத்தா' எனச் செல்லமாக அழைக்கப்படும் நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களும் ஆசிரியராக இணைந்து செயற் பட்டார். அம்பலவாண நாவலர் சோமசுந்தரப் புலவர் போன்ற சிறந்த ஆசிரியர்களின் வழிப்படுத்தல் வழி காட்டலில் ஆரம்பமாகிய கல்லூரியே இன்று புகழ்ந்து பூத்து நிற்கும் வட்டு இந்துக் கல்லூரியாகும். 'தங்கத் தாத்தா' என்று அழைக்கப்படுகின்ற நாவாலியூர் சோம சுந்தரப் புலவர் இக்கல்லூரியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக (1898 -1938 வரை) தமிழ் ஆசிரியராகச் சிறந்த சேவையை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ட அதிபர் திரு.க. அருணாசலத்தின் காலமும் கல்லூரி வரலாற்றிலே சிறப்பான காலமாகும். இவரைத் தொடர்ந்து 1978இல் கல்லூரியின் அதிபராக திரு.க.நடராசா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து திரு.எஸ். வேலுப்பிள்ளை, திரு. எஸ். தாஸ் என அடுத்தடுத்து அதிபர்களாக கல்லூ ரிக்கு நியமிக்கப்பட்டனர். திரு. எஸ்.தாஸ் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் தான் அருளம் பலம் என்னும் மாணவன் தனது பாடத்தொகுதியிலே அகில இலங்கையில் நான்காவதாக வந்து பரிசுத் தொகையை வென்று நேரடியாக ஐனாதிபதியிடம் அதனைப் பெற்று தனக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்தார். இவரைத் தொடர்ந்து திரு. என். ஜெயநாயகம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்திலே தான் கல்லூரி நூற்றாண்டு நிறைவை அடைந்து விழாவெடுத்து அகம் மகிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து 1995 இல் யாழ்ப்பாண இடப்பெயர்வு ஏற்பட்டு 1996இல் கல்லூரி மீண்டும் தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்தது. அதிபர் பொறுப்பை 1996இல் திரு. ச. இராமலிங்கம் நூற்றாண்டு விழாவின் பின்னர் இக்கல்லூரியின் அவர்கள் ஏற்றுக்கொண்டார். (04ஆம் பக்கம் பார்க்க) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். LÔ160160T65=63 : thennavan@thennadu.org
சுறவம் நல்லோரை தைத் திங்கள் 2021 வரி தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன் ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை சைவ மாணவர் சபை ( பதிவு- HA / 4 / JA / 343 ) 0715588737 aathan@thennadu.org தை பிறந்தது ! வழி பிறக்குமா ? சூரியனின் தென்முக நகர்வு நிறைவடைந்து வடமுக நகர்வு ஆரம்பிக்கின்ற தனுராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் புகுகின்ற தைமாதப் பிறப்பு நிகழ்ந்துள்ளது வயல் விளைந்து செழித்து அதில் புதிரெடுத்துச் சூரியனுக்கு பொங்கலிட்டு மகிழ்ந்தோம் ! உலகின் தனிப்பெரும் பண்பாட்டுக் கோலங்களைத் தன்னகத்தே கொண்ட தழிழன் உழவுக்கு துணை செய்த ஆவினங்களுக்கும் நன்றி சொல்லிப் பொங்கலிட ஒருநாளையும் ஊர்கூடிப் பொங்கலிட காணும் பொங்கல் என்ற நாளையும் தன்னோடு இணைத்துக் கொண்டான் . தை பிறந்து விட்டாலே புதுவழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஆண்டாண்டு காலமாய் தழிழர்களோடு ஒன்றித்துப் போனதொன்று ! ஆடியில் நிலத்தை உழுது பண்படுத்தி விதையிட்டு சேமிப்பில் இருந்தவற்றை எல்லாம் செலவு செய்து அதனை பாதுகாத்ததால் தற்காலிகமாக ஏற்பட்ட வறுமை அறுவடையால் அகன்று விடும் என்ற நம்பிக்கையே தை பிறந்தால் வழி பிறந்து விடும் என்ற விவசாயத் தொல்குடிச் சமுதாயமாக இருக்கின்ற தமிழர்களின் எண்ணப்பாட்டிற்கு காரணமானது எனலாம் . இன்று எம்மை சூழவும் சர்வதேச ரீதியில் மக்கள் அனைவரும் அல்லலுறும் பெரு நோய்த் தொற்றும் பணமுதலைகளின் சதியும் பரவியிருப்பதனை காண்கின்றோம் . எல்லா சமயத்தவரும் தம்மைத் துன்பம் அண்டக்கூடாது என தத்தம் கடவுளை வேண்டி அழுது தொழுகின்றனர் . நோயுளார் வாயுளான் என்று ஞான சம்பந்தர் பாடியது இன்று எம்முன்னே தெரிகின்றது . வெறுமனே தை பிறந்து விட்டால் மட்டும் இந்தக் கொடுந் துயரங்கள் நீங்கிப் புதுவழி பிறந்து விடுமா ? என்ற கோள்வியை நாம் எமக்குள்ளே கேட்க வேண்டும் ! நமது நாட்டில் காலம் தவறிப் பெய்த பெருமழையால் வயல்களெல்லாம் முற்றி அறுவடைப் பருவத்தில் . வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றது . வன்னிப் பெருநிலப் பரப்பிலும் குறிப்பிடத் தக்க நெல் அழிவு இடம்பெற்றிருக்கின்றது ! எனவே விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வும் சிறக்குமா ? என்பது கோள்விக் குறியே ! இந்த இடத்தில் தான் எம்மை எல்லாம் மீறிய இயற்கை சக்தியை இறைசக்தியாக இந்த உலகைச் சூழ்ந்திருப்பதை உணர்கின்றோம் . இந்த உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் வேள்விகளையும் பூசை வழிபாடுகளையும் பல்லாண்டுகளாக செய்தும் பலனின்றியே தவிர்க்கின்றோம் ! நிற்க . எமது வழிபாட்டுக்கு இடையிலே திணிக்கப்பட்ட வடமொழியைத் தக்கவைக்க அதனை திணித்த சிலர் நாம் வீற்றிருக்கின்ற அதிகார ஆசனங்கள் கொடுத்த ஆற்றலால் இறைமொழியாகிய தமிழில் வழிபாடு செய்வது உலக அழிவை ஏற்படுத்தும் என்றும் அப்படி வழிபாடு செய்பவரின் குலம் அழிந்து விடும் என்றும் கதைகட்டி வைத்தனர் ! ஆனால் நடந்தது என்ன ? இயற்கையின் சமநிலையோடு இனிதாக அமைந்த உலக வாழ்வு உருக்குலைந்து போனது ! கோடிய யுத்தங்களும் உயிர் அழிவுகளும் இயற்கைச் சீற்றங்களும் தான் மாறி மாறி இத்தனை ஆண்டுகளாக எம்மை காவுகொண்டது ! வழிபாட்டுக்கானதாக மட்டுமன்றி வாழ்வியலுக்காகவும் எம்முன்னவர்கள் திடமான அத்திபாரங்களின் மீது கட்டியெழுப்பிய தழிழ் இறைவனை வழிபட ஏற்றதல்ல என்று ஒதுக்கியதன் விளைவே இவை எல்லாம் என்பதை நாம் உணரவேண்டும் ! இந்த மொழி சொன்ன விழுமியங்களும் கொள்கைகளும் உலக நீதியும் இயற்கையின் சமத்துவத்தைக் கட்டிக்காக்கும் அருமருந்துகள் என்பதை அடுத்த தலைமுறைக்கேனும் சொல்வோம் ! வரலாற்றின் வழி வெல்வோம் ! தை பிறந்தது ! வழி பிறக்கவேண்டுமாயின் எம்மொழி சிறக்க வேண்டும் ! தென்னாடு அம்பலவாண நாவலரின் சிந்தனையில் மதமாற்றத்தினை தடுக்க உருவாக்கப்பட்ட கலைக்கோயில் வட்டு இந்துக் கல்லூரி JIVADDU HINDU COLLEGE திங்கள் ஒரு பள்ளி DEA Sா எமது நாடு அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் அடி பணிந்திருந்த வேளை சைவமும் தழிழும் திட்டமிட்டு நசுக்கப்பட்டு கிறிஸ்தவமும் ஆங்கிலமும் பரப்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் தோன்றி சைவத்தையும் தழிழையும் காத்தற் பொருட்டு கிறிஸ்தவத்திற்கு போட்டியாகச் செயற்பட தொடங்கினார் . இந்தச் சூழ்நிலையிலே தான் சித்தன்கோணியைச் சேர்ந்த அம்பலவாண நாவலர் அவர்கள் ஆறுமுகநாவலரோடு இணைந்து அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று ஆறுமுகநாவலரின் சீடனாக அவரின் பணியை ஆற்றத் தொடங்கினார் . -Y நாவலர் - நிறுவுனர் இக்கால சூழ்நிலையில் தென்னாசியா விலேயே சகல வசதிகளும் கொண்ட பல் கலைக்கழகத்திற்கு நிகரான உயர்கலாபீடமாக ' வட்டுக்கோட்டை செமினறி ' என்ற பெய ரோடு இன்றைய யாழ்ப்பாணக் கல்லூரியை சிவத்திரு அம்பலவாண தந்திருந்தனர் . மிசனறியினர் எனப்படும் கிறிஸ்தவர்கள் உருவாக்கியிருந்தனர் . கல்லூரி ஆங்கில மொழி மூலமான கல்வியைப் போதித்தது . இங்கு கற்று வெளியேறியவர்கள் செமினறிப் பட்டதாரிகள் என அழைக்கப்பட்டனர் . அக்காலத்தில் அரச தொழில் வாய்ப்பை பெறுவது என்றால் ஆங்கில மொழி அறிவு படைத்தவர்களுக்கே அது வழங்கப்பட்டது . ஆங்கில மொழியறிவை பெறவேண்டுமாயின் வட்டுக்கோட்டை செமனறியிலே இணைந்து கற்கவேண்டியிருந்தது . இங்கு இணைந்து கல்வி கற்க வேண்டுமானால் கிறிஸ்த வராக மதமாற வேண்டிய நிலை அன்று இருந்தது . அரச தொழில் தேவையெனில் கிறிஸ்தவராக மதம் மாறி வட்டுக்கோட்டை செமினறியில் இணைந்து ஆங்கில மொழியறிவை பெறவேண்டிய தேவை சைவப் பிள்ளைகளுக்கு இருந்தது . இதனால் பலர் கிறிஸ்த வர்களாக மாறினர் . 03 அம்பலவாண நாவலரைத் தொடர்ந்து 1906 இல் திருவாளர் சின்னத்துரை அவர்கள் அதிபர் ஆனார் . இவ்வாறு காலங்கள் நகர அதிபர்களும் மாறக் கல்லூ ரியும் படிமுறை வளர்ச்சிகள் கண்டு தரமுயர்ந்து வளரத் தொடங்கியது . இத்தகைய வளர்ச்சிப் போக்கிலே கல்லூரி செல்கையிலே அர்ப்பணிப்புள்ள அதிபர்கள் கல்லூரி அன்னையை அலங்கரித்தனர் . இத்தகைய அலங்கிப்பிலே கல்லூரி மாணவர்கள் பல சாதனைகளைச் செய்து கல்லூரியை பெருமைப் படுத்தினர் . அந்த வகையிலே கல்லூரி மாணவன் திரு . கெ . கனகரத்தினம் கணக்காளர் நாயமாகவும் கல்வி மந்திரியின் பாராளு மன்றத் காரியதரிசியுமாக விளங்கினார் . சேர் வேலுப்பிள்ளை குமாரசுவாமி அவர்கள் வெளிநாட்டமைச்சில் நிரந்தரப் காரியதரிசி யாகவும் கனடா நாட்டிற்கு தூதுவராகவும் விளங்கினார் . இவ்வாறு படிமுறை வளர்ச்சி கண்ட எம் கல்லூரிக்கு 1917 ம் ஆண்டு கல்வியின் தலைவராக இருந்த திரு ' டென் காம் அவர்கள் வருகை தந்திருந்தார் . இத னைத் தொடர்ந்து 1927 ம் ஆண்டு அகிம்சை நாயகன் ' மகாத்மா காந்தி ' அவர்கள் வருகை தந்திருந்தார் . இவ்வாறாகக் கல்லூரிக்கு உயர் பதவி நிலைகளில் உள்ளவர்கள் வருகை தெ இவ்வாறு கல்லூரி வளர்ந்து வருகையில் 1948 இல் திரு . எஸ்.சிவகுருநாதப்பிள்ளை அதிபராக கல்லூரிக்கு நியமிக்கப்பட்டார் . இவர் கல்லூரியின் வளர்சிக்கு அரும்பணி ஆற்றினார் . இவரது முயற்சியால் உருவானதே கல்லூரியின் வள்ளியம்மை மண்டபமாகும் . அத்தோடு செல்வலட்சுமி விஞ்ஞான ஆய்வுகூடம் என்னும் ஆய்வு கூடத்தையும் நிறுவினார் . இவ்வாறு கல்லூரிக்கு அரும்பணியாற்றிய அதிபர் சிவகுருநாதப்பிள்ளை அவர்களது காலத்தை கல்லூ ரிக்கு ஓர் பொற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது . சிவகுருநாதபிள்ளைக்குப் பின்னர் ஒரு சில அதிபர்கள் பதவிக்கு வந்தனர் அவர்களுள் 1927 ம் ஆண்டு திரு.க.அருணாசலம் அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார் . இவரது காலத்திலே தான் வட்டு இந்துக் கல்லூரி 1AB தர பாடசாலையாகத் தரமுயர்ந்து உயர்தர வகுப்பில் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன . அக்காலத்தின் கல்வி மந்திரியாக இருந்த ' பதியுதீன் முகமது ' அவர்களால் கல்லூரிக்கு தண்ணீர்த் தாங்கி நிர்மாணிக்கப்பட்டு மின்னிணைப்பும் பெறப்பட்டது . இதனால் கல்லூரி புதுப்பொலிவு பெற்றது . அத்தோடு கல்லூரிக்கு காணி நிலமும் கொள்வ னவு செய்யப்பட்டது . கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு . எஸ் . சுமதிபாலா மற்றும் அப்போதைய இவ்வாறு சைவத் தமிழ்ப் பிள்ளைகள் கிறிஸ்தவர் களாக மதம்மாறி ஆங்கில அறிவைப் பெறும் இச்செயற் பாட்டைத் தடுத்து நிறுத்தி ஏழைச் சைவத்தமிழ்ப் பிள்ளைகள் மதம் மாறாமலே ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்று அரச தொழிலை பெறும் நோக்கில் வட்டுக் கோட்டை செமினறிக்கு இணையாக சித்தன் கோணியிலே 1894 ம் ஆண்டு புரட்டாதி மாதம் விஜயதசமி தினத்தன்று ( 09.10.1894 ) அம்பலவாண நாவலர் அவர் களால் ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே வட்டு இந்துக் கல்லூரி ஆகும் . இக் எதிர்க்கட்சித் தலைவர் திரு.அ.அமிர்தலிங்கம் ஆகியோரைப் பாடசாலைக்கு வரவழைத்து கல்லூ ரியின் பௌதீக வளங்களை அதிகரிக்க அரும்பாடு காலத்திலே இப்படியான பாடசாலைகளை ஆரம்பிப் பதிலே பல சிரமங்கள் இருந்தன . இருந்தாலும் அம்பல வாண நாவலர் அவர்கள் இச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாது தனது உறவினர் நொத்தரிசு சிதம்பரப் பிள்ளையின் உதவியைப் பெற்று துணிவுடன் பாட சாலையை நடாத்தி வந்தார் . முதற் சில வருடங்கள் அம்பலவான நாவலர் அவர்களே இப்பாடசாலையில் தலைமை ஆசிரியராக செயற்பட்டார் . இவரோடு இணைந்து இலக்கிய உலகில் ' தங்கத்தாத்தா ' எனச் செல்லமாக அழைக்கப்படும் நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களும் ஆசிரியராக இணைந்து செயற் பட்டார் . அம்பலவாண நாவலர் சோமசுந்தரப் புலவர் போன்ற சிறந்த ஆசிரியர்களின் வழிப்படுத்தல் வழி காட்டலில் ஆரம்பமாகிய கல்லூரியே இன்று புகழ்ந்து பூத்து நிற்கும் வட்டு இந்துக் கல்லூரியாகும் . ' தங்கத் தாத்தா ' என்று அழைக்கப்படுகின்ற நாவாலியூர் சோம சுந்தரப் புலவர் இக்கல்லூரியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ( 1898 -1938 வரை ) தமிழ் ஆசிரியராகச் சிறந்த சேவையை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது . ட்ட அதிபர் திரு.க. அருணாசலத்தின் காலமும் கல்லூரி வரலாற்றிலே சிறப்பான காலமாகும் . இவரைத் தொடர்ந்து 1978 இல் கல்லூரியின் அதிபராக திரு.க.நடராசா அவர்கள் நியமிக்கப்பட்டார் . இவரைத் தொடர்ந்து திரு.எஸ் . வேலுப்பிள்ளை திரு . எஸ் . தாஸ் என அடுத்தடுத்து அதிபர்களாக கல்லூ ரிக்கு நியமிக்கப்பட்டனர் . திரு . எஸ்.தாஸ் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் தான் அருளம் பலம் என்னும் மாணவன் தனது பாடத்தொகுதியிலே அகில இலங்கையில் நான்காவதாக வந்து பரிசுத் தொகையை வென்று நேரடியாக ஐனாதிபதியிடம் அதனைப் பெற்று தனக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்தார் . இவரைத் தொடர்ந்து திரு . என் . ஜெயநாயகம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார் . இவரது காலத்திலே தான் கல்லூரி நூற்றாண்டு நிறைவை அடைந்து விழாவெடுத்து அகம் மகிழ்ந்தது . இதனைத் தொடர்ந்து 1995 இல் யாழ்ப்பாண இடப்பெயர்வு ஏற்பட்டு 1996 இல் கல்லூரி மீண்டும் தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்தது . அதிபர் பொறுப்பை 1996 இல் திரு . . இராமலிங்கம் நூற்றாண்டு விழாவின் பின்னர் இக்கல்லூரியின் அவர்கள் ஏற்றுக்கொண்டார் . ( 04 ஆம் பக்கம் பார்க்க ) இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறவேண்டுமாயின் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . LÔ160160T65 = 63 : thennavan@thennadu.org