தென்னாடு மாசித் திங்கள் இதழ் - 05

தெ 02 கடந்த நூற்றாண்டில் தான் உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்க முடியும் என்ற விஞ்ஞான உண்மையை உலகம் அறிந்தது. ஆனால் விஞ்ஞானத்தையும் விஞ்சும் சக்தி மெஞ்ஞானத்துக்கு உண்டு என்பதை உணர்த்துவது கண்ணப்ப நாய னாரின் சரிதம். பொத்தப்பி எனும் மலைநாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேட்டுவ குலத்தில் அவதரித்த நாயகனே திண்ணனார். ஒரு நாள், தன் நண்பர்களான காடன், நாணனுடன் வேட்டைக்குச் சென்று பன்றி ஒன்றை வேட்டையாடினார். அவர்கள் நடந்து ARKIVE பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்ததும் பன்றியைத் தீயில் வாட்டும் படி காடனிடம் கூறினார். ஏறினார். அங்கே மரங்களின் நடுவே சிவ லிங்கம் ஒன்றைக் கண்டார். அச் சிவலிங்கத் தின் மீது சில பூக்களும் இலை தழைகளும் இருந்தன. காளத்தியப்பரின் மேல் பேரன்பு பெருகியது. "இந்தக் கொடிய காட்டில் யார் இந்தப் பணியைச் செய்கிறார்கள்?" என்று கேட்க, நாணனும், ஒரு வேதியர் தினமும் வந்து அன்னம் படைப்பதாகக் கூறினான். "இக்காட்டில் தனித்திருக்கும் இவருக்குப் பசிக்காதோ!? உணவு படைக்க வேணுமே!" என்று கூறி மலையை விட்டு குடு குடுவென இறங்கினார். காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்தார். அதில் நல்ல தசைகளை மட்டும் எடுத்து வைத்தார். பின் ஆற்றிற்குச் சென்று நீரை வாயில் அடக்கிக் கொண்டார். நேராக மலைக்கு ஓடினார். “ஊனுக்கு ஊன் ஊற்ற நோய் தீர்க்கும்” அப்போது அருகிலிருந்த மலை என்பதை அறிந்திருந்த திண்ணனார் அம்பால் திண்ணனாரைக் கவர்ந்தது. மலை மீது தமது வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். சிவலிங்கத்தின் மீது நீரை உமிழ்ந்தார். தான் கொண்டு வந்த பன்றிக் கறியைப் படைத்தார். நெடுநேரம் சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றார். திண்ணனாரின் வினோத செயல்களைப் பார்த்த நாணனும் காடனும் தங்கள் தலைவருக்கு ஏதோ தீவினை தொற்றிவிட்டது என்று நினைத்து அவரின் தந்தையிடம் கூற ஓடினார்கள். செயலைச் செய்பவர் யாரோ? இதை நீரே பார்த்துக் கொள்ளும்" என்று வேண்டினார். கண் சுமந்த கடவுளுக்கே கண் தந்த கண்ணப்ப நாயனார் திண்ணனாரோ அவ்விடத்தைவிட்டு அசையவில்லை. இரவில் தனித்திருக்கும் சிவலிங்கத்திற்கு கொடிய விலங்குகளால் தீங்கு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி இரவு முழுவதும் காவல் காத்தார். மறுநாள் காலையிலேயே மலையை விட்டு இறங்கினார். காலையில் வழக்கம் போல பூசை செய்ய வந்த வேதியர் சிவலிங்கத்தின் முன்னிருந்த மாமிசத்தைப் பார்த்துப் பதறினார். "ஐயகோ! யார் இந்தப் பாதகத்தைச் செய்தது!?” என்று துடித்தார். மாமிசத்தை அப்புறப்படுத்தி சிவலிங்கத்தை நீராட்டி, பூக்கள் சூடி, அன்னம் படைத்தார். எம்பெருமானை வணங்கி அவ்விடம் விட்டகன்றார். அன்றிரவு வந்த திண்ணனார் மறுபடியும் பன்றி இறைச்சியைப் படைத்தார், இரவில் காவல் காத்தார். இவ்வாறு பல நாட்கள் நடந்தது. இறைவன் முன் தினமும் மாமிசம் இருப்பதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத வேதியர் ஒரு நாள் “எம்பெருமானே! உனக்கு மாமிசம் படைக்கும் தூய்மையற்ற திண்ணனாரின் அகத்தூ ய்மையை அகிலத்திற்கு உணர்த்தும் திருவிளை யாடலை அரங்கேற்ற எம்பெருமான் திருவுளம் கொண்டார். சிவபெருமான் வேதியரின் கனவில் தோன்றி, "வேதியரே! எனக்குத் தினமும் ஒருவன் மாமிசம் படைப்பது என் மேல் உள்ள அன்பினாலேயே! அவனது அன்பை நீர் காண வேண்டும் என்றால் இன்றிரவு வந்து அவன் அறியாதபடி ஒளிந்திருந்து கவனிக்க வேண்டும்!" என்று அருளினார். வேதியரும் இரவில் மலைக்குச் சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருந்தார். வழக்கம் போல இரவில் மலையை நோக்கி வந்த திண்ணனாருக்கு வரும் வழியில் சில கெட்ட சகுனங்கள் தோன்றின. அவர் மனதில் பதட்டம் பற்றிக் கொண்டது. சிவலிங்கத்தை நோக்கி ஓடினார் அப்போது சிவலிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட திண்ணனார் பதறினார் மனம் பதைபதைத்தார். "ஐயனே! இந்த அடாத காரியத்தைச் செய்தவர் யார்?" என்று கூறிய படி அங்கும் இங்கும் ஓடினார். தனது கையை வைத்துக் கண்ணை அடைத்தார். பயனில்லை மலையில் இருந்த பச்சிலை மூலிகைகளைக் கண்ணில் ஒற்றினார். ஆனாலும் உதிரம் நிற்கவில்லை. தென்னாடு சிவபெருமானின் பழுது பட்ட கண்ணை அகற்றி, தனது கண்ணைப் பொருத்தினார். இரத்தம் வடிவது நின்றது. திண்ணனாரின் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைத்தது. கண்ணப்ப நாயனார் ஆனால் சிறிது நேரத்திலேயே சிவலிங் கத்தின் மறு கண்ணில் இருந்தும் இரத்தம் வழிந்தது. அதைக் கண்ட திண்ணனார் கணமும் யோசிக்காமல் தன் மறுகண்ணையும் தோண்டி எடுக்க முன்வந்தார். மறுகண்ணை யும் எடுத்துவிட்டால் பார்வை போய் விடும், கண்ணைச் சரியாக ஒற்ற முடியாது என்ப தால், தமது வலது காலை எடுத்து இறைவ னின் இடது கண்ணில் அடையாளத்திற்காகப் பதித்தார். conte சிவத்திரு. ச.நித்தன் emle D80 Asthm www அம்பை எடுத்துக் கண்ணைத் தோண்ட முயல்கையில், "நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!" என்று அசரீரி கேட்டது. திண்ணனார் திகைத்து நின்றார். இறைவன் திண்ணனாருக்கு அருகாட்சியளித்தார். அத்திருக்காட்சியை மரத்தின் பின்னால் மறைந்திருந்த வேதியர் கண்டு, திண்ணனார் எம்பெருமான் மீது கொண்டிருந்த பேரன்பை உணர்ந்தார் பெருமகிழ்ச்சி கொண்டார். சிவபெருமான் திண்ணனாரிடம், "என் மீது பேரன்பு கொண்ட நீ எப்போதும் என் நிழலில் வீற்றிருப்பாயாக!" என்று பேரருள் புரிந்தார். இறைவனுக்குக் கண் தந்த திண்ணனார் இறைவனாலேயே "கண்ணப்பர்" என்று அழைக்கப்பட்டு அழியாப் பேறு பெற்றார். தை மாதத்தில் மான்றலை நாண்மீன் (மிருகசீரிட நட்சத்திர) தினத்தன்று கண்ணப்பருக்கு குருபூசை நடக்கிறது. காவியக் கண்ணப்பர்- உலகத்தின் முதல் கண்தானம்!!! கும்பம் நல்லோரை மாசித் திங்கள், 2021 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பது முதுவாக்கு. இதனை தாய்க்கு பின் தந்தை, தந்தைக்கு பின் குரு, குருவிற்கு பின் தெய்வம் என்று விளக்குகின்றார்கள் தமிழ் மூத்தோர்கள். ஒரு குழந்தை பிறக்கின்றது. அந்தக் குழந்தை தாயை முதலில் அடையாளம் கண்டு கொள்கின்றது. ஆகவே அந்தக் குழந்தையின் வாழ்வில் தாய் முதலாம் படியை பிடித்துக் கொள்கின்றாள். அந்தத் தாய் தன் குழந்தைக்கு தந்தையை அறிமுகம் செய்து வைக்கிறாள். தாயின் வழியே தந்தை இரண்டாம் படியை பிடித்துக் கொள்கின்றார். அந்த மழலை வளர்கின்றது. வளர்ந்து ஒரு பருவத்தை அடைந்ததும் குருவை அறிமுகம் செய்து வைக்கிறார் தந்தை. இங்கு குழந்தையின் மூன்றாவது இடத்தை குரு நிரப்பிக் கொள்கின்றார். இவ்வாறு வந்த குழந்தையை கல்வி மூலம் பக்குவப்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை அறிமுகப் படுத்தி வைக்கின்றார் குரு. இதனை அழகுற எடுத்து இயம்புகின்றான் தழிழுக்கு அறம் வகுத்த பெரியோன் வள்ளுவன். "கற்றதனா லாய பயனேன்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” சிவத்திரு யாழவன் சிவவேதன் அறிவே வடிவான இறைவனின் பாதங்ளை தொழவில்லை எனின் ஒருவன் எவ்வளவு கற்றும் ஒரு பயனும் இல்லை என்று பொய்யா மொழிப் புலவன் கல்வியின் பயனை கடவுளின் காலில் வைத்துத் தொழுகின்றான். ஆக குருவின் கல்வி மூலம் அந்தக் குழந்தை இறைவனின் பாதத்தைப் பற்றுகின்றது. இத்தகு பெரும் பொருளை அறிமுகம் செய்யும் படிநிலை உறவுகளே தாய், தந்தை, ஆசான், இவற்றுள் மறக்கவும் தவிர்க்கவும் முடியாத உறவு எனில் அது தாய் உறவேயாகும். தாய் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இவ்வாறு பொதுவான உணர்ச்சி மிக்க அந்த தாயினை விஞ்சியவனாக தென்னாட்டு ஈசனை வர்ணிக்கின்றார் மாணிக்கத்தின் வாசகன். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது, இனியே? அன்பின் உச்சக் கட்டத்தில் மாணிக்கவாசகர் பாடுகின்றார். தன் பிள்ளைக்கு பசியெடுக்க அந்தக் குழுந்தை அழ ஆரம்பித்ததும் தாயானவள் பாலூட்டுவாளாம். ஆனால் ஈசன் தாயினை விட ஒரு படி மேலே சென்று நாம் கேட்க முதலே எம்மை ஆட்கொண்டு, எம் உடம்பினை உருக்கி, அதன் உள்ளே இருக்கின்ற ஞானமாகிய ஒளியை பெருகச் செய்து அழிவற்ற பேரின்பமாகிய தேனை சொரிவானாம்.தாயானவள் பாலூட்ட தாய்க்கு மேலே சென்று தேனினை சொரிகின்றான் தென்புலத்து இறையோன் என்று பக்தியை தாண்டி தாயிற் சிறந்த தத்துவனாக ஈசனை நிறுத்துகின்றார் மாணிக்கவாசகர். சாதாரணமாக யாராலும் தாயை விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் மாணிக்கவாசகர் தாயை விட ஈசனை உயர்த்தி போற்றுகின்றார் எனில் அது பக்தியின் எல்லையை தாண்டிய உச்சக் கட்டம் என்றே கருதலாம். இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் ஒரு விடயத்தை சொல்லிச் செல்கிறார். அந்த விடயம் யாதெனில் "ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய” இந்த வாசகம் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடே எனலாம். “உடம்பினை உருக்கி தென்புலத்து இறைவன் உள்ளே இருக்கும் ஒளியை பெருக செய்து ஆனந்தத்தை தருகின்றான்" என்று மாணிக்கவாசகர் நயம்பட உரைக்கின்றார். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு அழகான வர்ணத்தாளினால் சுற்றப்பட்ட ஒரு பரிசுப் பொதியை ஒருவர் உம்மிடம் தருகின்றார். பரிசுப் பொதி எவ்வளவு அழகானதாகவும் இருக்கலாம் ஆனால் அந்தப் பரிசுப் பொதியின் நோக்கம் வர்ணமயமான தாளில் இல்லை உள்ளே உள்ள பொருளில் தான் அடங்கியுள்ளது. பிரிக்காமல் விட்டால் உள்ளே உள்ள பொருள் பயன்படாமல் வீணாகிவிடும். அதுபோல தான் இந்த வாழ்க்கை உடல், குடும்பம், பணம் போன்ற வர்ணதாள்களால் சுற்றப்பட்டு இறைவன் எமக்கு தந்த பரிசே இந்த வாழ்வு. வெளியே இருக்கின்ற வாழ்வு தான் உண்மை என்று உள்ளே இருக்கும் ஞானத்தை பிரித்து பார்க்காமல் விட்டால் இந்த வாழ்வின் நோக்கமே வீணாகிவிடும். எனவே இப்படிப்பட்ட வாழ்வின் பரிசுப் பொதியுறையாகிய உடலினை உருக்கி உள்ளே இருக்கின்ற ஞானத்தை தென்புலத்து ஈசன் வெளியே கொண்டு வருகின்றான் என்று தாய்க்கு மேலாக தலைவனை உயர்த்திப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். இதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் தேனைச் சொரிந்து ஈசனானவன் என் பின்னே என்னைத் தொடர்ந்து வந்தானாம் என்று பாடுகின்றார். அத்தகு மறையாப் பொருளை செல்வமே என்று அன்பின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற மாணிக்கவாசகர் தொடர்ந்து செல்கின்றார் "நான் உனக்கே தெரியாமல் உன்பின்னே வந்து உன்னைப் பிடித்துக் கொண்டேன், ஈசனே இனி எங்கு சென்று ஒழிந்து கொள்வாய்” என்று தாய்மையின் சிறப்பினை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று தாயுமான ஈசனுக்கு வழங்குகின்றார். ஒரு குழந்தை தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றது. திடீரென்று தாய் எழுந்து செல்கின்றாள். உடனே குழந்தை தாயினை இறுகப் பற்றிப் பிடித்து "நான் உன்னை பிடித்து விட்டேன் நீ ஓடமுடியாது" என்று சொன்னதாம். அதுபோல இறைவனைத் தாயாகக் கருதி தன் உள்ளத்து உணர்ச்சிகளை கொட்டித்தீர்க்கின்றார் மாணிக்கவாசகர். திருக்குறள் என்றால் அதன் சிறப்பு ஈரடிக் குறளிலே தங்கியுள்ளது. திருப்புகழ் என்றால் அதன் சிறப்பு முருகனைப் பாடி முருகனின் புகழை பறைசாற்றுவதிலேயே உள்ளது. அதே வகையில் திருவாசகத்தை எடுத்தால் அதன் சிறப்பு வாசகங்களிலேயே உள்ளது. வாசகத்திற்கு வாசகம் உணர்ச்சியாழும் தாய்மை கடந்த பக்தியாலும் நிரம்பி வழிகின்றது. "திருப்புகழில் கரையாதோர் வேறு புகழில் கரையார், திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது முதுமக்கள் மொழிக் கூற்று. இத்தகு திருவாசக நாயகன் சிற்றம்பலநாதனை தாய்மைக்கும் மேலான படியில் வைத்து அனைத்து இலக்கியங்களும் தென்னாட்டு இறைவனின் சிறப்பைப் பாடுகின்றன. “நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே, தேனார் அமுதே, சிவபுரனே" திருச்சிற்றம்பலம்
தெ 02 கடந்த நூற்றாண்டில் தான் உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்க முடியும் என்ற விஞ்ஞான உண்மையை உலகம் அறிந்தது . ஆனால் விஞ்ஞானத்தையும் விஞ்சும் சக்தி மெஞ்ஞானத்துக்கு உண்டு என்பதை உணர்த்துவது கண்ணப்ப நாய னாரின் சரிதம் . பொத்தப்பி எனும் மலைநாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேட்டுவ குலத்தில் அவதரித்த நாயகனே திண்ணனார் . ஒரு நாள் தன் நண்பர்களான காடன் நாணனுடன் வேட்டைக்குச் சென்று பன்றி ஒன்றை வேட்டையாடினார் . அவர்கள் நடந்து ARKIVE பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்ததும் பன்றியைத் தீயில் வாட்டும் படி காடனிடம் கூறினார் . ஏறினார் . அங்கே மரங்களின் நடுவே சிவ லிங்கம் ஒன்றைக் கண்டார் . அச் சிவலிங்கத் தின் மீது சில பூக்களும் இலை தழைகளும் இருந்தன . காளத்தியப்பரின் மேல் பேரன்பு பெருகியது . இந்தக் கொடிய காட்டில் யார் இந்தப் பணியைச் செய்கிறார்கள் ? என்று கேட்க நாணனும் ஒரு வேதியர் தினமும் வந்து அன்னம் படைப்பதாகக் கூறினான் . இக்காட்டில் தனித்திருக்கும் இவருக்குப் பசிக்காதோ !? உணவு படைக்க வேணுமே ! என்று கூறி மலையை விட்டு குடு குடுவென இறங்கினார் . காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்தார் . அதில் நல்ல தசைகளை மட்டும் எடுத்து வைத்தார் . பின் ஆற்றிற்குச் சென்று நீரை வாயில் அடக்கிக் கொண்டார் . நேராக மலைக்கு ஓடினார் . ஊனுக்கு ஊன் ஊற்ற நோய் தீர்க்கும் அப்போது அருகிலிருந்த மலை என்பதை அறிந்திருந்த திண்ணனார் அம்பால் திண்ணனாரைக் கவர்ந்தது . மலை மீது தமது வலது கண்ணைத் தோண்டி எடுத்தார் . சிவலிங்கத்தின் மீது நீரை உமிழ்ந்தார் . தான் கொண்டு வந்த பன்றிக் கறியைப் படைத்தார் . நெடுநேரம் சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றார் . திண்ணனாரின் வினோத செயல்களைப் பார்த்த நாணனும் காடனும் தங்கள் தலைவருக்கு ஏதோ தீவினை தொற்றிவிட்டது என்று நினைத்து அவரின் தந்தையிடம் கூற ஓடினார்கள் . செயலைச் செய்பவர் யாரோ ? இதை நீரே பார்த்துக் கொள்ளும் என்று வேண்டினார் . கண் சுமந்த கடவுளுக்கே கண் தந்த கண்ணப்ப நாயனார் திண்ணனாரோ அவ்விடத்தைவிட்டு அசையவில்லை . இரவில் தனித்திருக்கும் சிவலிங்கத்திற்கு கொடிய விலங்குகளால் தீங்கு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி இரவு முழுவதும் காவல் காத்தார் . மறுநாள் காலையிலேயே மலையை விட்டு இறங்கினார் . காலையில் வழக்கம் போல பூசை செய்ய வந்த வேதியர் சிவலிங்கத்தின் முன்னிருந்த மாமிசத்தைப் பார்த்துப் பதறினார் . ஐயகோ ! யார் இந்தப் பாதகத்தைச் செய்தது !? என்று துடித்தார் . மாமிசத்தை அப்புறப்படுத்தி சிவலிங்கத்தை நீராட்டி பூக்கள் சூடி அன்னம் படைத்தார் . எம்பெருமானை வணங்கி அவ்விடம் விட்டகன்றார் . அன்றிரவு வந்த திண்ணனார் மறுபடியும் பன்றி இறைச்சியைப் படைத்தார் இரவில் காவல் காத்தார் . இவ்வாறு பல நாட்கள் நடந்தது . இறைவன் முன் தினமும் மாமிசம் இருப்பதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத வேதியர் ஒரு நாள் எம்பெருமானே ! உனக்கு மாமிசம் படைக்கும் தூய்மையற்ற திண்ணனாரின் அகத்தூ ய்மையை அகிலத்திற்கு உணர்த்தும் திருவிளை யாடலை அரங்கேற்ற எம்பெருமான் திருவுளம் கொண்டார் . சிவபெருமான் வேதியரின் கனவில் தோன்றி வேதியரே ! எனக்குத் தினமும் ஒருவன் மாமிசம் படைப்பது என் மேல் உள்ள அன்பினாலேயே ! அவனது அன்பை நீர் காண வேண்டும் என்றால் இன்றிரவு வந்து அவன் அறியாதபடி ஒளிந்திருந்து கவனிக்க வேண்டும் ! என்று அருளினார் . வேதியரும் இரவில் மலைக்குச் சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்திருந்தார் . வழக்கம் போல இரவில் மலையை நோக்கி வந்த திண்ணனாருக்கு வரும் வழியில் சில கெட்ட சகுனங்கள் தோன்றின . அவர் மனதில் பதட்டம் பற்றிக் கொண்டது . சிவலிங்கத்தை நோக்கி ஓடினார் அப்போது சிவலிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது . அதைக் கண்ட திண்ணனார் பதறினார் மனம் பதைபதைத்தார் . ஐயனே ! இந்த அடாத காரியத்தைச் செய்தவர் யார் ? என்று கூறிய படி அங்கும் இங்கும் ஓடினார் . தனது கையை வைத்துக் கண்ணை அடைத்தார் . பயனில்லை மலையில் இருந்த பச்சிலை மூலிகைகளைக் கண்ணில் ஒற்றினார் . ஆனாலும் உதிரம் நிற்கவில்லை . தென்னாடு சிவபெருமானின் பழுது பட்ட கண்ணை அகற்றி தனது கண்ணைப் பொருத்தினார் . இரத்தம் வடிவது நின்றது . திண்ணனாரின் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைத்தது . கண்ணப்ப நாயனார் ஆனால் சிறிது நேரத்திலேயே சிவலிங் கத்தின் மறு கண்ணில் இருந்தும் இரத்தம் வழிந்தது . அதைக் கண்ட திண்ணனார் கணமும் யோசிக்காமல் தன் மறுகண்ணையும் தோண்டி எடுக்க முன்வந்தார் . மறுகண்ணை யும் எடுத்துவிட்டால் பார்வை போய் விடும் கண்ணைச் சரியாக ஒற்ற முடியாது என்ப தால் தமது வலது காலை எடுத்து இறைவ னின் இடது கண்ணில் அடையாளத்திற்காகப் பதித்தார் . conte சிவத்திரு . ச.நித்தன் emle D80 Asthm www அம்பை எடுத்துக் கண்ணைத் தோண்ட முயல்கையில் நில்லு கண்ணப்ப ! நில்லு கண்ணப்ப ! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப ! என்று அசரீரி கேட்டது . திண்ணனார் திகைத்து நின்றார் . இறைவன் திண்ணனாருக்கு அருகாட்சியளித்தார் . அத்திருக்காட்சியை மரத்தின் பின்னால் மறைந்திருந்த வேதியர் கண்டு திண்ணனார் எம்பெருமான் மீது கொண்டிருந்த பேரன்பை உணர்ந்தார் பெருமகிழ்ச்சி கொண்டார் . சிவபெருமான் திண்ணனாரிடம் என் மீது பேரன்பு கொண்ட நீ எப்போதும் என் நிழலில் வீற்றிருப்பாயாக ! என்று பேரருள் புரிந்தார் . இறைவனுக்குக் கண் தந்த திண்ணனார் இறைவனாலேயே கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டு அழியாப் பேறு பெற்றார் . தை மாதத்தில் மான்றலை நாண்மீன் ( மிருகசீரிட நட்சத்திர ) தினத்தன்று கண்ணப்பருக்கு குருபூசை நடக்கிறது . காவியக் கண்ணப்பர் உலகத்தின் முதல் கண்தானம் !!! கும்பம் நல்லோரை மாசித் திங்கள் 2021 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ' மாதா பிதா குரு தெய்வம் ' என்பது முதுவாக்கு . இதனை தாய்க்கு பின் தந்தை தந்தைக்கு பின் குரு குருவிற்கு பின் தெய்வம் என்று விளக்குகின்றார்கள் தமிழ் மூத்தோர்கள் . ஒரு குழந்தை பிறக்கின்றது . அந்தக் குழந்தை தாயை முதலில் அடையாளம் கண்டு கொள்கின்றது . ஆகவே அந்தக் குழந்தையின் வாழ்வில் தாய் முதலாம் படியை பிடித்துக் கொள்கின்றாள் . அந்தத் தாய் தன் குழந்தைக்கு தந்தையை அறிமுகம் செய்து வைக்கிறாள் . தாயின் வழியே தந்தை இரண்டாம் படியை பிடித்துக் கொள்கின்றார் . அந்த மழலை வளர்கின்றது . வளர்ந்து ஒரு பருவத்தை அடைந்ததும் குருவை அறிமுகம் செய்து வைக்கிறார் தந்தை . இங்கு குழந்தையின் மூன்றாவது இடத்தை குரு நிரப்பிக் கொள்கின்றார் . இவ்வாறு வந்த குழந்தையை கல்வி மூலம் பக்குவப்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை அறிமுகப் படுத்தி வைக்கின்றார் குரு . இதனை அழகுற எடுத்து இயம்புகின்றான் தழிழுக்கு அறம் வகுத்த பெரியோன் வள்ளுவன் . கற்றதனா லாய பயனேன்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் சிவத்திரு யாழவன் சிவவேதன் அறிவே வடிவான இறைவனின் பாதங்ளை தொழவில்லை எனின் ஒருவன் எவ்வளவு கற்றும் ஒரு பயனும் இல்லை என்று பொய்யா மொழிப் புலவன் கல்வியின் பயனை கடவுளின் காலில் வைத்துத் தொழுகின்றான் . ஆக குருவின் கல்வி மூலம் அந்தக் குழந்தை இறைவனின் பாதத்தைப் பற்றுகின்றது . இத்தகு பெரும் பொருளை அறிமுகம் செய்யும் படிநிலை உறவுகளே தாய் தந்தை ஆசான் இவற்றுள் மறக்கவும் தவிர்க்கவும் முடியாத உறவு எனில் அது தாய் உறவேயாகும் . தாய் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது . இவ்வாறு பொதுவான உணர்ச்சி மிக்க அந்த தாயினை விஞ்சியவனாக தென்னாட்டு ஈசனை வர்ணிக்கின்றார் மாணிக்கத்தின் வாசகன் . பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே ! சிவபெருமானே ! யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே ? அன்பின் உச்சக் கட்டத்தில் மாணிக்கவாசகர் பாடுகின்றார் . தன் பிள்ளைக்கு பசியெடுக்க அந்தக் குழுந்தை அழ ஆரம்பித்ததும் தாயானவள் பாலூட்டுவாளாம் . ஆனால் ஈசன் தாயினை விட ஒரு படி மேலே சென்று நாம் கேட்க முதலே எம்மை ஆட்கொண்டு எம் உடம்பினை உருக்கி அதன் உள்ளே இருக்கின்ற ஞானமாகிய ஒளியை பெருகச் செய்து அழிவற்ற பேரின்பமாகிய தேனை சொரிவானாம்.தாயானவள் பாலூட்ட தாய்க்கு மேலே சென்று தேனினை சொரிகின்றான் தென்புலத்து இறையோன் என்று பக்தியை தாண்டி தாயிற் சிறந்த தத்துவனாக ஈசனை நிறுத்துகின்றார் மாணிக்கவாசகர் . சாதாரணமாக யாராலும் தாயை விட்டுக் கொடுக்க முடியாது . ஆனால் மாணிக்கவாசகர் தாயை விட ஈசனை உயர்த்தி போற்றுகின்றார் எனில் அது பக்தியின் எல்லையை தாண்டிய உச்சக் கட்டம் என்றே கருதலாம் . இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் ஒரு விடயத்தை சொல்லிச் செல்கிறார் . அந்த விடயம் யாதெனில் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய இந்த வாசகம் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடே எனலாம் . உடம்பினை உருக்கி தென்புலத்து இறைவன் உள்ளே இருக்கும் ஒளியை பெருக செய்து ஆனந்தத்தை தருகின்றான் என்று மாணிக்கவாசகர் நயம்பட உரைக்கின்றார் . எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு அழகான வர்ணத்தாளினால் சுற்றப்பட்ட ஒரு பரிசுப் பொதியை ஒருவர் உம்மிடம் தருகின்றார் . பரிசுப் பொதி எவ்வளவு அழகானதாகவும் இருக்கலாம் ஆனால் அந்தப் பரிசுப் பொதியின் நோக்கம் வர்ணமயமான தாளில் இல்லை உள்ளே உள்ள பொருளில் தான் அடங்கியுள்ளது . பிரிக்காமல் விட்டால் உள்ளே உள்ள பொருள் பயன்படாமல் வீணாகிவிடும் . அதுபோல தான் இந்த வாழ்க்கை உடல் குடும்பம் பணம் போன்ற வர்ணதாள்களால் சுற்றப்பட்டு இறைவன் எமக்கு தந்த பரிசே இந்த வாழ்வு . வெளியே இருக்கின்ற வாழ்வு தான் உண்மை என்று உள்ளே இருக்கும் ஞானத்தை பிரித்து பார்க்காமல் விட்டால் இந்த வாழ்வின் நோக்கமே வீணாகிவிடும் . எனவே இப்படிப்பட்ட வாழ்வின் பரிசுப் பொதியுறையாகிய உடலினை உருக்கி உள்ளே இருக்கின்ற ஞானத்தை தென்புலத்து ஈசன் வெளியே கொண்டு வருகின்றான் என்று தாய்க்கு மேலாக தலைவனை உயர்த்திப் பாடுகின்றார் மாணிக்கவாசகர் . இதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் தேனைச் சொரிந்து ஈசனானவன் என் பின்னே என்னைத் தொடர்ந்து வந்தானாம் என்று பாடுகின்றார் . அத்தகு மறையாப் பொருளை செல்வமே என்று அன்பின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற மாணிக்கவாசகர் தொடர்ந்து செல்கின்றார் நான் உனக்கே தெரியாமல் உன்பின்னே வந்து உன்னைப் பிடித்துக் கொண்டேன் ஈசனே இனி எங்கு சென்று ஒழிந்து கொள்வாய் என்று தாய்மையின் சிறப்பினை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று தாயுமான ஈசனுக்கு வழங்குகின்றார் . ஒரு குழந்தை தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றது . திடீரென்று தாய் எழுந்து செல்கின்றாள் . உடனே குழந்தை தாயினை இறுகப் பற்றிப் பிடித்து நான் உன்னை பிடித்து விட்டேன் நீ ஓடமுடியாது என்று சொன்னதாம் . அதுபோல இறைவனைத் தாயாகக் கருதி தன் உள்ளத்து உணர்ச்சிகளை கொட்டித்தீர்க்கின்றார் மாணிக்கவாசகர் . திருக்குறள் என்றால் அதன் சிறப்பு ஈரடிக் குறளிலே தங்கியுள்ளது . திருப்புகழ் என்றால் அதன் சிறப்பு முருகனைப் பாடி முருகனின் புகழை பறைசாற்றுவதிலேயே உள்ளது . அதே வகையில் திருவாசகத்தை எடுத்தால் அதன் சிறப்பு வாசகங்களிலேயே உள்ளது . வாசகத்திற்கு வாசகம் உணர்ச்சியாழும் தாய்மை கடந்த பக்தியாலும் நிரம்பி வழிகின்றது . திருப்புகழில் கரையாதோர் வேறு புகழில் கரையார் திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமக்கள் மொழிக் கூற்று . இத்தகு திருவாசக நாயகன் சிற்றம்பலநாதனை தாய்மைக்கும் மேலான படியில் வைத்து அனைத்து இலக்கியங்களும் தென்னாட்டு இறைவனின் சிறப்பைப் பாடுகின்றன . நாயில் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே திருச்சிற்றம்பலம்